siruppiddy
இலங்கைச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 செப்டம்பர், 2020

கராப்பிட்டி பகுதியில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் விசர் நாய்

காலி – கராப்பிட்டி பகுதியில் கடந்த மூன்று தினங்களில் இருவர் விசர் நாய் கடிக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பதின்மூன்று 
வயது பள்ளி மாணவர் உட்பட இரண்டு உயிரிழந்ததாக உதுகம ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சுசந்தா பெர்னாண்டோ தெரிவித்தார்.இதேவேளை 7 ஆம் வகுப்பில் கல்வி 
பயிலும் மாணவியான நேத்ஸரா நாய் கடிக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தாமதிக்காமல் உடனடியாக
 வைத்தியசாலையை நாடினால் உயிரை காப்பாற்ற முடியும் என வைத்தியர் கூறியுள்ளார்.மேலும், குறித்த
 சம்பவத்தால் உயிரிழந்த இருவரின் உடல் பாகங்கள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அறிக்கைகள் கிடைத்த பின்னரே அதை உறுதிப்படுத்த 
முடியும் என்றும் கராப்பிட்டி மருத்துவமனை உதவி நீதித்துறை மருத்துவ அதிகாரி ருவான் நானாயக்கார கூறுகிறார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மாடு மேய்க்கும் இலங்கைப் பெண் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார்

கடந்த 2003 ஆம் ஆண்டு பௌத்தம் மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம்   பெற்ற     இலங்கைப்பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார்.
கலஹா - பெல்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான சாலிக்க நவோதனி என்ற பெண்ணே, பட்டம் பெற்று கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து
 வருகின்றார்.
குறித்த பெண்ணின் வீடு மிகவும் பழமையானதாகவும், அடிப்படை வசதிகளற்றதாகவும் காணப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் குப்பி விளக்குகளை வைத்துக்கொண்டே கல்வி நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தனது இளங்கலை சான்றிதழை வீட்டின் சுவரில் தொங்கவிட்டுள்ள குறித்த பெண், கணவனுக்கு உதவியாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு
 வருகின்றார்.
தொழில் பெறுவதற்காக பல பரீட்சைகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் அவருக்கு எந்த தொழிவாய்ப்பும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை உயர் கல்வி படிப்பதற்காக தன் கணவர் செலவுகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதன்மூலம் எந்தவித பிரதிபலனும் கிடைக்கவில்லை. ஆனால் கணவனுக்கு உதவ வேண்டும் என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
என்னுடைய கல்வியை வைத்து கணவனுக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும் அவருடைய தொழிலுக்காக என்னால் உதவ முடியும் என குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய வலியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே சுவரில் பட்டம் பெற்ற சான்றிதழை தொங்கவிட்டுள்ளதாக குறித்த பெண் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 1 ஜூலை, 2016

இரட்டை பிரஜாவுரிமை 20 ஆயிரம் பேருக்கு !

இந்த ஆண்டு இறுதிக்குள் 20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி 1700 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த அரசாங்கத்தினை போன்று இல்லாமல் மிகவும் நேர்மையான முறையில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் இயல்பாகவே தமது இலங்கை பிரஜாவுரிமையை இழந்து விடுகின்றனர்.
எனவே, இவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் இலங்கைக்கான பிரஜாவுரிமையினை பெற முடியுமென அவர் 
கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில், இடம்பெற்ற யுத்தம் காரணமாக , கல்வித் தகைமை மற்றும் தொழில்துறையில் தேர்ச்சிபெற்ற பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறியவர்களினது, அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பு நாட்டிற்கு அவசியமாகின்றது. எனவேதான், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இரட்டை பிரஜாவுரிமை வழங்கலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 27 ஜூன், 2016

பீடி துண்டு பொலிஸ் உத்தியோகத்தருக்கு வழங்கிய உணவுக்குள் !

காத்தான்குடியில் ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட றோல் சாப்பாடு ஒன்றுக்குள் பற்ற வைக்கப்பட்ட பீடித் துண்டு காணப்பட்டதால் காத்தான்குடி சுகாதார பரிசோதகர்கள் ஹொட்டலை
 மூடி சீல் வைத்துள்ளனர்.
காத்தான்குடி பிரதான வீதி ஆறாம் குறிச்சியிலுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவிலேயே அவ்வாறு பீடித்துண்டு காணப்பட்டுள்ளது.
குறித்த ஹொட்டலுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாப்பிட்ட உணவிலேயே குறித்த பற்ற வைக்கப்பட்ட பீடி 
காணப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லா தலைமையில் சென்ற குழுவினர் குறித்த ஹொட்டலை பரிசோதனை செய்ததுடன் இன்று ஹொட்டலை மூடி சீல் வைத்துள்ளனர்.
குறித்த ஹொட்டல் உரிமையாளரை உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஏ.எல்.றஹ்மத்துல்லர் 
தெரிவித்தார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 11 ஜூன், 2016

விமான நிலைத்தில், பயணிகளிடம் கொள்ளையிட்டவர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலயத்தில் பயணிகளை ஏமாற்றி கொள்ளையிட்ட இருவர் கைதுவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை ஏமாற்றி போக்குவரத்து வசதிகளை செய்து தருவதாக கூறி குளிர் பானங்களில் போதைப பொருளை கலந்து கொடுத்து பயணிகளின் பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையிட்டு வந்த சந்தேக நபரையும் , சந்தேக நபரின் காதலியையும் கட்டுநாயக்க பொலிஸார்
 கைது செய்துள்ளனர்.
நீரகொழும்பு கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த சிசிர குமார (28 வயது), சந்தேக நபரின் காதலியான 23 வயது யுவதியுமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
சந்தேக நபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுடன் விமான நிலையத்தில் வைத்து சுமுகமான முறையில் பழகி அவர்கள் பயணிப்பதற்கு போக்குவரத்து சேவையை வழங்குவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று இடை நடுவில் வைத்து கடையில் குளிர் பானத்தை வாங்கி அவற்றில் போதைப் பொருளை கலந்து 
கொடுத்துள்ளனர். 
பயணிகள் போதையில் மயங்கிய பின்னர் அவர்களின் பணத்தையும் உடைமைகளையும் சந்தேக நபர்கள் அபகரித்துக் கொண்டு பயணிகளை அந்த இடத்தில் விடடுச் செல்வதாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கடந்த இரண்டாம் திகதி சந்தேக நபர்கள் பயணிக்ளை ஏமாற்றி அழைத்துச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் அவர்களின் வாகனத்தை சோதனை 
செய்துள்ளனர். 
அதன்போது அந்த வாகனத்தில் போதைப் பொருள் கலந்துள்ளதாக கருதப்படும் பான வகை அடங்கிய போத்தலை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 25 மே, 2016

பொலிஸார் மறைத்து வைக்கப்பட்டிருந்த உர மானிய மூட்டைகள் கண்டுபிடிப்பு!

மானியமாக வழங்கப்பட இருந்த 150 உர மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹொரவபொத்தானை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹொரொவப்பொத்தான பகுதியில் ஒரு களஞ்சியசாலையில் இந்த உர மூட்டைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்பாக விவசாய அதிகாரி ஒருவருடன் மேலும் நான்கு பேரை தாம் கைது செய்துள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 22 மே, 2016

இளம் யுவதி பொகவந்தலாவையில் தற்கொலை!

பொகவந்தலாவ - ஆரியபுற பகுதியில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த சம்பவம் நேற்று (21) சனிகிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 
குறித்த மாணவி கடந்த மாதம் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்தநிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கும் குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கும் காதல் உறவு இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து 
தெரியவந்துள்ளது. 
சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 11 மே, 2016

நேற்று மாலை மின்னல் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் பலி

பதுளை மடுல்சீமை கல்வுல்ல மெட்டிக்காத்தன்னை பகுதியில் பெண் ஒருவர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
கணவனும் மனைவியும் வீட்டிலிருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 7 மே, 2016

விரைவில் சவுதியில் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ள தமிழர்கள் இலங்கைக்கு!

சவூதி அரேபியாவில், முகாம்களில் இருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிற்கு சென்று பல்வேற காரணங்களால் நிர்க்கதிக்குள்ளாகிய நிலையில் நாட்டுக்கு வர முடியாமல், அந்த நாட்டு நலன்புரி முகாம்களில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கு சவூதி அரசாங்கம் இணக்கம் 
தெரிவித்துள்ளது.
வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா அண்மையில் சவூதி அரேபியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அந்த நாட்டு தொழில் மற்றும் உள்துறை பிரதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக சவூதி அரேபியா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதுதவிர சவூதி அரேபியாவில் பணி புரியும் இலங்கையர்கள் குறித்த தகவல்களை இலங்கையுடன் அவ்வப்போது பரிமாறிக்கொள்ளவும், இலங்கையர்களின் நலன்புரி விடயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்தும் அந்த நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அத்துடன் அந்த நாட்டின் சமூக சேவைகள் அமைச்சர் மற்றும் பொது சுகாதார பிரதியமைச்சர் ஆகியோருடனும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
சவூதியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள, மருத்துவ உதவி தேவைப்படும் இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குதல் மற்றும் சவூதியில் இறந்து போகும் இலங்கையர்களின் உடல்களை இலங்கைக்கு விரைவாக எடுத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது என்பன குறித்தும் இந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 30 ஏப்ரல், 2016

மே தினத்தில் 18 கூட்டங்களும் 17 ஊர்வலங்களும் நிகழ்வு !

உழைக்கும் மக்களை கௌரவப்படுத்தும் முகமாக சிறீலங்காவின் அனைத்து இடங்களிலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது கிடைத்திருக்கும் தகவலினடிப்படையில் 18 இடங்களில் கூட்டங்களும் 17 இடங்களில் ஊர்வலங்களும் நடைபெறப் போவதாகவும் இந்த இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு, காலி உட்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளதுடன் இதுவரை 6500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி,
சிறீலங்கா சுதந்திரக்கட்சி
‘நாட்டை வெல்லும் கரம் உலகம் வெல்லும் நாளை’ என்ற தொனிப்பொருளில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து கால சமன விளையாட்டு மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு மேதினக் கூட்டத்தை நடாத்தவுள்ளன.
ஐக்கியதேசியக் கட்சி
சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டத்தை நடாத்தவுள்ளது.
‘அர்ப்பணிக்கும் மக்களுக்கு புதிய நாடு’ எனும் தொனிப்பொருளில் தொழிலாளர் தினம் அனுட்டிக்கப்படவுள்ளதுடன், ஊர்வலம் மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்திலிருந்து காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் கொழும்பு பி.ஆர். சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த பேரணியானது, தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க பாடசாலை முன்பாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகிந்த ஆதரவு அணி
மகிந்த ஆதரவு அணியின் மேதினக் கூட்டம் கிருலப்பனையில் நடைபெறவுள்ளது. இதில் 100 தொழிற்சங்கங்களும் 10 கட்சிகளும் பங்குபற்றவுள்ளதோடு மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 16 பேர் உரையாற்ற உள்ளனர். ஊர்வலம் சாலிகா விளையாட்டரங்கில் ஆரம்பித்து கிருலப்பனை மைதானத்தை அடையவுள்ளது.
ஐக்கிய சோசலிசக் கட்சி
ஐக்கிய சோஷலிச கட்சியின் மே தின கூட்டம் கொஸ்கஸ் சந்தியில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
சுயாதீன தொழிற்சங்க கூட்டணி
சுயாதீன தொழிற்சங்க கூட்டணியின் மே தின கூட்டம் முத்தையா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக்கூட்டம் பருத்தித்துறையில் தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடை பெற்றது 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 30 ஜனவரி, 2015

அதிரடி விலைக் குறைப்பு மா.சீனி..பால்மா!!

வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல் 
இன்று முதல் விலை குறைக்கப்படும் பொருள்களின் விபரம்
இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் மா, சீனி, பால்மா உள்ளிட்ட 13 பொருள்களின் விலைகள்
  சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
 400கிராம் பால்மா 61  ரூபாவால் குறைக்கப்பட்டு 325 ரூபாவுக்கு விற்பனை
 சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும்
 நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
 கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு 
 மாசிக் கருவாடு ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு  
 பாணின் விலை 6 ரூபாவால் குறைப்பு மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு
 நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும். பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 
 வீதத்தால் குறைக்கப்படும்
ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா 
 விவசாயிகளின் நலன் கருதி பசும்பாலின் விலை 10 ரூபாவாக உயர்த்தப்படும்
 விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மானியம் வழங்கப்படும்
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் 
 கர்ப்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்  
 வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்
 பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 17 அக்டோபர், 2013

ஆனையிறவு வரை பரீட்சார்த்த ரயில்


ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் இடம் பெற்று வருகின்றன.

ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுக் கடந்த மாதம் 14 ஆம் திகதி, கிளிநொச்சி வரை ரயில் சேவை விரிவாக்கப்பட்டது.

இதன் பின்னர் ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சியிலிருந்து. ஆனையிறவு வரையான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதனையடுத்து பரீட்சார்த்தமான ரயில் சேவை கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பளை வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் அந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

திங்கள், 14 அக்டோபர், 2013

இரண்டு பிள்ளைகளுடன் யாழ்.தேவியின் முன் பாய்ந்த தாய்


p'0கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம்  பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக மத்திய புகையிரதக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளார் இதன்போது தாயும் ஒரு மகளும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் தப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் வெயங்கொட, கீனவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலமும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.