siruppiddy

செவ்வாய், 31 மே, 2016

தங்கத்தை இடுப்புக்கு கீழ் ஏன் அணியக்கூடாது..?

தங்கமும் மகாலட்சுமியின் அம்சம். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்வார்கள். அல்லது கல்யாணம் ஆகி ஒரு பொண்வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் என சொல்வார்கள்.
ஏனென்றால், ஒரு பெண் ஒவ்வொரு வயதிலேயும் ஒவ்வொரு பருவத்தை எட்டுகிறாள். அந்த ஓவ்வொரு பருவத்திலும் மகாலட்சுமி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்வாள்.
கன்னியாக இருக்கும் போது காதுக்கு கீழ்பக்கம், கழுத்து பகுதியிலும், திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில், நேர் வகிட்டில் வாசம் செய்வாளாம் மகாலட்சுமி.
அதனால் தான் பெண்கள் தலை சீவாமல் இருக்க கூடாது. திருமணம் ஆனதும் நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும் என பெரியவர்கள்
 சொல்வார்கள்.
நல்ல மனமும், உதவி செய்யும் குணமும் கொண்ட எல்லா பெண்களும் எப்போதும் மகாலட்சுமியின் அம்சம் தான்.
அதேபோல் தங்கமும் மகாலட்சுமியின் அம்சம்தான். அதனால் தான் தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்பார்கள். அதேபோல் தங்க கொலுசு போடுவதும் தவறாகும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 28 மே, 2016

கவனக்குறைவாக செயல்பட்ட விமான ஓட்டிகளின் உரிமம் ரத்து!

கடந்த பிப்ரவரி 27, 2016 அன்று ஜெய்ப்பூரில் தரை இறங்க வேண்டிய இண்டிகோ 6E - 237 என்கிற விமானத்தின் விமான ஓட்டிகள், தாங்கள் தரை இறங்க வேண்டிய ரன் வே என்று நினைத்து ஜெய்ப்பூரின் ஒரு முக்கிய சாலையில் தரை இறங்க முயற்சித்திருக்கிறார்கள்.
விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த க்ரவுண்ட் ப்ராக்சிமிட்டி சென்சார் (Ground Proximity Censor) ஆபத்தான உயரத்தில் (போதுமான உயரத்தில் பறக்காதது) பறக்காததற்கு எச்சரிக்கை கொடுத்த பிறகு தான் விமானிகள் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதையில் 
சென்றிருக்கிறார்களாம்.
இப்படி கவனக்குறைவாக செயல்பட்டு, விமான பயணிகளின் உயிரை ஆபத்திற்குள்ளாக்கிய காரணத்திற்காக, அந்த விமானிகள் இருவருக்கும் பறப்பதற்கான உரிமத்தை டிஜிசிஏ (Directorate General of Civil Aviation) ரத்து செய்திருக்கிறது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 27 மே, 2016

நடேஸ்வர கல்லூரி எதிர் வரும் ஜூன்மாதம் மீண்டும் சொந்த இடத்தில்

 
காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன.
இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இரு பாடசாலைகளையும் விடுவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் இடம்பெற்று இரு பாடசாலைகளையும் சொந்த இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



புதன், 25 மே, 2016

பொலிஸார் மறைத்து வைக்கப்பட்டிருந்த உர மானிய மூட்டைகள் கண்டுபிடிப்பு!

மானியமாக வழங்கப்பட இருந்த 150 உர மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹொரவபொத்தானை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹொரொவப்பொத்தான பகுதியில் ஒரு களஞ்சியசாலையில் இந்த உர மூட்டைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்பாக விவசாய அதிகாரி ஒருவருடன் மேலும் நான்கு பேரை தாம் கைது செய்துள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

முல்லை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான போக்குவரத்தில் பாதிப்பு

முல்லைத்தீவில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்காக பொதுமக்கள் மேற்கொண்ட பயணத்தில் பல அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்புலவு வீதி புனரமைப்பு செய்யாத காரணத்தினால் இந்த பாதை குன்றும் குழியுமாக இருந்து பொதுமக்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 24 மே, 2016

நாட்டில் பேரிடரால் 29,000 கோடி ரூபா சொத்துக்கள் அழிவு!!!


 இலங்கையில்  பேரிடரால் 29,000 கோடி ரூபா சொத்துக்கள் அழிவு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 150 தொடக்கம் 200 கோடி டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 21 ஆயிரத்து 750 தொடக்கம் 29 ஆயிரம் கோடி ரூபா) மதிப்பிலான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என 'ரொய்ட்டர்' செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்த அழிவில் சிக்கி இதுவரை 92 பேர் இறந்தமை உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகின்றுது.
மேலும் இதுவரை மூன்றரை இலட்சம் பேர் வரை
 இடம்பெயர்ந்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரிடரால் ஏற்பட்ட சொத்தழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட பேரழிவாக அண்மையில் நடந்த பேரிடர் கருதப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

ஞாயிறு, 22 மே, 2016

இளம் யுவதி பொகவந்தலாவையில் தற்கொலை!

பொகவந்தலாவ - ஆரியபுற பகுதியில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த சம்பவம் நேற்று (21) சனிகிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 
குறித்த மாணவி கடந்த மாதம் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்தநிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கும் குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கும் காதல் உறவு இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து 
தெரியவந்துள்ளது. 
சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 11 மே, 2016

நேற்று மாலை மின்னல் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் பலி

பதுளை மடுல்சீமை கல்வுல்ல மெட்டிக்காத்தன்னை பகுதியில் பெண் ஒருவர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
கணவனும் மனைவியும் வீட்டிலிருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 9 மே, 2016

சிவனாலய வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு காணொளி

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்



ஞாயிறு, 8 மே, 2016

. போதுமான அளவு தாதிமார்கள் lபற்றாக்குறை வைத்தியசாலையில்

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் பாரியளவில் தாதிமார்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம்
 கூறுகின்றது.
வைத்தியசாலைகளுக்குள் 30,000 இற்கும் அதிகமான தாதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைகளில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும், அவற்றில் பணியாற்றுவதற்கு போதுமான அளவு தாதிமார் இல்லை என்பது வருத்தமளிப்பதாக காமினி குமாரசிங்க
 கூறினார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 7 மே, 2016

விரைவில் சவுதியில் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ள தமிழர்கள் இலங்கைக்கு!

சவூதி அரேபியாவில், முகாம்களில் இருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிற்கு சென்று பல்வேற காரணங்களால் நிர்க்கதிக்குள்ளாகிய நிலையில் நாட்டுக்கு வர முடியாமல், அந்த நாட்டு நலன்புரி முகாம்களில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கு சவூதி அரசாங்கம் இணக்கம் 
தெரிவித்துள்ளது.
வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா அண்மையில் சவூதி அரேபியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அந்த நாட்டு தொழில் மற்றும் உள்துறை பிரதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக சவூதி அரேபியா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதுதவிர சவூதி அரேபியாவில் பணி புரியும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை இலங்கையுடன் அவ்வப்போது பரிமாறிக்கொள்ளவும், இலங்கையர்களின் நலன்புரி விடயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்தும் அந்த நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அத்துடன் அந்த நாட்டின் சமூக சேவைகள் அமைச்சர் மற்றும் பொது சுகாதார பிரதியமைச்சர் ஆகியோருடனும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
சவூதியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள, மருத்துவ உதவி தேவைப்படும் இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குதல் மற்றும் சவூதியில் இறந்து போகும் இலங்கையர்களின் உடல்களை இலங்கைக்கு விரைவாக எடுத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது என்பன குறித்தும் இந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 6 மே, 2016

சிவன் தேர்த் திருவிழாவில் மி்ன்சாரம் தாக்கி ஒருவர் பலிà?

யாழ் சுன்னாகம் சிவன் தேர்த் திருவிழாவில் மி்ன்சாரம் தாக்கி ஒருவர் பலி
சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி  ஒருவர், வியாழக்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
தண்ணீர்ப்பந்தலில் ஏற்பட்ட மின் கசிவால் 7 பேர் மின்சார தாக்கத்துக்கு உள்ளாகினர். இதில் எஸ்.சொர்ணகுமார் (வயது 42) என்ற 1 பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 2 மே, 2016

பதின் நான்கு நாட்களுக்கு பின்நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

ஈக்வடாரில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின் உயிருடன் 
மீட்கப்பட்டுள்ளார்.
கால் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவரை, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரது பெயர் மானுவேல் வஸ்கிஸ் என்றும், சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் சிகிச்சையில் தெரியவந்துள்ளது.
மேலும் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>