siruppiddy

வெள்ளி, 6 அக்டோபர், 2023

வீட்டில் ஏன் முருங்கை மரம் வளர்க்க கூடாது காரணத்தை அறிந்திடுவோம்

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பதில்லை. காரணம் நமது முன்னோர்கள் முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது நமது முன்னோர்களின் 
கருத்து இதை பின்பற்றும் நோக்கில் உண்மையான காரணமே தெரியாமல் நம்மில் பலரும் முருங்கை மரத்தை வீட்டில் 
வளர்ப்பதில்லை.
இப்படி நமது முன்னோர்கள் சொல்லி வைக்க உண்மையான காரணம் என்னவென்று எப்போதாவது உங்களுக்குள் கேள்வி எழுந்கிருக்கிறதா? அதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
காரணம் என்ன? 
பொதுவாக மற்ற மரங்களுடன் ஒப்பிடும் போது முருங்கை மரம் சற்று உறுதியற்ற மரமாக காணப்படுகின்றது. அதனை வீட்டில் வளர்த்தால் மழைக்காலங்களில் சில சமயம் இதன் கிளைகள் முறிந்து வீட்டை சேதப்படுத்தக்கூடும்.
வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம்
 என்ன தெரியுமா?
ஒரு தற்காப்பு கருதியே அதனை வீட்டில் வளர்க்க கூடாது என சொல்லியிருக்கின்றார்கள். முருங்கை மரம் வளர்த்தால் வீட்டில் சிறுவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த மரத்தில் ஏறி விளையாடக்கூடும் முருங்கை மரம் உறுதியற்றது என்பதால் கிளைகள் முறிந்து அவர்கள் கீழே விழும் வாய்ப்பு அதிகம் இதனால் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு ஆபத்து என்பதும் ஒரு காரணம்.
முருங்கை மரத்தில் அதிகமாக கம்பளி பூச்சிக்கள் உற்பத்தியாகும் இது உடலில் பட்டாலே அரிப்பை ஏற்படுத்தும் விஷ தன்மை 
வாய்ந்தது.
முருங்கை மரத்தை வீட்டின் அருகில் வைத்தால் இந்த பூச்சிகள் வீட்டினுள் வர வாய்ப்பு அதிகம் அதனால் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆபத்து இதனாலேயே முருங்கை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள்.  என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 23 செப்டம்பர், 2023

உங்கள் உடலுக்கு நன்மை தரும் கருப்பு கவுனி அரிசி..நீங்களும் சாப்பிடலாம்

வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது.
இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் 
சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி 
உடல்நலத்திற்கு
 எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடிய Wild Rice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசி ஆகும்.
வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது இது.
 இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் பெரும்பாலும் இவை விளைவிக்கப்படுகின்றன. இது பெயருக்கு ஏற்ப கருமை நிறத்தில் காணப்படுகிறது. அதிக 
அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை 
கொண்டிருக்கிறது. இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற சக்தியையும் கொண்டிருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் 
‘வெள்ளை’ அரிசிக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.
 தினமும் கருப்பு கவுனி அரிசியை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏன் என்று இங்கு பார்க்கலாம்
இதய ஆரோக்கியம் :கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் 
கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய 
ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும்.
நீரழிவு நோய் :மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி 
அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை 
கட்டுப்படுத்துகிறது.
புரதச்சத்து :வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் :கருப்பு கவுனி அரிசியில் காணப்படும் ‘ஃபீனாலிக்’ என்ற கலவைகளில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக 
செயல்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் :கருப்பு கவுனி அரிசியில் காணப்படும் ‘ஃபீனாலிக்’ என்ற கலவைகளில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
உடல் ஆரோக்கியம் :நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் அடங்கியிருக்கிறது. அதோடு அதிக அளவு நார்ச்சத்தும்
 உள்ளது. இதனை உணவாக அன்றாடம் எடுத்துக்கொள்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்க 
விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து
 கொள்ளலாம்.
பக்க விளைவுகள் :கருப்பு கவுனி அரிசியில் ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த அரிசியினை அதிக அளவில் உட்கொண்டால், ஆபத்து ஏற்படும். எனவே, இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கருப்பு கவுனி அரிசி ரெசிபி : முதலில் கருப்பு கவுனி அரிசியை வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயை எடுத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய், 2 நறுக்கிய பூண்டு, 1 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் சீரகம் சேர்க்க 
வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம் 
சேர்த்து, 2 நிமிடம் 
வதக்க வேண்டும். உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து,
 நன்றாக கிளற வேண்டும். பிறகு வேகவைத்த கருப்பு கவுனி அரிசியை இதில் சேர்க்க வேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை 
வதக்கி, பின்னர் எலுமிச்சை மற்றும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறலாம். இதனை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 





வெள்ளி, 23 ஜூன், 2023

நாம் பலா பழம் சாப்பிட்ட பின் தவிர்க்க வேண்டிய உணவுகள்

முக்கனிகளில் ஒன்றாக இருப்பது பலா. இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்பது யாரும் கிடையாது. இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு நாம் 
எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள் என்னவென்று 
விரிவாகப் பார்ப்போம்.
முதலில் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் தோல் சம்பந்தப்பட்ட மற்றும் அலர்ஜி 
பிரச்சனை வரக்கூடும்.
இரண்டாவதாக பப்பாளி பழம் சாப்பிட்டால் உடலில் அலற்சியை ஏற்படுத்தும். இதனைத் தொடர்ந்து வெண்டைக்காய் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால் தோலில் வெண் திட்டுகள் ஏற்படக்கூடும்.
இதுமட்டுமில்லாமல் பலாப் பழத்தை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பிரச்சனையை குறித்தும் பார்க்கலாம்.
பலாப்பழம் அதிகமாக சாப்பிடுவதால் வயிறு மந்தம் வாந்தி மற்றும் மலச்சிக்கல் புளியேப்பம் வயிற்றுவலி போன்றவை உண்டாகும்.
என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






திங்கள், 24 அக்டோபர், 2022

கணவன் மனைவி கூட நீங்க சண்டை போடாமால் சந்தோஷமா வாழணுமா?


காதலில் இருப்பது ஒரு அற்புதமான உணர்வு. நிலையான உற்சாகம், ஒருவருக்கொருவர் ஏங்குதல், அவ்வப்போது சண்டை போடுவது, பின்னர் ஒருவரை நினைத்து ஒருவர் உருகுவது. இவை அனைத்தும் 
அன்பை ஒரு சமதளம் நிறைந்த மற்றும் 
மகிழ்ச்சிகரமான 
சவாரி ஆக்குகின்றன. மேலும், ஒரு காதல் உறவு ஒரு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான ஒன்றாக மாற்றுவதற்கு நிறைய முயற்சிகள், தியாகங்கள், சமரசங்கள் மற்றும் புரிதல்கள் 
தேவைப்படுகிறது.
ஒரு உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க அந்த உறவில் காதல் அவசியமாகிறது. நீங்கள் எப்போதும் ஆபத்தை ஏற்படுத்த விரும்பாத உறவில் இருந்தால், உங்களுக்கு உதவக்கூடிய சிறந்த ஆலோசனைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
அனைவருக்கும் ஒரு முறிவு புள்ளி இருப்பதை உணர வேண்டியது மிகவும் முக்கியம். மேலும் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அல்லது மற்றவர்களால் பார்க்கப்படுவதை அவர்கள் உணரவில்லை என்றால், அவர்கள் அதை வேறு எங்காவது கண்டுபிடிப்பார்கள். எனவே, உங்கள் பங்குதாரர் பாராட்டப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உணர
 வேண்டியது அவசியம்.
தொடர்ச்சியான விமர்சனங்களிலிருந்து விலகி, அதற்கு பதிலாக நேர்மறையான வலுவூட்டலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தம்பதிகள் ஒருவருக்கொருவர் விரும்பாத அளவுக்கு வளரும் அபாயத்தைக் குறைக்கிறார்கள். கூடுதலாக, சிறிய பாராட்டுக்கள் அல்லது சைகைகள் கூட ஒருவருக்கொருவர் உங்கள் அன்பைக் காட்ட ஒரு 
சிறந்த வழியாகும்.
அன்பான உறவுகள் என்பது நமது தேவைகளை பூர்த்திசெய்து, நமது கூட்டாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு செயல்முறையாகும். அந்த பரிமாற்றம் பரஸ்பரம் திருப்தி அளிக்கும்போது, நல்ல உணர்வுகள் தொடர்ந்து பாய்கின்றன. அது இல்லாதபோது, விஷயங்கள் புளிப்பாக மாறும், உறவு முடிகிறது.
ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை பற்றி மட்டுமே பேசுங்கள், விவாதியுங்கள். ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளை எல்லாம் சுற்றி வளைப்பது உங்களுக்கு எங்கும் கிடைக்காது. இது செயல்படுத்த மிகவும் கடினமான ஒன்றாகும் என்றாலும், அது உண்மையில் மதிப்புக்குரியது. இது உண்மையில் ஒரு சண்டையைத் தீர்ப்பது மிகவும் 
எளிதாக்குகிறது.
நன்றியுணர்வு என்பது மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம். உங்கள் பங்குதாரர் உங்களுக்காக தொலைதூர தன்னலமற்ற மற்றும் தயவான ஒன்றைச் செய்யும் தருணங்களைக் கவனியுங்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள். நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்காத விஷயங்களை ஒப்புக் கொள்ளுங்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 19 அக்டோபர், 2022

விரைவில் சிங்கப்பூரில் வண்டுகள், பூச்சிகளை சாப்பிட அனுமதி வழங்க பரிசீலனை

சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அ
ரசு கருத்து கோரியுள்ளது. 
இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக 
உட்கொள்ள முடியும். 
இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. பூச்சிகளை உனவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது. 
முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
சமீபகாலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்வதற்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிகரீதியான பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு
 ஊக்குவித்து வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 5 அக்டோபர், 2022

நாம் அதிக சூடான நீரைக் குடிப்பதால் இவ்வளவு பிரச்சினைகள் உள்ளனவாம்

பொதுவாக உடல் எடையை குறைக்க பலர் வெந்நீர் எடுத்து கொள்வார்கள்.
ஆனால் அதிலும் சிலர் அதிக வெந்நீரைக் குடிக்கத் தொடங்குகிறார்கள். இதைச் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு கடுமையான சேதத்தை 
ஏற்படுத்தும்.
எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது. அந்தவகையில் அதிகமாக வெந்நீர் குடிப்பது என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.
இரவில் தூங்கும் போது வெந்நீரை குடிக்காதீர்கள், ஏனெனில் இரவில் பல முறை கழிப்பறைக்கு செல்ல வேண்டியிருக்கும். சூடான நீர் இரத்த நாளங்களின் செல்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும், எனவே இரவில் வெந்நீரை குடிப்பதை தவிர்க்கவும்.
சிறுநீரகம் ஒரு சிறப்பு தந்துகி அமைப்பைக் கொண்டிருப்பதால் உடலில் இருந்து கூடுதல் நீர் மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. எனவே வெந்நீரை அதிகமாக குடித்தால், சிறுநீரக செயல்பாடு மிகவும் மோசமாக பாதிக்கப்படும்.
வெந்நீர் அதிகமாக குடித்தால் வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படும். உடலின் உட்புற திசுக்கள் உணர்திறன் கொண்டவை, இதன் காரணமாக 
கொப்புளங்கள் ஏற்படலாம்.
நாள் முழுவதும் வெந்நீரை உட்கொண்டால், மூளை நரம்புகளில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது, அதன் காரணமாக தலைவலி பிரச்சனை உருவாகும். எனவே இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.
சூடான நீரும் உங்கள் இரத்த அளவை பாதிக்கிறது. இது இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது, இது இரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக நீங்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பலியாகலாம், இது பின்னர் மாரடைப்புக்கு காரணமாகிறது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 28 செப்டம்பர், 2022

நீங்கள் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் அவசியம் படியுங்கள்.

வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது.அதில் அமிலத்தன்மையும் இருப்பதால் குடல் இயக்கமும் பாதிக்கப்படும். சர்க்கரையும், அமிலத்தன்மையும் இணைந்து குடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும்
அதனால் காலைவேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு வேண்டுமானால் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறுமனே வாழைப்பழம் சாப்பிடாமல் ஆப்பிள் போன்ற மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறப்பானது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இயற்கையாகவே அமிலங்களும் உள்ளடங்கி இருக்கிறது. பிற பழங்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் அமிலங்களின் 
வீரியம் குறையும்.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்துவிடும். அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது. அதன் தாக்கம் இதயத்தில் எதிரொலிக்கும். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும்.
ஆயுர்வேதத்தின்படியும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பழங்களில் படிந்திருக்கும். அப்படி இருக்கும்போது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல. அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலில் படிந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும்.
ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. அவை உடலுக்கு நன்மை தந்தாலும், எந்த நேரத்தில் எப்பொழுது எவற்றுடன் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. பழங்களை 
சரியான நேரத்தில், சரியான அளவில் 
சாப்பிடுவதன் 
மூலம் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். ஆரோக்கியத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>