ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்பவர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு சார்பாக செயற்படுபவர் என ராவணா சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சம்பந்தப்பட்ட உலகில் எந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அது பற்றி அவருக்கு பிரச்சினைகள் இல்லை எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.சிறிலங்காவுக்கான நவநீதம்பிள்ளையின் வருகையை தமது அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக ராவணா சக்தி அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டுக்கு எதிராக செயற்படும் அவர், சிறிலங்காவை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தி கால்களில் மிதித்து நசுக்க முயற்சித்து வருகிறார்.
நவநீதம்பிள்ளையின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் வெளிநாட்டு சக்திகளை, சிறிலங்காவில் தலைதூக்க விடுவதில்லை எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா வருவது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிடுவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக