இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் வசிக்கும் நான்சி (94) என்ற பெண் 192 ஆண்டுகள் பழமையான ‘கேக்' ஒன்றை மிகவும் பாதுகாத்து வருகிறார்.
நான்சியின் கொள்ளுத்தாத்தா வில்லியம் ஸ்கிம்னர் என்பவர் லண்டன் நகரில் 18-ம் நூற்றாண்டில் பேக்கரி நடத்தி வந்திருக்கிறார். அப்போது 1821-ம் ஆண்டில் புனித வெள்ளிக்கிழமை நினைவாக இந்த ‘கேக்'கை தயாரித்துள்ளார்.
அன்று முதல் அதை ஒரு நினைவுப் பொருளாக அட்டைப்பெட்டியில் வைத்து இந்த குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். இது பற்றி நான்சி கூறுகையில், 'இதை எனது தாயாரிடம் இருந்து பெற்று பாதுகாக்கிறேன். இந்த புனிதமான மெதுரொட்டியை (கேக்) புனித வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டுமே திறந்து பார்ப்போம். மற்ற நாட்களில் பெட்டிக்குள்ளேயே வைத்து விடுவோம்' என்கிறார்.
192 ஆண்டு காலம் ஆனாலும் இது பாதுகாப்பாக இருக்க எளிதில் கெட்டுப்போகாத ஏதோ ஒரு பொருளைக் கொண்டு தயாரித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கேக்கிற்கு மேலும் பல சிறப்புகளும் உண்டாம்.
இதன் மேற்பரப்பில் சிலுவை அடையாளம் பொறிக்கப்பட்ட இந்த கேக் 5 தலைமுறையினரிடம் கைமாறி இருக்கிறது. இத்தனை காலம் ஆனாலும் மக்கி கெட்டுப்போகாமல், தயாரிக்கும் போது எப்படி நறுமணம் வீசியதோ அதே போன்றே இப்போதும் காட்சி தருகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக