siruppiddy

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்


மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும்.
கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை

அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன.

நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

* கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

* உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.

* மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை

உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.
நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.

* பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின்

 உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.
* இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை

, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.
கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.


ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஆசாராமின் ஆசிமத்திற்குள் கருக்கலைப்பு மையம்!


 
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம் செயல்பட்டுவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆசாராம் பாபு மீது தொடர்ந்து பல பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்களை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், ஆசாராமின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக குஜராத் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் கூறுகையில், நான் ஆசாராமின் ஆசிரமத்தில் 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தங்கியிருந்தேன்.

என்னை ஆசாராம் 2001ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார், அதிலிருந்து என்னை அடிக்கடி உடல் ரீதியாக துன்புறுத்திவந்தார்.
மேலும் அவரின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் இருந்தது. ஆசாராமல் கர்ப்பமாகும் பெண்களுக்கு அங்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்படும் என்றும் இதனை ஆசிரமத்தின் மேற்பார்வையாளரான துருவ்பெண் கவனித்துக்கொள்வார் எனவும் கூறியுள்ளார்.
 

வியாழன், 17 அக்டோபர், 2013

ஆனையிறவு வரை பரீட்சார்த்த ரயில்


ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் இடம் பெற்று வருகின்றன.

ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுக் கடந்த மாதம் 14 ஆம் திகதி, கிளிநொச்சி வரை ரயில் சேவை விரிவாக்கப்பட்டது.

இதன் பின்னர் ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சியிலிருந்து. ஆனையிறவு வரையான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதனையடுத்து பரீட்சார்த்தமான ரயில் சேவை கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பளை வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் அந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

திங்கள், 14 அக்டோபர், 2013

இரண்டு பிள்ளைகளுடன் யாழ்.தேவியின் முன் பாய்ந்த தாய்


p'0கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம்  பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக மத்திய புகையிரதக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளார் இதன்போது தாயும் ஒரு மகளும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் தப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் வெயங்கொட, கீனவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலமும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதன், 2 அக்டோபர், 2013

இன்று காந்­தி­ய­டி­களின் பிறந்த தினம்


கிரேக்க நாட்டில் ‘தயா­ஐயன்’ என்­றொரு ஞானி இருந்தான். அவ­னிடம் ஒரு நாய் இருந்­தது. பகலில் கூட அவன் விளக்கைப் பிடித்து மனி­தரைத் தேடுவான். மனி­தரைப் பார்க்கப் பார்க்க தனது நாயிடம் அதிக அன்பு உண்­டா­கின்­றது’ என்றான். ‘பிறகு யார்தான் மனிதன்?’ என்று பிளேட்டோ கேட்டான். ‘ அதோ ஒரு மனிதன்’ என்று காட்­டினான். ஆம்! அவனே சோக்­ரதன். அதே­போன்று பட்டம், பதவி, தம்­பட்­டங்­க­ளுக்­கி­டையே ஒரு தூய தியா­கி­யாக, மேதை­க­ளுக்­

கெல்லாம் மேதை­யா­கவும், மனித குலத்தின் மாண்­பு­மிகு சின்­ன­மா­கவும், ஆசி­யா­விலே தலை­சி­றந்த அர­சியல் அறிவாளி­யா­கவும், சான்­றோ­னா­கவும், இந்­திய நாட்டின் நன் மக்­களுள் ஒரு­வ­ரா­கவும், சாணக்­கி­ய­ரா­கவும் விளங்­கி­யவர் ‘அண்ணல் காந்­தி­ய­டிகள்’. இவரின் பிறந்த தினம் இன்று ஒக்­டோபர் 2ஆம் திக­தி­யாகும்.

பழம் பெருமை மிக்க நம் பாரத நாடு எத்­த­னையோ இன்­னல்­க­ளுக்கு இலக்­காகி விளங்­கிய பொழுது அதன் விடு­த­லைக்­காக, சுதந்­தி­ரத்­திற்­காக தமது உயிரை துச்­ச­மென நினைத்து, இந்­திய மக்கள் சொல்­லொணா துன்­பங்­க­ளுக்கும், துய­ரங்­க­ளுக்கும் மத்­தியில் அளப்­பெரும் தியா­கத்தை செய்து நாட்டை வெள்­ளை­ய­ரு­டைய ஆதிக்­கத்தில் இருந்து காப்­பாற்­றி­னார்கள்.

எத்­த­னையோ தலை­சி­றந்த அறி­ஞர்கள், கல்­வி­மான்கள், அர­சி­யல்­வா­திகள், மாமே­தைகள் இந்­திய நாட்டின் விடு­த­லைக்­காக பாடு­பட்ட பொழு­திலும் ‘நான் ஒரு இந்­தியன்’ என்று பெரு­மையை தேடித் தந்­தவர் காந்­தி­ய­டிகள் ஆவார்.
இந்­தி­யாவை வெள்­ளை­யர்கள் அடக்கி ஆண்ட பொழுது மக்கள் விழித்­தெ­ழுந்­தனர். ‘வெள்­ளை­யனே வெளி­யேறு’ என்று கோஷம் எழுப்­பினர். தமி­ழ­கத்­திலே பார­தியார், இரா­ஜ­கோ­பா­லச்­சா­ரியார் போன்ற பெரு­மக்கள் வீறு­கொண்­டெ­ழுந்­

தனர். ராஜா ஜீ சென்­னை­யிலே சட்டக் கல்­லூரி மாண­வ­ராகப் பயின்று கொண்­டி­ருந்த பொழுது அவ­ரது சிந்­த­னைகள் எல்லாம் இந்­திய நாட்டின் மக்­களைப் பற்­றியும், அடி­மைப்­பட்டுக் கிடந்த இந்­தி­யாவின் இழி­நிலை பற்­றி­யுமே எண்­ண­மி­ட­லா­யின. இக்­கால கட்­டத்­திலே நாட்­டிலே விடு­த­லை­வேட்கை தளிர் விட்­டி­ருந்த காலம், ஆத்­மீ­கத்­தோடு அர­சி­ய­லையும் கலந்து வாழ்ந்த அற்­புதப் பிறவி காந்தி மகானின் அரு­ம­ருந்­தன்ன சீட­ரா­கவும், சான்­றோ­னா­கவும், சாணக்­கி­ய­ரா­கவும் விளங்­கி­ய­தோடு இந்­திய நாட்டின் விடு­த­லைக்­காக காந்­தி­ய­டி­க­ளோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்.

மோகன்தாஸ் கரம்சண்ட் காந்தி அடிகள் 1915ஆம் ஆண்டு அர­சி­யலில் பிர­வே­சித்தார். இதன் கார­ண­மாக, வழக்­க­றி­ஞ­ராக விளங்­கிய காந்­தி­ய­டிகள் தமது தொழிலைத் துறந்து, குடும்­பத்தை மறந்து, அர­சி­யலில் மிகவும் ஈடு­பாடு கொண்டு பல இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் இந்­திய நாடு சுதந்­திரம் அடை­வ­தற்­காகப் பற்­பல தியா­கங்­களைச் செய்தார்.
காந்­தி­ய­டிகள் தென் ஆபி­ரிக்­காவில் வழக்­க­றி­ஞ­ராக தமது தொழிலைச் செய்து கொண்­டி­ருந்த பொழுது பல இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­ய­வ­ராக வாழ்ந்து கொண்­டி­ருந்தார்.

ஒரு சமயம் ரயில் வண்­டியில் பயணம் செய்து கொண்­டி­ருந்த பொழுது இவர் கறுப்பு இனத்தைச் சேர்ந்­தவர் என்று அவ­ரு­டைய பாத­ணி­யையும், பொருட்­க­ளையும் வெளியே தூக்கி எறிந்­த­தோடு, காந்தி அடி­க­ளையும் வண்­டி­யி­லி­ருந்து தூக்கி எறிந்து விட்­டனர் வெள்­ளை­யர்கள். இதன் கார­ண­மாக வெள்­ளை­யரின் ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­தலை பெறவும், நாடு சுதந்­திரம் அடை­யவும் திட­சங்­கற்பம் பூண்டார்.

காந்­தி­ய­டிகள் நாடு சுதந்­திரம் அடை­வ­தற்­காக சத்­தியாக் கிர­கத்தை மேற்­கொண்டார். அந்­நி­யரின் அடக்­கு­மு­றையை ஒத்­து­ழையா இயக்­கத்தின் மூலம் செய்து காட்­டினார். தமது அமை­தி­யான, எவ­ருக்கும் தீங்கு விளை­விக்­காத மனப்­பான்மை மூலம் பிரித்­தா­னிய சாம்­ராட்யத்தை தலை­கு­னிய வைத்தார். இதன் கார­ண­மாக வெள்­ளை­யர்கள் திகைப்­ப­டைந்­தனர். என்ன செய்­வது என்று தெரி­யாது தடு­மா­றி­னார்கள்.

இவை யாவற்­றிற்கும் கார­ண­மாக அமைந்­தது இவர் சிறு வய­திலே கண்­டு­க­ழித்த அரிச்­சந்­திர நாட­க­மே­யாகும். இவ் நாட­கத்­திலே சொல்­லப்­பட்ட வச­னங்கள் இவரை மிகவும் கவர்ந்­தன. அதா­வது, ‘பதி இழக்­கிலும், பாலனை இழக்­கினும், கதி இழக்­கினும், கட்­டுரை இழக்­கிலேன்? கட்­டுரை என்­பது வாய்மை.

இதுவே காந்­தி­ய­டிகள் இந்­திய நாடு சுதந்­திரம் அடை­வ­தற்கு தூண்­டு­கோ­லாக அமைந்­தது. அதுவே அவரின் வெற்­றியும் ஆகும். மற்­றை­யது மகா­பா­ர­தத்தில் கிருஷ்ண பக­வானால் அருச்­சு­ன­னுக்குப் போதிக்­கப்­பட்ட ‘பக­வத்­கீ­தை­யாகும்’ எத்­த­கைய பிரச்­சி­னைகள் வந்த பொழுதும், கட­மையில் நின்று வெளி­யேறக்

கூடாது. பிரச்­சி­னைகள் வந்­தேதான் ஆகும். ஆயினும், ‘பிரச்­சி­னை­க­ளைத்­தக்க முறையில் ஆராய்ந்து, தீர்வு காண்­பதே சிறந்­தது என்­பதை காந்­தி­ய­டிகள் தமது வாழ்க்­கையில் எந்தச் சூழ்­நி­லை­யிலும் தவ­றாது கடைப்­பி­டித்தார். இது மட்­டு­மன்றி தமது எதி­ரி­களின் எண்­ணங்­களுக்கும், சிந்­த­னை­க­ளுக்கும் மதிப்­ப­ளித்தார். தன்னை எதிர்த்­த­வர்­க­ளையும் சாதுரி­ய­மாக வெல்ல முடியும் என்­பதை நன்­க­றிந்­தி­ருந்தார்.

ஒரு­ச­மயம் புதுடெல்­லியில் அமைந்­தி­ருந்த ‘Vicerory” மாளி­கைக்கு LORD ERWIN என்­ப­வரை சந்­திக்க காந்தி அடிகள் சென்­றி­ருந்தார். இதை அன்­றைய கால­கட்­டத்தில் இருந்த பிரித்­தா­னிய பிர­தமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் மிகவும் கடு­மை­யாக விமர்­சித்தார். அரை நிர்­வா­ணத்­தோடு இருக்கின்ற பாதி­ரி­யா­ரா­கிய காந்தி,

 பிரித்­தா­னிய சாம்­ராச்­சி­யத்தின் பிர­தி­நி­தி­யாக இருக்­கின்ற ‘Vicerory” அரை நிர்­வா­ணத்­தோடு காண்­ப­தற்குச் செல்­கின்றார் என்று மிகவும் கடு­மை­யாகச் சாடினார். அதற்கு காந்தி அடிகள் ‘வின்ஸ்ரன் சேர்ச்சிலுக்கு’ கடித மூலம் கூறி­யது என்­ன­வெனில், நீங்கள் கூறி­யதை இட்டு நான் மட்­டற்ற மகிழ்ச்சி அடை­கிறேன். இதை நான் தவ­றாது என்றும் கடைப்­பி­டிக்க நினைத்தேன். இதை இன்று நான் செய்து காட்­டி­யுள்ளேன். ஆகை­யி­னாலே நீங்கள் கூறி­யது உண்­மை­யி­லேயே ஒரு பாராட்­டாக நான் மதிக்­கிறேன் என்று கூறி ‘வின்ஸ்ரன் சேர்ச்­சிலின்’ வாயை அடக்­கினார்.

இது­மட்­டு­மன்றி ஒரு சமயம் காந்தி அடிகள் நாட்டின் அமை­திக்கு இன்னல் விளை­வித்­த­தாகக் கூறி கோட்டில் ஆஜ­ரா­கு­வ­தற்­காக அழைத்துச் செல்­லப்­பட்டார். அச்­ச­மயம் கோட்டில் இருந்த அனை­வரும் காந்­தியைக் கண்டு எழுந்து மரி­யாதை செய்­தனர். இதைக் கண்­ணுற்ற வெள்­ளைக்­கார நீதி­ப­தியும் எழுந்து அவ­ருக்கு மரி­யாதை செய்ய நேரிட்­டது. ஒரு கைதிக்கு நீதி­பதி, அதுவும் வெள்­ளைக்­கார நீதி­பதி மரி­யாதை செய்­தது இது­வே­யாகும்.

வழக்கை விசா­ரித்த நீதி­பதி காந்­தியை நோக்கி கூறி­யது என்னவெனில், ‘நீங்கள் மக்­களின் மனதில் ஒரு ஞானி­யாக கட­வு­ளாகக் கரு­தப்­ப­டு­வதை நான் அறிவேன். ஆயினும் கூட சட்­டத்தின் படி உங்­க­ளுக்கு ஆறு­மாதக் கடும் தண்­டனை வழங்­கு­கிறேன் என்று தமது தீர்ப்பில் வாசித்தார். அப்­போது காந்தி அடிகள் கூறினார், ‘கனம் நீதி­பதி அவர்­களே’ நீங்கள் எனக்கு குறைந்த தண்­ட­னையை வழங்­கி­யி­ருக்­கி­றீர்கள் என்று’.

அப்­போது கோட்டில் கூடி­யி­ருந்த மக்கள் கண் கலங்கி அழத் தொடங்­கி­னார்கள். இவர்­களை நோக்கி, ‘காந்­தி­ய­டிகள் கூறி­ய­தா­வது, ‘மண­ம­களை, மண­மகன் முத­லி­ரவு சந்­திக்கப் போவது போன்று, சிறைச்­சா­லைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி மக்­களை சாந்­த­ம­டையச் செய்தார். ஆகை­யி­னாலே காந்­தி­மகான் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் சல­ன­ம­டை­ய­வில்லை. எதையும் தாங்கும் ‘செயல் வீர­னா­கவே’ வாழ்ந்தார்.

இன்னும் ஒரு சமயம் உல­கப்­புகழ் ரவிந்­தி­ரநாத் தாகூருக்கும் காந்தி அடி­க­ளுக்கும் முக்­கிய சம்­பா­ஷணை நடை­பெற்­றது. அப்­போது ரவிந்­தி­ரநாத், ‘உலக இயற்கை அழகை விப­ரித்தார்’ இதை நீங்கள் உலக மக்­க­ளுக்குக் கூற வேண்டும் என்று காந்­தியைக் கேட்டுக் கொண்டார். அதற்கு காந்தி அடிகள் ‘இவற்றை எல்லாம் எப்­படி ஒரு வேளை சாப்­பாட்­டுக்குக் கஷ்­டப்­ப­டு­கின்ற மக்­க­ளுக்கு என்னால் கூற முடியும் என்று சொல்லி ரவிந்திரநாத் தாகூரின் பேச்சை அடக்­கினார்.

காந்தி அடிகள் இந்­தியா எக்­கா­ர­ணத்தைக் கொண்டும் பிரிக்­கப்­ப­டக்­கூ­டாது என்று கூறிய பொழுது, ‘ஜின்னா’ எப்­ப­டி­யா­கிலும் பிரிக்­கப்­பட்டே ஆக வேண்டும் என்று தீவிர கொள்­கை­யோடு நின்றார். அச்­ச­மயம் Mount Batten இந்­தி­யா­விற்கு Viceroy ஆக அனுப்­பப்­பட்டு நாடு பிரிக்­கப்­பட்­டது.
இதை காந்தி அடிகள் வன்­மை­யாகக் கண்­டித்தார். ஆயினும் சில தீவிர இளை­ஞர்கள் காந்­தியின் கொள்­கையை ஆத­ரிக்­காது அவரைக் கொலை செய்­வ­தற்கு ஆயத்­த­மா­னார்கள். காந்தி அடிகள் பிரார்த்­த­னைக்குச் செல்லும் போது, ‘கோட்சே’ என்­பவள் காந்தி அடி­களை நோக்கி ரிவோல்­வரால் சுட்டுக் கொன்றான்.

இதை கேள்­விப்­பட்ட உலக மக்கள் கலங்­கி­னார்கள். கண்ணீர் விட்­டார்­களே. அன்­றைய கால­கட்­டத்தில் இந்­திய பிர­த­ம­ராக இருந்த, ‘ஜவ­ஹர்லால் நேரு’ தமது உரையில் கூறி­ய­தா­வது, ‘இந்­திய நாட்டின் விலை­ம­திக்க முடி­யாத தந்தை’ காந்­தி­ய­டிகள் நம்மை விட்டுப் பிரிந்­து­விட்டார். ஆயினும் அவர் உண்­

மை­யி­லேயே ஒரு ‘அம­ர­தீபம்’. எதிர்­வரும் காலத்தில் காந்தி அடிகள் மக்­களின் மன­திலே என்றும் அழி­யாத தீப­மாக விளங்­குவார் என்று தமது உரை­யிலே கூறினார்.
காந்­தி­ய­டிகள் தரு­மமே நல்­லாட்­சியின் அஸ்­தி­வாரம் என்று முடி­வான கருத்­துடன் அர­சி­யலைத் தூய்மை செய்தவர்.

ஜனநாயகம் என்பது அனைவரினதும் ஆத்மீக பலத்தையே சார்ந்தது என்று முற்றுணர்வுடன் சிறுபான்மையினரின் நியாயமான நலன்களுக்காகப் போராடினார். ஏழை மக்கள், குறைந்த சாதியினர் யாவரையும் கடவுளின் பிள்ளைகள் என மதித்து வாழ்ந்ததோடு, தனிமனிதர் ஒவ்வொருவரின் சிறப்புப் பண்பும் பூரணமாக பொலிவுற்று அதன் விளைவாகத் தேசம் முழுவதும் சுபீட்சம் காண வேண்டும் என்ற உணர்வில் நிலைத்து நின்று வாழ்ந்தவர் காந்தி அடிகள்.

காந்தியைச் சரியாகப் புரிந்துகொள்ளாத வர்கள் அல்லது வேண்டுமென்றே சுயநல னுக்காக அவரைச் சரியாக புரிந்துகொள்ள மறுப்பவர்கள், அவரை எதிர்த்தார்கள். காந்தி அடிகள் எதிர்ப்புக்களினின்று எட்டாத தொலைவில் நின்று பணி புரிந்தார். எந்தக் கருமேகமும் தொட முடியாத ஹிமாலயப் பனிமுடியாக, அவர் பரம நிர்மலமாக மகோன்னதமாக வாழ்ந்த உலகப் பேரொளி

செவ்வாய், 1 அக்டோபர், 2013

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சபிரா

 
  நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி.சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் முதலாவது பிறந்தநாள்.01.10. 2013 இன்று வெகுவிமர்சாயாககொண்டாடுகின்றார்இவரைஅன்பு அப்‌பாஅம்மா
அப்‌பப்‌பா அப்‌பம்மா ஐய்யாமார் அம்மம்மாமார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மாமா மாமி மார் §
மச்சான் மச்சாள் மார் மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார்அருள்புரிய. பல் கலைகளும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவற்கிரி இணையங்களும் உறவு இணைய ங்களும்{ஐய்யா குடும்பம் சுவிஸ்}
 வாழ்த்துகின்றோம்.
 

மகளை கற்பழித்த தந்தைக்கு 25 வருட சிறைத்தண்டனை


பாகிஸ்தானில் 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 25 வருட சிறை தண்டனை மற்றும் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து லாகூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாகூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள பாடாபூரில் 2012ம் ஆண்டில் கூலித் தொழிலாளியான ரஹமத் அலி, தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரமó செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு லாகூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பை திங்கள்கிழமை வழங்கிய நீதிபதி குலாம் அப்பாஸ் சியால், ரஹமத் அலிக்கு 25 வருட சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதம்