siruppiddy

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நக்கீராவின் காதல்திவசம் எனும் கவிதை

கருணை இல்லங்களில் கதறுகின்றன எம் கருவறைகள்
தாயர் தினங்கள் கொண்டாடுகிறார்கள் “கருணைக்கடல்கள்”
உன்னை உயர்ந்தவனாக்க உருக்குலைந்தார் தந்தை -அவர்
சிந்தை சிதைய முதியோரில்லத்தில் வாழ்வது தான் விந்தை
கட்டில் பிணமாய் ஆக்கினான் உயிருள்ள பெண்ணை
பெண்கள் தினமென உச்சரித்தான் ஒரு எண்ணை
தொழிலே இல்லாது போனான் உலகில் தொழிலாளி
தொழிலாளர் தினத்தைக் கொண்டுகிறான் முதலாளி

தினமின்றிப் போன தினங்களே தினங்கள்
கனங்கொண்டு வாழும் தினங்களில் மனங்கள்
காதல் எல்லாம் கருவின்றிப் போச்சு
காதலர் தினமும் கருக்கொள்ளலாச்சு
செத்தவர்க்கு செய்வார்கள் நினைவுகொள்ள திவசம்
காதலுக்கும் காதலர்கள் செய்கிறார்கள் காதல்திவசம்
காதலர் தினமாம் போதகன் செத்த14 மாசி
கல்லறையில் கதறுகிறது காதல் நீ யோசி
தினம் தினம் தினங்கள்
தினம் வந்த போகும்
இனம் இனம் இனமாய்
மனம் கொண்டு ஆடும்
சினம் சிந்திப் போக
சிறுமை நின்று ஏங்கும்
கனம் கொண்ட தினங்கள்
மனமின்றியும் வாழும்
ஆக்கம் நோர்வே நக்கீரா

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக