siruppiddy

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உங்கள் இந்த வாரம் ராசி பலன்கள்...

அன்பார்ந்த ராசி நேயர்களே இந்த வார ராசிபலன்கள் இதோ,
மேஷம்:-
மேஷராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். ஏப்ரல்27,28,29 வேலை இல்லாதவர்களுக்கு வெகு நாட்களாக எதிர் பார்த்து இருந்த புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.
உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கண்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள்.
குடும்பத்தில் ஏற்படும் .ஏப்ரல்30, மே1 ஆகிய திகதிகளில் உடல் நிலை பாதிப்புகள் நீங்குவதற்காக மருத்துவத்திற்காக வெளியுர் பயணங்களை மேற் கொள்வீர்கள். பேப்பர்,பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள் போன்ற ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,அச்சுத் துறையைச் சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,பாடலாசிரியர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,காய்கரிகள்,இலை மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.
மே2,3நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும்.அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தைக் கவனிக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்து 
அன்ன தானம் செய்து வரவும்.
உங்கள் கவனத்திற்கு >>>>
   
மேலதிக இராசி பலன்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் >>>

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஓவியராக மாறிய 4 வயது ஆடு - காணொளி, இணைப்பு...

 அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியரான 'வின்சென்ட் வான் கா’ வின் பெயரில் ’வின்செண்ட் வான் கோட்’ (ஆடு) என்று செல்லமாக அழைக்கப்படும் ஓவியர், தனது அற்புதமான பெயிண்டிங்கால் அமெரிக்காவையே கலக்கி வருகிறார். 
நியூ மெக்சிகோ மாநிலத்தின் அல்புக்வெர்க் தாவரவியல் பூங்காவில் வசித்து வரும் 4 வயது ஆடான போடிக்கு, அந்த பூங்காவின் பணியாளரான கிறிஸ்டியன் ரைட் பொழுது போக்காக ஓவியம் வரைவதற்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். ஆனால் போடியோ, படு சீரியசாக ஓவியங்கள் வரையத் தொடங்கி விட்டது. 
வாயில் தூரிகையை பிடித்துக் கொண்டு போடி துல்லியமாக ஓவியம் வரைவதை காணக் கண்கோடி வேண்டும் என்று அதிசயிக்கிறார் பூங்காவின் மேலாலர் 'லின்’. போடி படம் வரையும் அழகை ரசிப்பதற்காகவே மாலையின் பலர் பூங்காவிற்கு வருகின்றனர்.
போடி வரையும் ஓவியங்கள் அனைத்தும் நியூ மெக்சிகோவில் உள்ள பயோபார்க் சொசைட்டியில் 40 டாலருக்கு (2 ஆயிரத்து 500 ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>