யாழ் சுன்னாகம் சிவன் தேர்த் திருவிழாவில் மி்ன்சாரம் தாக்கி ஒருவர் பலி
சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஒருவர், வியாழக்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
தண்ணீர்ப்பந்தலில் ஏற்பட்ட மின் கசிவால் 7 பேர் மின்சார தாக்கத்துக்கு உள்ளாகினர். இதில் எஸ்.சொர்ணகுமார் (வயது 42) என்ற 1 பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக