பிரான்சில் பாரிஸ் நகரத்திற்கு வெளியே ஆபர்வில்லியர்ஸ்(Aubervilliers) என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய ஏழுமாடிக் குடியிருப்பு கட்டிடத்தை ஆக்கிரமித்து பலர் குடியேறி உள்ளனர்.
இந்தக் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கம்.
கடந்த சனிக்கிழமையன்று இரவில் மூன்றாவது மாடியில் இது போன்று இரண்டு கோஷ்டியினர்களும் சண்டை போட்டுக் கொண்டிருந்தபொழுது யாரோ ஒருவர் பெட்ரோல் குண்டை கட்டிடத்திற்குள் வீசியுள்ளார்.
இதனால் கட்டிடம் தீப்பிடித்து மளமளவென அனைத்து பகுதிகளிலும் பரவியது. உடனே வீடுகளில் இருந்து சில மக்கள் ஓடி வந்து சன்னல் வழியாக கீழே குதித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் மூன்று பேர் மரணம் அடைந்தனர். மற்றும் 13 பேர் படுகாயமுற்றனர். மேலும் படுகாயமுற்ற அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக