சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அ
ரசு கருத்து கோரியுள்ளது.
இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக
உட்கொள்ள முடியும்.
இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. பூச்சிகளை உனவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது.
முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்வதற்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிகரீதியான பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு
ஊக்குவித்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக