siruppiddy
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 அக்டோபர், 2023

வீட்டில் ஏன் முருங்கை மரம் வளர்க்க கூடாது காரணத்தை அறிந்திடுவோம்

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பதில்லை. காரணம் நமது முன்னோர்கள் முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது நமது முன்னோர்களின் 
கருத்து இதை பின்பற்றும் நோக்கில் உண்மையான காரணமே தெரியாமல் நம்மில் பலரும் முருங்கை மரத்தை வீட்டில் 
வளர்ப்பதில்லை.
இப்படி நமது முன்னோர்கள் சொல்லி வைக்க உண்மையான காரணம் என்னவென்று எப்போதாவது உங்களுக்குள் கேள்வி எழுந்கிருக்கிறதா? அதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
காரணம் என்ன? 
பொதுவாக மற்ற மரங்களுடன் ஒப்பிடும் போது முருங்கை மரம் சற்று உறுதியற்ற மரமாக காணப்படுகின்றது. அதனை வீட்டில் வளர்த்தால் மழைக்காலங்களில் சில சமயம் இதன் கிளைகள் முறிந்து வீட்டை சேதப்படுத்தக்கூடும்.
வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம்
 என்ன தெரியுமா?
ஒரு தற்காப்பு கருதியே அதனை வீட்டில் வளர்க்க கூடாது என சொல்லியிருக்கின்றார்கள். முருங்கை மரம் வளர்த்தால் வீட்டில் சிறுவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த மரத்தில் ஏறி விளையாடக்கூடும் முருங்கை மரம் உறுதியற்றது என்பதால் கிளைகள் முறிந்து அவர்கள் கீழே விழும் வாய்ப்பு அதிகம் இதனால் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு ஆபத்து என்பதும் ஒரு காரணம்.
முருங்கை மரத்தில் அதிகமாக கம்பளி பூச்சிக்கள் உற்பத்தியாகும் இது உடலில் பட்டாலே அரிப்பை ஏற்படுத்தும் விஷ தன்மை 
வாய்ந்தது.
முருங்கை மரத்தை வீட்டின் அருகில் வைத்தால் இந்த பூச்சிகள் வீட்டினுள் வர வாய்ப்பு அதிகம் அதனால் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆபத்து இதனாலேயே முருங்கை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள்.  என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 24 அக்டோபர், 2022

கணவன் மனைவி கூட நீங்க சண்டை போடாமால் சந்தோஷமா வாழணுமா?


காதலில் இருப்பது ஒரு அற்புதமான உணர்வு. நிலையான உற்சாகம், ஒருவருக்கொருவர் ஏங்குதல், அவ்வப்போது சண்டை போடுவது, பின்னர் ஒருவரை நினைத்து ஒருவர் உருகுவது. இவை அனைத்தும் 
அன்பை ஒரு சமதளம் நிறைந்த மற்றும் 
மகிழ்ச்சிகரமான 
சவாரி ஆக்குகின்றன. மேலும், ஒரு காதல் உறவு ஒரு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான ஒன்றாக மாற்றுவதற்கு நிறைய முயற்சிகள், தியாகங்கள், சமரசங்கள் மற்றும் புரிதல்கள் 
தேவைப்படுகிறது.
ஒரு உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க அந்த உறவில் காதல் அவசியமாகிறது. நீங்கள் எப்போதும் ஆபத்தை ஏற்படுத்த விரும்பாத உறவில் இருந்தால், உங்களுக்கு உதவக்கூடிய சிறந்த ஆலோசனைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
அனைவருக்கும் ஒரு முறிவு புள்ளி இருப்பதை உணர வேண்டியது மிகவும் முக்கியம். மேலும் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அல்லது மற்றவர்களால் பார்க்கப்படுவதை அவர்கள் உணரவில்லை என்றால், அவர்கள் அதை வேறு எங்காவது கண்டுபிடிப்பார்கள். எனவே, உங்கள் பங்குதாரர் பாராட்டப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உணர
 வேண்டியது அவசியம்.
தொடர்ச்சியான விமர்சனங்களிலிருந்து விலகி, அதற்கு பதிலாக நேர்மறையான வலுவூட்டலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தம்பதிகள் ஒருவருக்கொருவர் விரும்பாத அளவுக்கு வளரும் அபாயத்தைக் குறைக்கிறார்கள். கூடுதலாக, சிறிய பாராட்டுக்கள் அல்லது சைகைகள் கூட ஒருவருக்கொருவர் உங்கள் அன்பைக் காட்ட ஒரு 
சிறந்த வழியாகும்.
அன்பான உறவுகள் என்பது நமது தேவைகளை பூர்த்திசெய்து, நமது கூட்டாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு செயல்முறையாகும். அந்த பரிமாற்றம் பரஸ்பரம் திருப்தி அளிக்கும்போது, நல்ல உணர்வுகள் தொடர்ந்து பாய்கின்றன. அது இல்லாதபோது, விஷயங்கள் புளிப்பாக மாறும், உறவு முடிகிறது.
ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை பற்றி மட்டுமே பேசுங்கள், விவாதியுங்கள். ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளை எல்லாம் சுற்றி வளைப்பது உங்களுக்கு எங்கும் கிடைக்காது. இது செயல்படுத்த மிகவும் கடினமான ஒன்றாகும் என்றாலும், அது உண்மையில் மதிப்புக்குரியது. இது உண்மையில் ஒரு சண்டையைத் தீர்ப்பது மிகவும் 
எளிதாக்குகிறது.
நன்றியுணர்வு என்பது மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம். உங்கள் பங்குதாரர் உங்களுக்காக தொலைதூர தன்னலமற்ற மற்றும் தயவான ஒன்றைச் செய்யும் தருணங்களைக் கவனியுங்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள். நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்காத விஷயங்களை ஒப்புக் கொள்ளுங்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 19 அக்டோபர், 2022

விரைவில் சிங்கப்பூரில் வண்டுகள், பூச்சிகளை சாப்பிட அனுமதி வழங்க பரிசீலனை

சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அ
ரசு கருத்து கோரியுள்ளது. 
இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக 
உட்கொள்ள முடியும். 
இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. பூச்சிகளை உனவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது. 
முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
சமீபகாலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்வதற்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிகரீதியான பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு
 ஊக்குவித்து வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 19 ஆகஸ்ட், 2020

நீங்கள் இந்த ராசியா சிம்மத்திலும் மேஷத்திலும் இடம்பெறப் போகும் மாற்றம்

ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் கம்பீரமாக ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். கூடவே புதன் இணைவும் அற்புதமாக அமையப்போகிறது.ஆவணி மாதத்தின் மத்தியில் சுக்கிரன் கடகம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். புதன் பகவான் மாத 
பிற்பகுதியில் சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி உச்சம் பெற்று அமர்வதும் சிறப்பு.மாத
 இறுதியில் குருபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் மேஷத்தில் ஆட்சி பெற்றிருக்கும் செவ்வாய் மாத இறுதியில் வக்ரகதியில் சஞ்சரிப்பார்.ஆவணி மாதத்தில் ஆட்சி பெற்ற கிரகங்களின் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகமும், திடீர் அதிர்ஷ்டமும் வரப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்:செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே ஆவணி மாதம் அற்புதங்கள் நிகழபோகிறது. அரச 
கிரகங்கள் ஆட்சி பெற்று 1,5,9ஆம் வீட்டில் அமர்ந்துள்ளன. புத்திர பாக்கியம் கிடைக்கப் போகிறது. திருமண தடை ஏற்பட்டு வந்தவர்களுக்கு நிச்சயம் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். சுக்கிரன் 3 மற்றும் நான்காம் வீட்டில் பயணிப்பதால், மாத பிற்பகுதியில் செவ்வாய் பார்வை கிடைக்கிறது.
வக்ர சனியை 
சுக்கிரன் பார்வை படும் போது சந்தோஷங்கள் அதிகரிக்கும். குரு பகவான் வக்ர நிவர்தியடைந்து உங்க ராசியை முழுமையாக பார்ப்பதால் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் முழுமையாக கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள புதன் மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்று அமரப்போகிறார்.சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் லாபம் கிடைக்கும். இந்த மாதம் வண்டி
 வாகனம் வாங்கலாம்.தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் விசயத்தில் கவனமாக இருங்க. புதிய கலைகளை கற்றுக்கொள்ளலாம். மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதம். லாபமும், செல்வ வளமும் நிறைந்த மாதமாக ஆவணி மாதம் அமைந்துள்ளது. சூரியனும் புதனும் இணைந்து நல்ல மாற்றத்தை கொடுப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பிரச்சினைகள் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். அரசு வேலைகள் தேடி வரும்.
ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட
 ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வருகிறது. சுக்கிரன் இடப்பெயர்ச்சியும் செவ்வாயின் பார்வையும் இணைந்து உங்களுக்கு பண வருமானத்தை கொடுப்பார்கள்.அதி சுகாதிபதியும் 12ஆம் அதிபதியும் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகத்தை
 கொடுப்பார்கள். உங்களுக்குள் இருக்கும் ரகசியத்தை காப்பாற்ற முடியாமல் தவிப்பீர்கள் கவனமாக இருங்க அதுவே பிரச்சினையாகி விடும். புதிய வேலைக்கு முயற்சி பண்ணுங்க அதை கிடைத்த உடன் பழைய வேலையை விடலாம். இந்த மாதம் பதவி உயர்வும் சிலருக்கு 
தேடி வரும்.உங்களின் நீண்ட கால கனவு நிறைவேறும். பரிசும் பாராட்டும் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக ஆவணி மாதம் அமைந்துள்ளது. கணவன் மனைவி இடையை 
சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும் விட்டுக்கொடுத்து போங்க. மாணவர்களுக்கு மனதுக்கு பிடித்த கல்லூரியில் பிடித்த பாடத்தை படிக்க இடம் கிடைக்கும்.மிதுனம்:புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு உங்க ராசியில் இருக்கும் கூட்டணி பிரிகிறது. ராகு உடன் இணைந்துள்ள சுக்கிரன் பிரிந்து இரண்டாம் வீட்டிற்கு
 நகர்கிறார்.மூன்றாம் வீட்டில் சூரியனுடன் இணைந்துள்ள புதன் பகவான் மாத பிற்பகுதியில் பிரிந்து தனது வீடான கன்னி 
ராசியில் சென்று ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பு. புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் மாற்றங்களினால் நல்ல
 லாபம் கிடைக்கும்.
வரப்போகும் நாட்கள் எல்லாம் நல்ல நாட்களே, உங்க முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். உங்க லாப ஸ்தான அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். ஏழாம் வீட்டில் உள்ள குரு வக்ரநிவர்த்தி அடைந்து பரிபூரணமாக
 உங்க ராசியை பார்க்கிறார். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமணப்பேச்சுவார்த்தைகள் சுபமாக 
முடியும். திருமணம் முடிந்த தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிறைய 
உற்சாகமாக இருப்பீர்கள்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசிக்கு சுக்கிரன் வருவது சிறப்பு. ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டில் உள்ள புதன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு சென்று தனது வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று சஞ்சரிப்பார். குருவின் வக்ர
 நிவர்த்தியும் உங்க ராசியில் உள்ள சுக்கிரனின் பார்வை ஏழாம் வீட்டில் உள்ள சனிபகவான் மீது விழுவதாலும் பல அற்புதங்கள் நிகழப்போகிறது.இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. இந்த மாதம் உங்களுக்கு 
வரக்கூடிய நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. மாத பிற்பகுதியில் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வரவு வரும்.உங்களுக்கு வரக்கூடிய பணத்தை சேமிக்கத் தொடங்குங்கள். கோபம் வேண்டாம் எந்த பிரச்சினை என்றாலும் கவனமாக 
கையாளுங்கள். இல்லத்தரசிகள் சந்தோஷமாக இருப்பீர்கள் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உங்களின் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடி வரும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம். வேலைக்கு 
பெண்கள் எதிராளிகளுடன் பழகும் போது கவனமாக இருங்க வீண் பழியில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். வீர ஆஞ்சநேயரை வணங்குங்கள் பாதிப்புகள் 
நீங்கி நல்லது நடக்கும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 23 ஜூன், 2016

உலக சாம்பியன் பட்டத்தை ஈழத்து சிறுவன்க ராத்தே வென்றான்!

தாயகத்தை  சேர்ந்த  திரு அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், 2016 ஆண்டுக்கான கராத்தே உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் வல்வையை சேர்ந்த அகிலன் கருணாகரன் அவர்கள் அயர்லாந்தில்(டப்ளின்) 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை நடந்த கராத்தே உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.
இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் 
பெற்றுக் கொண்டார்.
2014ல் போலந்து நாட்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் இவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
2015ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இவர் kumite விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கலபதக்கங்களை பெற்றுக் கொண்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 20 ஜூன், 2016

தமிழ் மக்களுக்கு பெருமைசேர்த.சிறுமி செல்வி அகல்யா

6வது உலக கராத்தே அனைத்துவயதினருக்குமான சம்பியன் போட்டி அயர்லாந்து நாட்டில் 16/06/2016 தொடக்கம் 19/06/2016 நாள் வரையும் நடைபெறுகிறது . 17/06/2016 அன்று ஈழத்தமிழ் சிறுமி செல்வி அகல்யா சிவகுமார் பங்குபற்றி இரண்டாவது இடத்தை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
அதுபற்றிய சிறு காணொளிப்பு 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 13 ஜூன், 2016

கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள்

பெண்கள் கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் கருப்பையில் ஏற்படும் நீர் கோவை எனப்படும் நோயும் ஒரு காரணமாக உள்ளது. இந்நோய்க்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, பெண்களின் கருப்பையில் சிறிய பலநீர் கோவைகள்
உருவாகுவதை pcos(polycysticovarysyndrome) என்கிறோம். இது பெண்களின் ஈஸ்டிரோஜன், பிரஜட்டரான் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளால் ஏற்படும் பிரச்னை ஆகும். இந்நோயானது பெண்களின் மாதவிடாய் காலத்தில் சீரற்றநிலையை ஏற்படுத்துகிறது. மேலும் இது கருமுட்டை
 வெளிப்படாத சூழ்நிலையையும் ஏற்படுத்தும். முகம் மற்றும் உடலில் மாற்றங்களை
 ஏற்படுத்துகிறது. முக்கியமாக இந்நோய் ஏற்படின் கர்ப்பம் 
அடையும் நிலை மிகவும் குறைவு. பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு அதிக எடை, முகத்தில் அதிக முடி, மாதவிடாய் தடங்கல் ஏற்படும். இந்நோய் தாக்கத்தால் கருப்பையை சுற்றி பல நீர்க்கோவைகள் இருக்கும். இதனால் கருமுட்டை வளர்ச்சியடையாத சூழ்நிலை ஏற்படும். இப்பிரச்னை உள்ள 
பெண்களுக்கு,
 ஆண்களிடம் அதிகம் உள்ள ஹார்மோன்களான ஆன்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். எனவே தான் முகத்தில் முடி அதிகம் வளருகிறது. காரணம் என்ன? தகுந்த காரணம் துல்லியமாக தெரியா விட்டாலும் பல காரணங்களின் கூட்டு விளைவினால் தான் இது ஏற்படுகிறது என கருதப்படுகிறது. ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள், பரம்பரையில் உள்ளவர்களிடம் இந்நோய் இருத்தல், ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன்
 அதிகம்சுரப்பது.
 அறிகுறிகள் சீரற்ற மாதவிடாய், கருமுட்டை வெளியேறாத சூழ்நிலை, முகம், மார்பு, வயிற்றில் அதிக ரோமம் வளருதல், கழுத்து, முகத்தில் கறுப்பான திட்டுகள், கழுத்தை சுற்றி கருமை நிறம் காணப்படுதல். மார்பகம் சிறுத்து இருத்தல், குரலில் கரகரப்பும், ஆண் குரலை சார்ந்தும் 
இருத்தல். தலை முடி
 மெல்லியதாக இருக்கும். முகப்பரு, எண்ணெய் பதம் உள்ள முகம், அதிக எடை, இடுப்பு வலி, கோபம், மனஅழுத்தம் தென்படும். நோயினால் ஏற்படும் பிரச்னைகள் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பபை புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தூக்கத்தில் குறட்டை, கர்ப்பம் ஏற்பட்டாலும் எளிதில் கரு பதியாத படிகருகலையும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 31 மே, 2016

தங்கத்தை இடுப்புக்கு கீழ் ஏன் அணியக்கூடாது..?

தங்கமும் மகாலட்சுமியின் அம்சம். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்வார்கள். அல்லது கல்யாணம் ஆகி ஒரு பொண்வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் என சொல்வார்கள்.
ஏனென்றால், ஒரு பெண் ஒவ்வொரு வயதிலேயும் ஒவ்வொரு பருவத்தை எட்டுகிறாள். அந்த ஓவ்வொரு பருவத்திலும் மகாலட்சுமி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்வாள்.
கன்னியாக இருக்கும் போது காதுக்கு கீழ்பக்கம், கழுத்து பகுதியிலும், திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில், நேர் வகிட்டில் வாசம் செய்வாளாம் மகாலட்சுமி.
அதனால் தான் பெண்கள் தலை சீவாமல் இருக்க கூடாது. திருமணம் ஆனதும் நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும் என பெரியவர்கள்
 சொல்வார்கள்.
நல்ல மனமும், உதவி செய்யும் குணமும் கொண்ட எல்லா பெண்களும் எப்போதும் மகாலட்சுமியின் அம்சம் தான்.
அதேபோல் தங்கமும் மகாலட்சுமியின் அம்சம்தான். அதனால் தான் தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்பார்கள். அதேபோல் தங்க கொலுசு போடுவதும் தவறாகும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 28 மே, 2016

கவனக்குறைவாக செயல்பட்ட விமான ஓட்டிகளின் உரிமம் ரத்து!

கடந்த பிப்ரவரி 27, 2016 அன்று ஜெய்ப்பூரில் தரை இறங்க வேண்டிய இண்டிகோ 6E - 237 என்கிற விமானத்தின் விமான ஓட்டிகள், தாங்கள் தரை இறங்க வேண்டிய ரன் வே என்று நினைத்து ஜெய்ப்பூரின் ஒரு முக்கிய சாலையில் தரை இறங்க முயற்சித்திருக்கிறார்கள்.
விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த க்ரவுண்ட் ப்ராக்சிமிட்டி சென்சார் (Ground Proximity Censor) ஆபத்தான உயரத்தில் (போதுமான உயரத்தில் பறக்காதது) பறக்காததற்கு எச்சரிக்கை கொடுத்த பிறகு தான் விமானிகள் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதையில் 
சென்றிருக்கிறார்களாம்.
இப்படி கவனக்குறைவாக செயல்பட்டு, விமான பயணிகளின் உயிரை ஆபத்திற்குள்ளாக்கிய காரணத்திற்காக, அந்த விமானிகள் இருவருக்கும் பறப்பதற்கான உரிமத்தை டிஜிசிஏ (Directorate General of Civil Aviation) ரத்து செய்திருக்கிறது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



புதன், 25 மே, 2016

முல்லை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான போக்குவரத்தில் பாதிப்பு

முல்லைத்தீவில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்காக பொதுமக்கள் மேற்கொண்ட பயணத்தில் பல அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்புலவு வீதி புனரமைப்பு செய்யாத காரணத்தினால் இந்த பாதை குன்றும் குழியுமாக இருந்து பொதுமக்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


திங்கள், 2 மே, 2016

பதின் நான்கு நாட்களுக்கு பின்நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

ஈக்வடாரில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின் உயிருடன் 
மீட்கப்பட்டுள்ளார்.
கால் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவரை, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரது பெயர் மானுவேல் வஸ்கிஸ் என்றும், சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் சிகிச்சையில் தெரியவந்துள்ளது.
மேலும் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






சனி, 30 ஏப்ரல், 2016

ஓர் எச்சரிக்கை வெளிநாட்டு மோகம் உள்ளவர்களுக்கு !

சுவிஸ்க்கு செல்ல முற்பட்டு துருக்கியில் கடத்தல்காரர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு மரணமான முல்லைத்தீவைச் சேர்ந்த காண்டீபனின் சடலம் இன்று முல்லைத்தீவுக்கு 
கொண்டுவரப்பட்டுள்ளது.
காண்டீபன் இறந்ததைக் கேட்டு அவரது தாயாரும் அதிர்ச்சியில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு ஆசையில் தவறான நபர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படுபவர்களுக்கு இச் செய்தி சமர்ப்பணம் இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்! 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 28 ஏப்ரல், 2016

மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு!:

புதுச்சேரியில் சமீபத்தில் திராவிட விடுதலைக் கழக அமைப்பினர் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.எஸ்.குமார்.
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் படி மே 1-ம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வையும், ஜூலை 24-ம் தேதி 2-ம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த உத்தரவிட்டதோடு ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிவை வெளியிடவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் உச்ச நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கல்வி மையங்கள் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இதை தடுக்கும் நோக்கத்துடன் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் இணைந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்த முடிவு செய்தன. 
இதை எதிர்த்து, வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அரசியல் சட்டத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை பறிபோவதாக அவர்கள் வாதிட்டனர்.
இந்த வாதங்களை கேட்ட அப்போதைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், நீதிபதிகள் அனில் தவே, விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு, தேசிய நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மாணவர் சேர்க்கை என்பது கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையின் ஒரு பகுதி. எனவே, தேசிய நுழைவுத்தேர்வு நடத்தி அவர்களது உரிமையைப் பறிப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தனர். இதில் ஒரு நீதிபதி இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவு என்ற அடிப்படையில் இத்தீர்ப்பு 
அமலுக்கு வந்தது.
இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டபோது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்று, தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு உத்தரவினால் மாநிலம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் தேர்வுகள் கேள்விக்குறியாகியுள்ளன. 
இந்தத் தீர்ப்பினை அடுத்து நாடு முழுதும் சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு எழுதுவார்கள் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 3 மார்ச், 2016

தொழில்நுட்பத்துடன் பயணிகள் விமானத்தை உருவாக்கும் நாசா

அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அதி நவீன பயணிகள் ஜெட் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
2020ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு விடப்படவுள்ள இந்த ஜெட் விமானமானது ஒலியை விடவும் 4.5 மடங்கு வேகம் உடையதாக இருப்பதுடன், தீங்கு விளைவிக்கும் இரைச்சலை முற்றாக நீக்கும் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கி இந்த விமானம் தயாரிக்கப்படவுள்ளது.
அதாவது மணிக்கு 1,234 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடி இந்த விமானத்தின் மூலம் லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்கு 3.5 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

உன்னத கண்டுபிடிப்பு விமானவிபத்துக்களில் உயிர்களைக்காப்பது

இன்றைய உலகில் விரைவான பயணங்களுக்கு எத்தனையோ கண்டுபிடிப்புக்களை விஞ்ஞானம் தந்திருக்கின்றது. பல ஆயிரம் மைல்களை சிலமணி நேரத்தில்  பயணிப்பதற்கு விமானச்சேவை 
முக்கியமானதாகின்றது.
இருப்பினும் இதன்போது இழந்த உயிர்கள் விலைமதிப்பற்றது. இதற்கும்  விஞ்ஞானம்  விடை தந்திருக்கின்றது  இந்தக்காணொளியில்…. நீங்கள் காண்பீர்கள்  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பொதுவாக பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவை !!!

நீங்கள் ஒவ்வொரு வயதை கடக்கும் போதும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். பொதுவாக இருபதுகள் வரை துடுக்கான வயது, உடல் வலிமை ஒவ்வொரு வயதுக்கும் அதிகரித்துக் காணப்பட்டிருப்பீர்கள்.
ஆனால், முப்பதை கடந்து நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என இனிக் 
காண்போம்…
முப்பது வயதை தொட்டவுடன் முதலில் தென்படும் மாற்றம் சருமத்தில் சுருக்கம்.
இது பெண்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில், பெண்களுக்கு எப்போதுமே அழகில் சற்று அதீத ஈர்ப்பு இருக்க தான் செய்யும்.
முப்பது வயதுக்கு பிறகு பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புவோர் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு மெல்ல மெல்ல கருவளம் குறைய 
ஆரம்பிக்கிறது.
முப்பது வயதுக்குக் பிறகு சில பெண்களுக்கு மோசமான மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பிடிப்புகள், ஐந்து நாட்களும் கடினமாக இரத்தப் போக்கு ஏற்படுவது போன்ற சிக்கல்கள் சில பெண்களுக்கு
 ஏற்படலாம்.
முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு வளர்சிதை மாற்றம் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பிக்கும். இந்த வயதில் இருந்தாவது பெண்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையும் வரும். சிறுநீரக பை வலுவிழப்பு மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கின்றன.
முகத்தில் சுருக்கம் ஏற்படுவதற்கு அடுத்து, வெளிப்படையாக தெரியும் இரண்டாவது பெரிய மாற்றம் நரைமுடி. பேயை விட இதற்கு தான் பெண்கள் அதிகமாக பயந்து நடுங்குகிறார்கள்.
முப்பது வய்துக்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் தருவது போன்ற காரணங்களினால் மார்பகங்கள் இறுக்கம் குறைந்து தொங்குவது போல உருமாறும்.
பதின் வயது முதலே செல்லமாக வளர்த்த நகங்கள் இப்போது பெண்கள் சொல்லும் வார்த்தைக்கு மதிப்பளிக்க மறுக்கும். நகங்களை அழகுப்படுத்துவது சற்று கடினமாகும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், நகங்களின் வலு குறைந்துவிடும், எளிதாக உடைந்துவிடும்.
பொதுவாகவே பெண்களை போலவே அவர்களது உடலும் மென்மையானது. இதில், முப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு காயங்கள் சீக்கிரமாக ஆறாது. எனவே, இதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வேலை பளு, பிள்ளை வளர்ப்பு, எலும்பில் தேய்மானம் ஏற்பட ஆரம்பிப்பது என பல காரணங்களால் இடுப்பு வலி அடிக்கடி 
வந்து போகும்.
இந்த பட்டியலில் இருக்கும் எந்த மாற்றத்தை பற்றியும் ஆண்கள் பெரிதாய் கவலை அடைவதில்லை. ஆனால், இவற்றால் தங்கள் மீது இருக்கும் ஆர்வம், ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்று பெண்கள் சற்று கவலை 
அடைகிறார்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 13 ஜனவரி, 2016

ஏழு எண் (7, 16,25)ல் பிறந்தவர்களின் 2016 பலன்கள்

7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு, ஏழு ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணும் பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. 7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் ஆவார்கள். ஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும். ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களின் குண நலன்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் ளி. ஞீ ஆகியவை.

குணநலன்கள்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும். இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. தெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள். தன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள். இதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள். இவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது. கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள். ஆதலால் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுவார்கள். எந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்த பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள். கைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.

உடல்நிலை ஆரோக்கியம்

ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும். உடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும். மெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும். இவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். வாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.

குடும்ப வாழ்க்கை

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள். உற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும். தாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதாரம்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும். இவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர். நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.

தொழில்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள். திரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும். மத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். உத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.

நண்பர்கள், பகைவர்கள்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். பிடிவாத மான குணம் இருக்கும். 8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள். 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.

கேதுவுக்குரிய காலம்

கேதுவும் சந்திரனைப் போலவே ஆற்றல் கொண்டவர் என்பதால் கேதுவுக்கும் திங்கட்கிழமையே உகந்த நாளாக உள்ளது. கேதுவுக்கு ஒரு மணி நேரமே குறுகிய கால அளவு ஆகும்.

கேதுவுக்குரிய திசை

வடமேற்கு திசை கேதுவுக்குரியது. ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் கேதுவுக்கு உரியவை.

கேதுவுக்குரிய கல்

கேதுவுக்குரிய கல் வைடூரியம், லேசான பச்சையும், பழுப்பும் கலந்த மஞ்சள் நிறமும் உடையது வைடூரியம். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுகிறது. எனவே இது பார்ப்பதற்கு பூனை கண் போன்று இருப்பதால் கேட் ஐ என்றும் அழைக்கின்றனர். இதற்கு மாற்றாக ஒப்பல் என்ற கல்லையும் அணியலாம். வைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததால் இதற்கு எந்த தீட்டும் படாமல் பாதுகாத்து அணிந்து கொள்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.

பரிகாரம்

கேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி – 7,16,25

அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, காவி

அதிர்ஷ்ட திசை-வடமேற்கு

அதிர்ஷ்ட கிழமை -திங்கள்

அதிர்ஷ்ட கல் -வைடூரியம்

அதிர்ஷ்ட தெய்வம்-கணபதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆறு எண் (6,15,24) ல் பிறந்தவர்களின் 2016 பலன்கள்

மனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள். ஆறு வகையான சாஸ்திரங்களும் உள்ளன. முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் ஆறு வகையான தத்துவங்களை சூட்சும முறையில் உணர்த்துகின்றன.
 அதுபோல 6 என்ற
 எண்ணும் மனித வாழ்வில் சிறந்த முறையில் செல்வாக்கினை பெற்றதாக திகழ்கிறது. 6,15,24 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரனாவார். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். வாரத்தில் 6ம் நாளாக வெள்ளிக்கிழமை வரும். வெள்ளிக்கிழமை வாரத்தின் சிறந்த நாளாக கருதப்படுகிறது. 6ம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஹி.க்ஷி.கீ ஆகியவைகள் ஆகும்.
குண நலன்கள்
நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும்,
 புகழ்ச்சிக்கும்
 ஆசைப்படாதவர்கள் என்பதால் இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை. மிகவும் பொறுமைசாலிகள். ஆதலால் அதிக சகிப்பு தன்மையும் உண்டு. சிந்தனா சக்தியிலும், செயலாற்றுவதிலும் நிதானமாக செயல்பட்டாலும் தன்னம்பிக்கையும் அசட்டு தைரியமும் மேலோங்கி இருக்கும். எதிலும் சாதுர்யமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால், சில நேரங்களில் மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு சொல் என்றாலும் மறக்க முடியாத அளவிற்கு பேசி விடுவார்கள். கேலியும், கிண்டலும் நையாண்டித் தனமும் அதிகம் இருக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்திய சாலிகள். பிடிவாத குணம் படைத்த இவர்கள் பிறருக்கு அடிபணிவதென்பது இயலாத காரியம். இவரிடம் 
எவ்வளவு குறைகள் 
இருந்தாலும் அதை மறைத்து மற்றவர்களின் குறைகளை அம்பலமாக்கி விடுவார்கள். தனக்கு நெருங்கியவர்கள் நெறி தவறும் போது இவருடைய மனநிலை இவரின் கண்களில் தெரியும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்த பின்தான் செயலில் இறங்குவார்கள். தனக்கு மிஞ்சியதைத்தான் பிறருக்கு தானமாக கொடுப்பார்கள். சமூக நல்லப்பணிகளிலும் ஆர்வம் இருக்கும்.
உடல் நிலை, ஆரோக்கியம்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குள்ளமானவர்களாக இருப்பார்கள். உடல் குண்டாக இருக்கும். கருணை நிறைந்த கண்ஙகளைக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் தம்மை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் குளிர்ச்சியான உடலை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்களும், இருதய சம்பந்தமான வியாதிகளும், சுவாசம் சம்பந்தமான நோய்களும் உண்டாகும். சர்க்கரை நோய் அதிகம் பேருக்கு ஏற்படும். மர்ம பிரதேசங்களில் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
குடும்ப வாழ்க்கை
ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்தியளிப்பதாகவே அமையும். பெரும்பாலானவர்கள் காதல் விஷயங்களில் வெற்றி பெற்று தன் மனதிற்கு பிடித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
பொருளாதாரம்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆடை, ஆபரணங்களுக்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் நிறைய செலவு செய்வார்கள். சிலர் பிறவியிலேயே செல்வந்தராக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நடுத்தர வர்க்கம் என்றால் பொருளாதார நிலை பற்றாக்குறையாகவே இருக்கும். எப்பாடுபட்டாவது தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.
நண்பர்கள், பகைவர்கள்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் புதிதாக பழகுவதற்கு சற்று சங்கோஷப்படுபவர்களாக இருந்தாலும், பழகிய பின் இனிமையானவர்களாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ஓட ஓட விரட்டுவார்கள். 4,5,7,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் நட்புடன் பழக முடியும். 1,2 ம் எண்ணில் பிறந்தவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பதே நல்லது.
சுக்கிரனுக்குரிய காலம்
ஏப்ரல் மாதம் 20ந் தேதி முதல் மே மாதம் 20ம் தேதி வரையிலும், செப்டம்பர் 22 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 22ம் தேதி வரையிலும் உள்ள காலங்கள் சுக்கிரனுக்குரிய காலங்கள் ஆகும்.
தொழில்
ஆறாம் எண்ணிற்குரியவர் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் என்பதால் கலைத்துறை சம்மந்தமானவற்றில் முன்னேற்றமடைவார்கள். சினிமா, சங்கீதம், இசை, நாட்டியம், நாடகம் போன்றவற்றில் பிரகாசம் உண்டாகும். அரசாங்க பணிகளில் உயர் பதவிகள் அமையும். ஓவியம் வரைதல், கவிதைகள், பாடல்கள் எழுதுதல் போன்றவற்றில் புகழும்,
 கௌரவமும் கிடைக்கும். பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்கள், பெண்கள் அணியும் ஆடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் போன்றவற்றிலும் நல்ல லாபம் அமையும். வாசனை திரவியங்களை வியாபாரம் செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.
சுக்கிரனின் திசை
மேற்கு திசையும், தென் மேற்கு திசையும், சுக்கிரனுக்குரிய திசைகள் ஆகும். படுக்கை அறைகள், அழகிய வீடுகள், பயிடும் நிலங்கள் யாவும் சுக்கிரனுக்குரியவை. ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசை நோக்கி பயணம் செய்தபின் புதிய சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்வது உத்தமம்.
அதிர்ஷ்டக்கல்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் வைரக்கல்லை அணிவது மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வைரத்தை வாங்க முடியாதவர்கள் ஜிர்கான கற்களும் வைரத்தை போலவே குணநலன்களை கொண்டதாகும்.
பரிகாரம்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் லஷ்மி தேவியை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது உத்தமம். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி – 6,15,24,9,18,27
அதிர்ஷ்ட நிறம் – வெளிர்நீலம்
அதிர்ஷ்ட திசை- தெற்கு
அதிர்ஷ்ட கிழமை-வெள்ளி
அதிர்ஷ்ட கல்- வைரம
அதிர்ஷ்ட தெய்வம் – ஸ்ரீலட்சுமி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 5 ஆகஸ்ட், 2015

சவூதி எஜமானர் இலங்கைப் பணிப்பெண்ணை ஏலத்துக்கு விற்கிறார்?

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவூதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக அவரது எஜமானர் விளம்பரம் செய்துள்ளார். உள்நாட்டு ஏல விற்பனை இணைய தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 
30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும்,
 ஒப்பந்தம் முடிவுறுத்திக் கொண்டுள்ளதாகவும் எஜமானர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு இன்னும் ஒரு ஆண்டு 
காலம் சேவையாற்ற 
அனுமதியிருப்பதாகவும் விரும்பியவர்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான அதிகளவான சம்பவங்கள் பதிவாவதாக சவூதி மனித உரிமை ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 30 ஜூலை, 2015

காதலியின் காலில் 10 முறைக்கும் மேல் மண்டியிடும் காதலன் காணொளியில்

ஹாங்காங்கின் மோங்காக் நகர் பா யூன் தெருவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியை அனைவரையும் வியப்படைய வைத்து உள்ளது.
காதலர் ஒருவர் காதலியை தன்னை விட்டு பிரிய வேண்டாம் என கெஞ்சுகிறார் ஒரு கட்டத்தில் காதலின் காலில் விழுத்து அழுது புரளுகிறார். ஆனால் காதலி கல் நெஞ்சக்காரியாக இருப்பார் போல் காதலல்னின் வேண்டு கோளை செவி சாய்க்க வில்லை.
மேலும் காதலனை எட்டி உதைக்கிறாள். இருந்தும் காதலியிடம் காதலன் மிகவும் கெஞ்சுகிறார் ஆனால் காதலி அவரை உதாசீனபடுத்தி தலையில் மிதிப்பது, அவரை அடித்து விரட்டுவதிலுமே குறியாக உள்ளார்.
காதலன் குறைந்தது 10 முறையாவது காதலியின் காலில் விழுந்து 
இருப்பார்.அவர்கள் பேச்சு தெளிவாக இல்லை என்றாலும் பெண் சத்தமாக் பேசுகிறார் ஒரு கட்டத்தில் என்னை தொடாதே என பெண் கூறுகிறார். போ போய் சாவு என வசைமாறி பொழிகிறார்.
போ போய் அந்த கட்டிடத்தில் இருந்து குதி என்கிறார். தனது வலது காலால் காதலனை பலமுறை தாக்குகிறார். பலமுறை கன்னத்தில் அறைகிறார்.இருந்தும் சுவற்றில் அடித்த பந்தாக காதலன் காதலையை சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
ஆனால் கடைசி வரை காதலி எந்த வித சமாதானத்திற்கும் வரவில்லை பின்னர் இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிகின்றனர். இந்த வீடியோ ஹாங்காங் டெய்லி ஆப்பிள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த காணொளி, 0.50 நிமிடங்கள் ஓடுகிறது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>