siruppiddy

சனி, 30 ஏப்ரல், 2016

ஓர் எச்சரிக்கை வெளிநாட்டு மோகம் உள்ளவர்களுக்கு !

சுவிஸ்க்கு செல்ல முற்பட்டு துருக்கியில் கடத்தல்காரர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு மரணமான முல்லைத்தீவைச் சேர்ந்த காண்டீபனின் சடலம் இன்று முல்லைத்தீவுக்கு 
கொண்டுவரப்பட்டுள்ளது.
காண்டீபன் இறந்ததைக் கேட்டு அவரது தாயாரும் அதிர்ச்சியில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு ஆசையில் தவறான நபர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படுபவர்களுக்கு இச் செய்தி சமர்ப்பணம் இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்! 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மே தினத்தில் 18 கூட்டங்களும் 17 ஊர்வலங்களும் நிகழ்வு !

உழைக்கும் மக்களை கௌரவப்படுத்தும் முகமாக சிறீலங்காவின் அனைத்து இடங்களிலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது கிடைத்திருக்கும் தகவலினடிப்படையில் 18 இடங்களில் கூட்டங்களும் 17 இடங்களில் ஊர்வலங்களும் நடைபெறப் போவதாகவும் இந்த இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு, காலி உட்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளதுடன் இதுவரை 6500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி,
சிறீலங்கா சுதந்திரக்கட்சி
‘நாட்டை வெல்லும் கரம் உலகம் வெல்லும் நாளை’ என்ற தொனிப்பொருளில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து கால சமன விளையாட்டு மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு மேதினக் கூட்டத்தை நடாத்தவுள்ளன.
ஐக்கியதேசியக் கட்சி
சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டத்தை நடாத்தவுள்ளது.
‘அர்ப்பணிக்கும் மக்களுக்கு புதிய நாடு’ எனும் தொனிப்பொருளில் தொழிலாளர் தினம் அனுட்டிக்கப்படவுள்ளதுடன், ஊர்வலம் மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்திலிருந்து காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் கொழும்பு பி.ஆர். சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த பேரணியானது, தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க பாடசாலை முன்பாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகிந்த ஆதரவு அணி
மகிந்த ஆதரவு அணியின் மேதினக் கூட்டம் கிருலப்பனையில் நடைபெறவுள்ளது. இதில் 100 தொழிற்சங்கங்களும் 10 கட்சிகளும் பங்குபற்றவுள்ளதோடு மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 16 பேர் உரையாற்ற உள்ளனர். ஊர்வலம் சாலிகா விளையாட்டரங்கில் ஆரம்பித்து கிருலப்பனை மைதானத்தை அடையவுள்ளது.
ஐக்கிய சோசலிசக் கட்சி
ஐக்கிய சோஷலிச கட்சியின் மே தின கூட்டம் கொஸ்கஸ் சந்தியில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
சுயாதீன தொழிற்சங்க கூட்டணி
சுயாதீன தொழிற்சங்க கூட்டணியின் மே தின கூட்டம் முத்தையா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக்கூட்டம் பருத்தித்துறையில் தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடை பெற்றது 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 28 ஏப்ரல், 2016

மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு!:

புதுச்சேரியில் சமீபத்தில் திராவிட விடுதலைக் கழக அமைப்பினர் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.எஸ்.குமார்.
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் படி மே 1-ம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வையும், ஜூலை 24-ம் தேதி 2-ம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த உத்தரவிட்டதோடு ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிவை வெளியிடவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் உச்ச நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கல்வி மையங்கள் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இதை தடுக்கும் நோக்கத்துடன் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் இணைந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்த முடிவு செய்தன. 
இதை எதிர்த்து, வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அரசியல் சட்டத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை பறிபோவதாக அவர்கள் வாதிட்டனர்.
இந்த வாதங்களை கேட்ட அப்போதைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், நீதிபதிகள் அனில் தவே, விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு, தேசிய நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மாணவர் சேர்க்கை என்பது கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையின் ஒரு பகுதி. எனவே, தேசிய நுழைவுத்தேர்வு நடத்தி அவர்களது உரிமையைப் பறிப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தனர். இதில் ஒரு நீதிபதி இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவு என்ற அடிப்படையில் இத்தீர்ப்பு 
அமலுக்கு வந்தது.
இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டபோது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்று, தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு உத்தரவினால் மாநிலம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் தேர்வுகள் கேள்விக்குறியாகியுள்ளன. 
இந்தத் தீர்ப்பினை அடுத்து நாடு முழுதும் சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு எழுதுவார்கள் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





புதன், 27 ஏப்ரல், 2016

பதின்ஐந்து கிராம் ஹெரோயினுடன் சிறை அதிகாரி கைது!

ஹெரோயின் பதின்ஐந்து கிராமுடன் சிறைச்சாலை அதிகாரியொருவரும், பாதால உலக உறுப்பினர் ஒருவரும் பண்டாரகம, விதாகம தெல்கஸ்வந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மீண்டும் விரைவில் ஆரம்பமாகும் காங்கேசன்துறை சிமேந்து தொழிற்சாலை

 
யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் தலைமையில், இன்று இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெகு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எனவும் அமைச்சர்
தெரிவித்தார்.
யாழ். கச்சேரியில் இந்த உயர்மட்ட மாநாடு நடந்து முடிந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், "மாநாட்டில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சூழலியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களின் கருத்துக்களை உள்வாங்கி அதனடிப்படையில் இந்தத் தொழிற்சாலைமீள ஆரம்பிக்கப்படும்" - என்றார். சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பாட்டாலும் இந்தப் பிரதேசத்தில் சுண்ணாம்புக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படமாட்டது.
அத்துடன் வேலைவாய்ப்பு வழங்கும்போது காங்கேசன்துறை மக்களுக்கும், அதன் பின்னர் யாழ்ப்பாண மக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்தத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மாகாண சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் முழுமையான அறிக்கைகளும், சூழல்தாக்க அறிக்கை, சமூகத்தாக்க அறிக்கை ஆகியவையும் பெறப்படும் என்றும்  அமைச்சர்   கூறினார்.
அத்துடன் வடக்கு மாகாண சபையின் ஆலோசனைகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களும் பெறப்பட்ட பின்னரே அமைச்சரவைக்கு இது தொடர்பில் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதன் மூலம், பல்லாயிரக்கணக்கானோர்க்கு தொழில் வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், அங்கஜன்
இராமநாதன், வடக்கு 
மாகாண சபை அமைச்சர்காளான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன், சீமெந்து கூட்டுத்தாபனத் தலைவர் ஹுசைன் பைலா ஆகியோரும் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றபோதும், வெளிப்படையாகவும், மனந்திறந்தும் அவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தமை குறித்து அமைச்சர் தனது நன்றிகளையும் தெரிவித்தார். -
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 


ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

உணவுக் கடை ஒன்றில் பூஞ்சனம் பிடித்த வட்டிலப்பம் !

காத்தான்குடியில் சுகாதாரத்திற்கு தீங்குவிளைவிக்கும் வகையில் பூஞ்சனம் பிடித்த வட்டிலப்பத்தை விற்பனை செய்த வெதுப்பக வர்த்தகர் ஒருவருக்கெதிராக நாளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பிரபல வெதுப்பகமொன்றில் நேற்று கொள்வனவு செய்யப்பட்ட வட்டிலப்பத்திலேயே இவ்வாறு பூஞ்சனம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் சுகாதார அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து, வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

துர்முகி வருடம் நாளை மாலை 6.36 மணிக்கு உதயமாகிறது

பிறகின்ற தமிழ், சிங்கள துர்முகி வருடத்தில், சகலரது வாழ்விழும் கஷ்டங்கள் விலகி, மகிழச்சியும், சமாதானமும் நிறைந்த வருடமாக அமைய வேண்டும் என எமது இணையங்கள் வாழ்த்துக்களை 
கூறிநிற்கின்றது   .
மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் 13.04.2016 அன்று மாலை மலரவிருக்கின்றது.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13ஆம் திகதி இரவு 6.36 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. அன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம் இலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராட வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
திருக்கணித பஞ்சாங்கமோ 13ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு பிறப்பதாக கணித்துள்ளது. அன்று பிற்பகல் 3.48 மணி தொடக்கம் இரவு 11.48 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசுக்கு வேப்பம் இலையும் காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ்- வருஷமாகும். இந்த புத்தாண்டு 13.04.2016 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 9 ஏப்ரல், 2016

குளியல் அறைக்குள் பாம்பு தீண்டியதில் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு அளம்பில் பிரதேசத்தில் இன்று மதியம் வெப்பம் தாங்க முடியாமல் பாம்பு ஒன்று முதியவர் ஒருவரின் குளியல் அறைக்குள் சென்று படுத்திருந்தது.
 அதை அறியாத முதியவர் குளிக்கச் சென்ற போது பாம்பு அவரைத்தீண்டியுள்ளது. அளம்பில் பிரதேசத்தை சேர்ந்த  முதியவர்  பாம்பின் தீண்டலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த முதியவரை உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் இடையில் உயிரிழந்துள்ளார்.
தற்பொழுது மாவட்ட வைத்தியசாலையில் அவருடைய பூதவுடல் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் அதீக வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புகையிரதக்கடவையில் ஒருவர் பாய்ந்து தற்கொலை

வவுனியா குருமன்காட்டு பகுதியிலுள்ள புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதிநேற்று இரவு 7 மணியளவில் யுவதி ஒருவர் பாய்ந்து தற்கொலை.
தற்கொலை செய்து கொண்டவர் முல்லைத்தீவு அலம்பிலை சேர்ந்த 51வயதுடைய செபஸ்ரியன்பிள்ளை பீட்டர் என தவகல் 
கிடைத்துள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>