siruppiddy

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்



எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


திங்கள், 1 ஏப்ரல், 2013

கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


பிரான்சில் பாரிஸ் நகரத்திற்கு வெளியே ஆபர்வில்லியர்ஸ்(Aubervilliers) என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய ஏழுமாடிக் குடியிருப்பு கட்டிடத்தை ஆக்கிரமித்து பலர் குடியேறி உள்ளனர்.
இந்தக் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கம்.
கடந்த சனிக்கிழமையன்று இரவில் மூன்றாவது மாடியில் இது போன்று இரண்டு கோஷ்டியினர்களும் சண்டை போட்டுக் கொண்டிருந்தபொழுது யாரோ ஒருவர் பெட்ரோல் குண்டை கட்டிடத்திற்குள் வீசியுள்ளார்.
இதனால் கட்டிடம் தீப்பிடித்து மளமளவென அனைத்து பகுதிகளிலும் பரவியது. உடனே வீடுகளில் இருந்து சில மக்கள் ஓடி வந்து சன்னல் வழியாக கீழே குதித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் மூன்று பேர் மரணம் அடைந்தனர். மற்றும் 13 பேர் படுகாயமுற்றனர். மேலும் படுகாயமுற்ற அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

பயிற்சி விமானங்கள் நொருங்கியதில்


சீனாவின் கிழக்கு பகுதி ஷாண்டோங் மாகாணத்தில் நேற்று மதியம் சூ-27 ஜெட் வகை போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு பைலட்கள் இறந்தனர்.
இதை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதனால் தரையில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவிடமிருந்து 1992-லிருந்து இதுவரை இந்த ரகத்தைச் சேர்ந்த 40 ஜெட் போர் விமானங்களை சீனா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

 

கேக்கை சாப்பிடாமல் பத்திரப்படுத்தும் குடும்பத்தினர


இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் வசிக்கும் நான்சி (94) என்ற பெண் 192 ஆண்டுகள் பழமையான ‘கேக்' ஒன்றை மிகவும் பாதுகாத்து வருகிறார்.
நான்சியின் கொள்ளுத்தாத்தா வில்லியம் ஸ்கிம்னர் என்பவர் லண்டன் நகரில் 18-ம் நூற்றாண்டில் பேக்கரி நடத்தி வந்திருக்கிறார். அப்போது 1821-ம் ஆண்டில் புனித வெள்ளிக்கிழமை நினைவாக இந்த ‘கேக்'கை தயாரித்துள்ளார்.
அன்று முதல் அதை ஒரு நினைவுப் பொருளாக அட்டைப்பெட்டியில் வைத்து இந்த குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். இது பற்றி நான்சி கூறுகையில், 'இதை எனது தாயாரிடம் இருந்து பெற்று பாதுகாக்கிறேன். இந்த புனிதமான மெதுரொட்டியை (கேக்) புனித வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டுமே திறந்து பார்ப்போம். மற்ற நாட்களில் பெட்டிக்குள்ளேயே வைத்து விடுவோம்' என்கிறார்.
192 ஆண்டு காலம் ஆனாலும் இது பாதுகாப்பாக இருக்க எளிதில் கெட்டுப்போகாத ஏதோ ஒரு பொருளைக் கொண்டு தயாரித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கேக்கிற்கு மேலும் பல சிறப்புகளும் உண்டாம்.
இதன் மேற்பரப்பில் சிலுவை அடையாளம் பொறிக்கப்பட்ட இந்த கேக் 5 தலைமுறையினரிடம் கைமாறி இருக்கிறது. இத்தனை காலம் ஆனாலும் மக்கி கெட்டுப்போகாமல், தயாரிக்கும் போது எப்படி நறுமணம் வீசியதோ அதே போன்றே இப்போதும் காட்சி தருகிறது