siruppiddy

சனி, 30 ஏப்ரல், 2016

மே தினத்தில் 18 கூட்டங்களும் 17 ஊர்வலங்களும் நிகழ்வு !

உழைக்கும் மக்களை கௌரவப்படுத்தும் முகமாக சிறீலங்காவின் அனைத்து இடங்களிலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது கிடைத்திருக்கும் தகவலினடிப்படையில் 18 இடங்களில் கூட்டங்களும் 17 இடங்களில் ஊர்வலங்களும் நடைபெறப் போவதாகவும் இந்த இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு, காலி உட்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளதுடன் இதுவரை 6500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி,
சிறீலங்கா சுதந்திரக்கட்சி
‘நாட்டை வெல்லும் கரம் உலகம் வெல்லும் நாளை’ என்ற தொனிப்பொருளில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து கால சமன விளையாட்டு மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு மேதினக் கூட்டத்தை நடாத்தவுள்ளன.
ஐக்கியதேசியக் கட்சி
சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டத்தை நடாத்தவுள்ளது.
‘அர்ப்பணிக்கும் மக்களுக்கு புதிய நாடு’ எனும் தொனிப்பொருளில் தொழிலாளர் தினம் அனுட்டிக்கப்படவுள்ளதுடன், ஊர்வலம் மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்திலிருந்து காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் கொழும்பு பி.ஆர். சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த பேரணியானது, தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க பாடசாலை முன்பாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகிந்த ஆதரவு அணி
மகிந்த ஆதரவு அணியின் மேதினக் கூட்டம் கிருலப்பனையில் நடைபெறவுள்ளது. இதில் 100 தொழிற்சங்கங்களும் 10 கட்சிகளும் பங்குபற்றவுள்ளதோடு மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 16 பேர் உரையாற்ற உள்ளனர். ஊர்வலம் சாலிகா விளையாட்டரங்கில் ஆரம்பித்து கிருலப்பனை மைதானத்தை அடையவுள்ளது.
ஐக்கிய சோசலிசக் கட்சி
ஐக்கிய சோஷலிச கட்சியின் மே தின கூட்டம் கொஸ்கஸ் சந்தியில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
சுயாதீன தொழிற்சங்க கூட்டணி
சுயாதீன தொழிற்சங்க கூட்டணியின் மே தின கூட்டம் முத்தையா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக்கூட்டம் பருத்தித்துறையில் தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடை பெற்றது 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக