siruppiddy

சனி, 31 ஆகஸ்ட், 2013

மிக நல்ல படைப்பு. மூன்றாம் உலகப் போர்


வைரமுத்து படைத்த மூன்றாம் உலகப்போர் படித்து பார்த்தோம் . மிக நல்ல படைப்பு. படிப்பவர்கள் தலையில் மூளையும் , நெஞ்சில் ஈரமும் இருந்தால் அவர்களின் எண்ணத்தில் ஒரு சிறு அதிர்வாவது தோன்றும் . மூன்றாம் உலகப்போர் என்ற தலைப்பே ஒரு பெரிய பயங்கர தோற்றத்தை ஏற்படுத்துகிறது . 40 அத்தியாயங்களில் " நச் " சென்று ஒரு கருத்தை நம் மனதில் பதிக்கிறார். கதையின் ஆரம்பத்தில் அட்லாண்ட கடற்கரை காட்சியும், செண்டாய் நகரமும் கதையின் உலகத்தன்மையை காட்டுகிறது . பின் தேனி மாவட்டத்தில் அட்டனம்பட்டி யை வைத்து உலக பிரச்னை ஒன்றை காட்டுகிறார் . கருத்தமாயி – சிட்டம்மாள் கதையின் முக்கிய கதப்பாதிரங்களாக வருகின்றனர் . அவர்களின் பிள்ளைகளில் முத்துமணி ஊரை அளிப்பவனாகவும் , சின்னபாண்டி ஊருக்கு உதவிசெயபவனாகவும் இருக்கிறார்கள் . இவர்களால் குடும்பத்தில் நடக்கும் சொத்துசண்டை , ஊரின் நன்மை – தீமை களை தீர்மானிக்கிறது. வைரமுத்து வருகை : கதையின் 30 வது அத்தியாயத்தில் வைரமுத்துவை எமிலி , இஷிமுரா மற்றும் சின்னபாண்டி சந்திக்கிறார்கள் . மேற்கு தொடர்ச்சி மலையின் மேன்மைகளை விவரிக்கிறார் கவிஞர் . "அக்பருக்குள்ளும் அசோகருக்குள்ளும் எங்கள் சேர , சோழ , பாண்டிய மன்னர்கள் அறியாமல் போனது போல் இமய மலையின் புகழுக்குள் மேற்கு தொடர்ச்சிமலை காணமல் போனது " என்றும் , இந்தியாவின் 60 சதவிகித நதிகளின் தோற்றுவாயாக விளங்கும் மேற்கு தொடர்ச்சிமலை புறக்கணிக்க படுவதை குறிப்பிடுகிறார் . இது ஒரு நல்ல விழிப்புணர்ச்சி யுண்டாக்கும் செய்தி . மூன்றாம் உலகப்போர் கூறும் ப்ரிச்சனைகள் : புவி வெப்பமடைதல் விவசாயம் அழிவு புவியில் மனிதன் வாழ ஏற்ற சூழல் குறைதல் நாம் பின்பற்ற வேண்டிய சில : பிளாஸ்டிக் பயன்படுத்தாது இருத்தல் இயற்கை விவசத்திற்கு திரும்புதல் முடிந்தவரை மரங்கள் வளர்த்தல் பெற்றோர் , பெரியோரை மதித்தல்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பெண்ணின் ஆசை 1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள !!


போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்து 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.
போலந்தைச் சேர்ந்தவர் அனியா லிசெவ்ஸ்கா(21). அவர் உலகில் உள்ள அத்தனை நகரங்களுக்கும் செல்ல முயற்சி செய்து வருகிறாராம்.
அவ்வாறு செல்கையில் 1 லட்சம் ஆண்களுடன் தலா 20 நிமிடங்கள் உறவு கொள்ள வேண்டுமாம்.
இதுகுறித்து பேஸ்புக் இணையத்தளத்தில், நான் போலந்து ஆண்களை விரும்புகிறேன்.
ஐரோப்பா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
செக்ஸில் அதிக ஈடுபாடு உண்டு, சுற்றுப்பயணத்தில் சுமார் 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும்.
எனக்கு ஆண்களையும், அவர்கள் மூலம் கிடைக்கும் இன்பமும் மிகவும் பிடிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் போலந்தில் செக்ஸ் குறித்து பேசுவது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று.
தன்னுடைய கனவுகளை பூர்த்தி செய்ய நினைக்கும் பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் விபச்சாரம் செய்பவர் போல் பார்க்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர் இதுவரையிலும் 284 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளாராம்.
 

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

யுவதியை துஷ்பிரயோகம் செய்த 74 வயது நபருக்கு சிறை


கெப்பிட்டிகொல்லாவ போகாவெவ பகுதியில் வசிக்கும் இளம் யுவதியை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட 74 வயதான நபருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் அபராதமும், பாதிக்கப்பட்ட யுவதிக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க உத்தரவிட்டார்.
இரண்டு வருட சிறைத்தண்டனையை 7 வருடங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதி, 10 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீட்டு தொகையை வழங்குமாறும் உத்தரவிட்டார்.
இழப்பீட்டையும், அபராத தொகையையும் செலுத்த தவறினால் மேலும் 18 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
வோல்டர் ஜயசூரிய என்ற 74 வயதான நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு குற்றவாளியான இந்த நபர், பதவி பிரதேசத்தில் மொத்தமாக மீன்களை கொள்வனவு விற்பனை செய்து வந்ததுடன் அந்த யுவதியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.
குற்றவாளியின் ஊழியர், அந்த யுவதியுடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் பின்னர் அந்த ஊழியர் யுவதியை கைவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கைவிட்டு சென்ற காதலனை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி, யுவதியை அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதன், 28 ஆகஸ்ட், 2013

தலைவாசல் >> சினிமா >> வரலாறு

 
கதை, வசனம், பாடல், இசை அமைப்பு, 'டப்பிங்' பன்முகம் படைத்த

 திரை உலகில் அடியெடுத்து வைத்த கே. தேவநாராயணன், பின்னர் கதை- வசனம், பாடல், இசை அமைப்பு, டப்பிங் என்று பல துறைகளில் சாதனை படைத்தார். அவர் வசனம் எழுதிய படங்கள் 800-க்கு மேல்.

குறிப்பாக, இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புராணப்படங்களுக்கு இவர் எழுதிய வசனங்கள் புகழ் பெற்றவை.


கே.தேவநாராயணனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி. தந்தை பெயர் டி.குளத்து அய்யர். தாயார் சிவகாமி அம்மாள்.


1925-ல் பிறந்த தேவநாராயணன், காரைக்குடி எஸ்.எம்.எஸ். வித்யா சாலையில் கல்வி பயின்றார். ஏவி.மெய்யப்ப செட்டியார் படித்ததும் இதே பள்ளியில்தான்.


படிக்கும்போதே நடிப்பதிலும், பாடல் எழுதுவதிலும், பாடுவதிலும் திறமை பெற்றிருந்தார், தேவநாராயணன்.


பள்ளியில் நடந்த "ராஜபக்தி'' என்ற நாடகத்தில் தேவநாராயணன் நடித்தார். அதை பட அதிபர் லட்சுமணன் செட்டியார் (பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன் படத்தை எடுத்தவர்) பார்த்தார். தேவநாராயணனின் நடிப்பு அவருக்குப் பிடித்துப்போகவே, அப்போது அவர் தயாரித்து வந்த "கிருஷ்ணன் தூது'' படத்தில் துரியோதனன் தம்பி விகர்ணனாக நடிக்க வைத்தார்.


அதன்பின், ஏவி.எம். தயாரித்த "சபாபதி'' படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனின் பள்ளித் தோழராக நடித்தார்.


1947-ல், "ராமராஜ்யா'' என்ற இந்திப்படம் வெளிவந்து, இந்தியா முழுவதும் சக்கை போடு போட்டது. மகாத்மா காந்தி பார்த்த ஒரே திரைப்படம் என்ற பெருமையை பெற்ற படம் இது.


இப்படத்தை தமிழில் "டப்'' செய்து வெளியிட ஏவி.மெய்யப்ப செட்டியார் தீர்மானித்தார்.


தேவநாராயணன் வசனம் எழுதிய "குளத்தங்கரை அரசமரம்'' என்ற நாடகத்தை ஏவி.எம். பார்த்தார். வசனங்கள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. தேவநாராயணனுக்கு இந்தி நன்றாகத் தெரியும். ஆதலால், "ராம்ராஜ்யா''வுக்கு தமிழில் வசனம் எழுதும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.


"ராம்ராஜ்யா''வில் பிரேம் அதீப், சோபனா சமரத் (நடிகை நூடனின் தாயார்) ஆகியோர் நடித்திருந்தனர். அதற்கு அற்புதமாக வசனம் எழுதிய தேவநாராயணன், பாடல்களையும் எழுதினார். 2 பாடல்களை அவரே பாடினார்.


"டப்'' செய்யப்பட்ட "ராமராஜ்யம்'', அசல் தமிழ்ப்படங் களுக்கு இணையாக ஓடியது.


இந்தப் படத்தின் மூலம் வசனகர்த்தா, பாடல் ஆசிரியர், பாடகர் என்று புகழ் பெற்றார் தேவநாராயணன்.


ராமராஜ்யம் பட வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, "தியாகி'' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது. (இந்தப் படத்தின் கதாநாயகி வி.என்.ஜானகி)


ஏற்கனவே ராமராஜ்யத்தில் பணியாற்றி வந்ததால், இந்த வாய்ப்பை ஏற்கவில்லை.


"ராமராஜ்யம்'' படத்தின் வெற்றி, தேவநாராயணன் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது.


மொழிமாற்றப் படங்களுக்கு வசனம் எழுதவும், குரல் கொடுக்கவும், ஏராளமான வாய்ப்புகள் வந்தன.


பானுமதியின் "லைலா மஜ்னு'', "விப்ரநாராயணா'' ஆகிய படங்களில், ஏ.நாகேஸ்வரராவுக்கு குரல் கொடுத்தார்.


அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு'' நாடகத்தை ஏவி.எம். நிறுவனம் படமாகத் தயாரித்தது. கே.ஆர்.ராமசாமி, லலிதா ஆகியோர் நடித்த இப்படத்தில், இரண்டாவது ஹீரோவாக நாகேஸ்வரராவ் நடித்தார். "இந்தப் படத்தில் நானே தமிழில் பேசுகிறேன். டப்பிங் கூடாது'' என்று நாகேஸ்வரராவ் கூறினார். ஆனால் அவர் உச்சரிப்பு அப்போது திருப்திகரமாக இல்லாததால், தேவநாராயணனை பேச வைத்து படத்தை முடித்தார்கள்.


இது நாகேஸ்வரராவுக்கு அப்போது தெரியாது. படத்தைப் பார்த்தபின், "பொருத்தமான குரலை பயன்படுத்தி இருக்கிறீர்கள். எனக்கு திருப்தி'' என்று ஏவி.எம்.மிடம் நாகேஸ்வரராவ் கூறினார்.


இதற்கிடையே, "கனவு'' என்ற நேரடி தமிழ்ப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், தேவநாராயணன். இப்படத்தில் லலிதாவும், வி.கே.ராமசாமியும் இணைந்து நடித்தார்கள்.


கமலஹாசன் நடித்த பல தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு தேவநாராயணன் வசனம் எழுதியுள்ளார்.


அதுபற்றி அவர் கூறியதாவது:-
சாகரசங்கமம் தெலுங்குப் படம்தான், தமிழில் சலங்கை ஒலி என்ற பெயரில் வெளிவந்தது.
அதற்கு வசனம் எழுதும் நேரத்தில், எனக்கு உடல் நலம் இல்லை. படத்தை, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டி இருந்தது.

கமல், தியேட்டருக்கு வருவார். படத்தைப் போட்டுக் காட்டுவார்கள். தெலுங்கு உரையாடலைப் பார்த்து, அதை உள்வாங்கிக் கொண்டு, கருத்து மாறாமல், உணர்ச்சி குறையாமல் வசனத்தைச் சொல்வேன். கமல் உடனே அதை உணர்ச்சியுடன் பேசிவிடுவார்.

படம் அற்புதமாக அமைந்து நன்றாக ஓடியது. அது நான் வசனம் "எழுதிய'' படம் என்று சொல்வதைவிட, வசனம் "சொல்லிய'' படம் என்று கூறுவதே பொருத்தம்.

இதன் பிறகு விசுவநாத்தின் "சுவாதி முத்தியம்'' என்ற தெலுங்குப் படத்தில் கமலஹாசனும், ராதிகாவும் நடித்தனர். அந்தப் படம் "சிப்பிக்குள் முத்து'' என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டது. அந்தப் படத்துக்கும் நான் வசனம் எழுதினேன்.

கமல் எடுத்த "சத்யா'' படத்தில் தந்தை வேடத்துக்கு நான்தான் பேசவேண்டும் என்று என்னை அழைத்தார். பெங்களூரில் ஜி.வி.அய்யர் படத்தில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தேன். கமல் அழைப்பை ஏற்று, உடனே வந்து "டப்பிங்'' பேசினேன்.

அவருடைய "பாசவலை''க்கு எழுதினேன். தமிழில் நேரடியாகத் தயாரித்த "குருதிப்புனல்'' படத்துக்கும் எழுதினேன்.

கமலுடன் பணியாற்றுவது மன நிறைவு தரும் அனுபவம். அடுத்தவர் திறமையை அறிந்து பாராட்டும் குணம், இயல்பாகவே அவருக்கு இறைவன் கொடுத்த வரம்.''

இவ்வாறு தேவநாராயணன் கூறினார்,

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

இன்றைய சத்குரு செய்தி


 இன்னொருவரைப் போல உங்களால் நடந்து கொள்ள முடியுமா, முடியாதா என்பது முக்கியமில்லை. உங்களுடைய முழு திறமையையும் பயன்படுத்துகிறீர்களா என்பதுதான் கேள்வி

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

இனவாதிகளின் கோஷமும் நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா விஜயமும்

 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்பவர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு சார்பாக செயற்படுபவர் என ராவணா சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
 அமெரிக்கா சம்பந்தப்பட்ட உலகில் எந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அது பற்றி அவருக்கு பிரச்சினைகள் இல்லை எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 சிறிலங்காவுக்கான நவநீதம்பிள்ளையின் வருகையை தமது அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக ராவணா சக்தி அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

 சிறிலங்கா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டுக்கு எதிராக செயற்படும் அவர், சிறிலங்காவை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தி கால்களில் மிதித்து நசுக்க முயற்சித்து வருகிறார்.
 நவநீதம்பிள்ளையின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் வெளிநாட்டு சக்திகளை, சிறிலங்காவில் தலைதூக்க விடுவதில்லை எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.
 இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா வருவது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிடுவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது,
                            

புதன், 21 ஆகஸ்ட், 2013

கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா?


தினமும் நான்கு கோப்பை காபி, தேநீர் குடித்தால் கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் என சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிங்கப்பூர் டியூக் தேசிய பல்கலைகழகத்தின் மருத்துவ துறை ஆராய்ச்சியாளர்களே இதனை கண்டுபிடித்துள்ளனர்.
உலக அளவில் நீரிழிவு மற்றும் உடற்பருமன் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள 70 சதவிகித மக்களுக்கு கல்லீரலில் கொழுப்பு சேருவது முக்கிய பிரச்னையாக இருக்கிறது.
இவ்வாறு சேரும் கொழுப்பை அகற்ற சரியான சிகிச்சைகள் இல்லை என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றால் தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுக்காக கொழுப்பு நிறைந்த உணவை எலிகளுக்கு கொடுத்த விஞ்ஞானிகள், பின் அதற்கு காபியையும் உட்செலுத்தினர்.
இது கல்லீரலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானி பால் யென் கூறுகையில், காபியில் உள்ள காபின் நம் உடலில் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. காபி, தேநீர் ஆகியவற்றை குடிப்பதால் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என தவறாக சொல்லப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கு கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றுவதில் காபி- தேநீர் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மதுபோதையுடன் நடமாடிய உறுப்பினர் கைது


பெரஹரா சமயத்தில் தலதா மாளிகையின் மகமதுவ பிரதேசத்திற்குள் மதுபோதையில் நடமாடிய கண்டி மாநகர சபையின் ஐ. தே. க. உறுப்பினர் ஒருவரை கண்டிப் பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
ரந்தோலி பெரஹராவின் நான்காவது பெரஹரா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இப் புனித பிரதேசத்திற்குள் சிலர் அதிக மதுபோதையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரை கைது செய்த பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 29ஆம் திகதி கண்டி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மாநாட்டுக்கு சென்றதாககூறுவதில் உண்மை இல்லை


 
 தமிழ் பல்கலைக்கழக பேராசிரியா்கள் விரிவுரையாளா்கள் லன்டனில் நடைபெற்ற தமிழட ஈழ ஆதரவு மாநாட்டுக்கு சென்றதாக இராணுவம் கூறுவதில் உண்மை இல்லை என பல்கலைக்கழக விரிவுரையாளா் சம்மேளன தலைவா் நிமல்ரஞ்சித் தேவசிறி கூறினார்.
அவா்கள் சென்றது தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கு என்று கூறிய அவா் வெளிநாடுகளுக்கு சென்று மாநாடுகளில் கலந்துகொள்ளும் உரிமை பேராசிரியா்கள் விரிவுரையாளா்களுக்கு உண்டு என்றும் தெரிவித்தார். அவ்வாறு வெளிநாடு சென்று தமிழ் ஈழ ஆதரவு மாநாட்டில் கலந்துகொண்டதாக இருந்தால் அதனை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுதான் விசாரனை செய்ய வேண்டும் இராணுவம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நிமல்ரஞ்சித் தேவசிறி கூறினார். இராணுவத்துக்கு பல்கலைக்கழக விடயங்களில் தலையிட உரிமை இல்லை என குளோபல் தமிழ்ச் செய்தியாளருக்கு அவா் நிமல்ரஞ்சித் தேவசிறி கூறியுள்ளார்