siruppiddy

வியாழன், 12 மார்ச், 2015

புலவூரான் ரிஷி எதற்க்கானது....

இடைவெளியின்
நீட்சியில் 
பரப்ப முடிந்த
உன் மாசற்ற
புன்னகைகளை
இப்போதெல்லாம்
எங்கு தொலைத்தாய்
பெண்ணே?

பாச வெளிகளில்
சிதறிய இராட்சத
பொய்களின்
கொடூர சிரிப்பின்
அனல் காற்றில்
கூதல் தணிக்கும்!
சாட்சியங்களற்ற
முத்தங்களை_

மீள வறுகையில்
வீழும் கண்ணீர்
திவலைகளை
எந்த கவிதையில்
குறிப்பெடுப்பது சொல்!!

காதலி எனும்
ஸ்தானத்தில்
மாட்டியிருக்கும்
உன் புகைப்படத்தில்
மனைவியாக‌
புன்னகைக்கிறாய்!!

உன் விம்பத்தில்
ஒளி தரித்த‌
கவிதைகளின்
உனக்கான‌
ஆலாபனைகளிலும்
மெளனமே
பரிசளிக்கப்படுகிறது!!

இதோ கவிதைகள்
அழுவதற்க்கான‌
அரங்கத்தை
ஆரம்பித்துவிட்டன!
என் கல்லறைமேல்
வீழ்ந்து கிடக்கும்
தேமா மலர்களை
அகற்றிக்கொண்டு…

சித்தரிக்க இயலாத‌
அர்த்தமற்ற
உன் மெளனத்தை
போலவே
அந்த‌ பூக்கள்!!

எதற்க்கானது!!?
மெளனம்..
எதற்க்கானது!!?
பூக்கள்..
ஆக்கம் புலவூரான் ரிஷி


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக