siruppiddy

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

“காதல் என்ன விளையாட்டப்போச்சா குறுப்படம்

சமூகத்துக்கு பிர‌யோஜனமான படைப்புகளை படைப்பதற்காக ஒவ்வாரு கலைத்துறையிலும் ஊடுருவி சென்றுக் கொண்டிருக்கின்றோம். ‌
அதில் ஒன்றுதான் இக்குறுந்திரைப்படம் குறித்த குறுந்திரைப்படமானது காதலித்த பின் ஏன் காதலித்தோம் என்ற வெறுப்பான உணர்வானது காதலித்த காதலித்துக் கொணடிருக்கின்ற காதலர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரு கேள்வியாகும்.
ஆகவே குறித்த உணர்வின் பிரதிபலிப்பு என்ன என்பத‌னை மையமாக வைத்தே குறித்த குறுந்திரைப்படமானது. எடுத்துயம்பியுள்ளது.
கண்டிப்பாக ஒவ்வொரு படைப்பின் வெளிச்சம் ஊடகங்ளே ஆகும் எனது இயக்கத்தில் உருவான .”காதல் என்ன விளையாட்டப்போச்சா”குறுந்திரைப்படத்தினை இணையத்தள வாயிலாக பிரசுவித்து ஆதரவினை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் எஸ்.ஏ .நிலான்
என்று தன் பதிவைத் தந்துள்ளார் எஸ்.ஏ .நிலான்
அதை இணையத்தில் இணைத்து நிற்பதோடுமட்டுமல்ல இது போன்ற படைப்புகளை இவர்கள் தொடர்ந்து எங்கள் ஈழத்துக்கலைவளர கலைலைஞர்சார்பில் வாழ்த்துக்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கொலையா…? தற்கொலையா..?பாடசாலை மாணவி?

 வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் வசித்து வரும் பாடசாலை மாணவி இன்று மதியம் 02.00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இன்று காலை 07.30 மணியளவில் தாயார் வேலைக்கு சென்ற போது வீட்டில் தனியாக இருந்த கரிஸ்னவி (வயது 13) மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

02.30 மணியளவில் தாயார் வீட்டிற்கு சென்ற போது தூக்கில் தொங்கிய தனது மகளை தூக்க கயிற்றினை கழற்றி மீட்டெடுத்தார். தாயார் அறைக்கு சென்று பார்த்த போது அறை முழுவதும் அலங்கோலமான நிலையில் காணப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக தாயார் கருத்து தெரிவிக்கையில்

இன்று காலை எனக்கம் எனத மகளுக்கும் ஏற்பட்ட கருத்த முரண்பாட்டினால் பாடசாலை செல்லாமல் விட்டில் தனியாக இருந்தார் நான் கடமை முடிந்து வீடு சென்று பார்க்கும் போது தூக்கில் தொங்கிய நிலையில்
 காணப்பட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஒஸ்லோவின் துணை முதல்வர் ஈழத்து தமிழ்ப்பெண்

ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் – ஒஸ்லோ – துணை நகர முதல்வர் பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் 
பெற்றிருக்கிறார்.
பதினெட்டு வருடங்களுக்குப் பின் ஒஸ்லோ ஆட்சியை மீண்டும் தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது. இதுபற்றி முன்பே பதிவிட்டிருக்க வேண்டும். தாமதம், இந்த நல்ல செய்தியைச் சேர்த்துப் பதிவிட
 வைத்துள்ளது.
பல்வேறு “புகழ்பெற்ற” தொழில்களை எமது இரண்டாம் தலைமுறையினர் (உண்மையில் பெற்றோர்கள்) தேடிக் கொண்டிருக்கையில் அரசியலைத் தனது முழுநேரப் பணியாக வரித்துக்கொண்ட கம்சி ஒஸ்லோ தொழிற்கட்சியின் துணைத் தலைவராக இளம் வயதிலேயே தெரிவானவர். இளைஞரணியில் தலைவராக இருந்து, கட்சியின் ஒஸ்லோ துணைத் தலைவராகப் பெரும் ஆதரவோடு தெரிவானவர்.
ஒப்பீட்டளவில் எம்மவர்கள் – குறிப்பாகப் பெண்கள் – அரசியலில் ஈடுபடுவது நோர்வேயைப் பொறுத்தவரை மிகக் குறைவு. பாகிஸ்தானியப் பின்னணி கொண்ட பெண்கள் பலர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, ஒருவர் கலாசார அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தாய்நாட்டை நோக்கிய அரசியற் செயற்பாட்டில் இருந்த ஈடுபாடு, எம்மிற் பலருக்கு இந்த நாட்டின் தேசிய அரசியலில் இருக்கவில்லை என்பதே
 உண்மை.
இரண்டிலும் சரியான அக்கறையோடு பங்கேற்று இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் கம்சாயினி. ஒஸ்லோவில் மூன்றாம் இடத்தில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் அவர் வென்றார் என்பது அவரது உழைப்புக்கு வாக்காளர்கள் கொடுத்த பரிசன்றி 
வேறென்ன?
பாரம்பரியமாகத் தமிழர்கள் தெரிவு செய்யும் கல்வி – தொழிலைத் தெரிவு செய்யாமல், அரசியலில் முன்னோடியாக வர அவரை ஊக்குவித்த பெற்றோரையும், அடிக்கும் அலையோடு அள்ளுண்டு போகாமல், இந்தத் துறையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி சூடியுள்ள கம்சாயினிக்கும் மனம் நிறைய வாழ்த்துகள்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

உன்னத கண்டுபிடிப்பு விமானவிபத்துக்களில் உயிர்களைக்காப்பது

இன்றைய உலகில் விரைவான பயணங்களுக்கு எத்தனையோ கண்டுபிடிப்புக்களை விஞ்ஞானம் தந்திருக்கின்றது. பல ஆயிரம் மைல்களை சிலமணி நேரத்தில்  பயணிப்பதற்கு விமானச்சேவை 
முக்கியமானதாகின்றது.
இருப்பினும் இதன்போது இழந்த உயிர்கள் விலைமதிப்பற்றது. இதற்கும்  விஞ்ஞானம்  விடை தந்திருக்கின்றது  இந்தக்காணொளியில்…. நீங்கள் காண்பீர்கள்  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பொதுவாக பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவை !!!

நீங்கள் ஒவ்வொரு வயதை கடக்கும் போதும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். பொதுவாக இருபதுகள் வரை துடுக்கான வயது, உடல் வலிமை ஒவ்வொரு வயதுக்கும் அதிகரித்துக் காணப்பட்டிருப்பீர்கள்.
ஆனால், முப்பதை கடந்து நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என இனிக் 
காண்போம்…
முப்பது வயதை தொட்டவுடன் முதலில் தென்படும் மாற்றம் சருமத்தில் சுருக்கம்.
இது பெண்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில், பெண்களுக்கு எப்போதுமே அழகில் சற்று அதீத ஈர்ப்பு இருக்க தான் செய்யும்.
முப்பது வயதுக்கு பிறகு பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புவோர் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு மெல்ல மெல்ல கருவளம் குறைய 
ஆரம்பிக்கிறது.
முப்பது வயதுக்குக் பிறகு சில பெண்களுக்கு மோசமான மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பிடிப்புகள், ஐந்து நாட்களும் கடினமாக இரத்தப் போக்கு ஏற்படுவது போன்ற சிக்கல்கள் சில பெண்களுக்கு
 ஏற்படலாம்.
முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு வளர்சிதை மாற்றம் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பிக்கும். இந்த வயதில் இருந்தாவது பெண்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையும் வரும். சிறுநீரக பை வலுவிழப்பு மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கின்றன.
முகத்தில் சுருக்கம் ஏற்படுவதற்கு அடுத்து, வெளிப்படையாக தெரியும் இரண்டாவது பெரிய மாற்றம் நரைமுடி. பேயை விட இதற்கு தான் பெண்கள் அதிகமாக பயந்து நடுங்குகிறார்கள்.
முப்பது வய்துக்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் தருவது போன்ற காரணங்களினால் மார்பகங்கள் இறுக்கம் குறைந்து தொங்குவது போல உருமாறும்.
பதின் வயது முதலே செல்லமாக வளர்த்த நகங்கள் இப்போது பெண்கள் சொல்லும் வார்த்தைக்கு மதிப்பளிக்க மறுக்கும். நகங்களை அழகுப்படுத்துவது சற்று கடினமாகும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், நகங்களின் வலு குறைந்துவிடும், எளிதாக உடைந்துவிடும்.
பொதுவாகவே பெண்களை போலவே அவர்களது உடலும் மென்மையானது. இதில், முப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு காயங்கள் சீக்கிரமாக ஆறாது. எனவே, இதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வேலை பளு, பிள்ளை வளர்ப்பு, எலும்பில் தேய்மானம் ஏற்பட ஆரம்பிப்பது என பல காரணங்களால் இடுப்பு வலி அடிக்கடி 
வந்து போகும்.
இந்த பட்டியலில் இருக்கும் எந்த மாற்றத்தை பற்றியும் ஆண்கள் பெரிதாய் கவலை அடைவதில்லை. ஆனால், இவற்றால் தங்கள் மீது இருக்கும் ஆர்வம், ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்று பெண்கள் சற்று கவலை 
அடைகிறார்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>