முல்லைத்தீவு அளம்பில் பிரதேசத்தில் இன்று மதியம் வெப்பம் தாங்க முடியாமல் பாம்பு ஒன்று முதியவர் ஒருவரின் குளியல் அறைக்குள் சென்று படுத்திருந்தது.
அதை அறியாத முதியவர் குளிக்கச் சென்ற போது பாம்பு அவரைத்தீண்டியுள்ளது. அளம்பில் பிரதேசத்தை சேர்ந்த முதியவர் பாம்பின் தீண்டலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த முதியவரை உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் இடையில் உயிரிழந்துள்ளார்.
தற்பொழுது மாவட்ட வைத்தியசாலையில் அவருடைய பூதவுடல் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் அதீக வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக