siruppiddy

திங்கள், 27 ஜூன், 2016

பீடி துண்டு பொலிஸ் உத்தியோகத்தருக்கு வழங்கிய உணவுக்குள் !

காத்தான்குடியில் ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட றோல் சாப்பாடு ஒன்றுக்குள் பற்ற வைக்கப்பட்ட பீடித் துண்டு காணப்பட்டதால் காத்தான்குடி சுகாதார பரிசோதகர்கள் ஹொட்டலை
 மூடி சீல் வைத்துள்ளனர்.
காத்தான்குடி பிரதான வீதி ஆறாம் குறிச்சியிலுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவிலேயே அவ்வாறு பீடித்துண்டு காணப்பட்டுள்ளது.
குறித்த ஹொட்டலுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாப்பிட்ட உணவிலேயே குறித்த பற்ற வைக்கப்பட்ட பீடி 
காணப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லா தலைமையில் சென்ற குழுவினர் குறித்த ஹொட்டலை பரிசோதனை செய்ததுடன் இன்று ஹொட்டலை மூடி சீல் வைத்துள்ளனர்.
குறித்த ஹொட்டல் உரிமையாளரை உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஏ.எல்.றஹ்மத்துல்லர் 
தெரிவித்தார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 23 ஜூன், 2016

உலக சாம்பியன் பட்டத்தை ஈழத்து சிறுவன்க ராத்தே வென்றான்!

தாயகத்தை  சேர்ந்த  திரு அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், 2016 ஆண்டுக்கான கராத்தே உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் வல்வையை சேர்ந்த அகிலன் கருணாகரன் அவர்கள் அயர்லாந்தில்(டப்ளின்) 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை நடந்த கராத்தே உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.
இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் 
பெற்றுக் கொண்டார்.
2014ல் போலந்து நாட்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் இவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
2015ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இவர் kumite விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கலபதக்கங்களை பெற்றுக் கொண்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 20 ஜூன், 2016

தமிழ் மக்களுக்கு பெருமைசேர்த.சிறுமி செல்வி அகல்யா

6வது உலக கராத்தே அனைத்துவயதினருக்குமான சம்பியன் போட்டி அயர்லாந்து நாட்டில் 16/06/2016 தொடக்கம் 19/06/2016 நாள் வரையும் நடைபெறுகிறது . 17/06/2016 அன்று ஈழத்தமிழ் சிறுமி செல்வி அகல்யா சிவகுமார் பங்குபற்றி இரண்டாவது இடத்தை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
அதுபற்றிய சிறு காணொளிப்பு 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 18 ஜூன், 2016

அரிய மருத்துவ பண்புகளை கொண்ட சீத்தாப்பழம்!

பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.
பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை பொடி முக்கிய பங்காற்றுகிறது. விதையின் பொடியில் டீ தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.
எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீத்தாப்பழ ஒயின்:
நன்கு கனிந்த சீதாப்பழத்தில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் கொண்டது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 13 ஜூன், 2016

கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள்

பெண்கள் கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் கருப்பையில் ஏற்படும் நீர் கோவை எனப்படும் நோயும் ஒரு காரணமாக உள்ளது. இந்நோய்க்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, பெண்களின் கருப்பையில் சிறிய பலநீர் கோவைகள்
உருவாகுவதை pcos(polycysticovarysyndrome) என்கிறோம். இது பெண்களின் ஈஸ்டிரோஜன், பிரஜட்டரான் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளால் ஏற்படும் பிரச்னை ஆகும். இந்நோயானது பெண்களின் மாதவிடாய் காலத்தில் சீரற்றநிலையை ஏற்படுத்துகிறது. மேலும் இது கருமுட்டை
 வெளிப்படாத சூழ்நிலையையும் ஏற்படுத்தும். முகம் மற்றும் உடலில் மாற்றங்களை
 ஏற்படுத்துகிறது. முக்கியமாக இந்நோய் ஏற்படின் கர்ப்பம் 
அடையும் நிலை மிகவும் குறைவு. பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு அதிக எடை, முகத்தில் அதிக முடி, மாதவிடாய் தடங்கல் ஏற்படும். இந்நோய் தாக்கத்தால் கருப்பையை சுற்றி பல நீர்க்கோவைகள் இருக்கும். இதனால் கருமுட்டை வளர்ச்சியடையாத சூழ்நிலை ஏற்படும். இப்பிரச்னை உள்ள 
பெண்களுக்கு,
 ஆண்களிடம் அதிகம் உள்ள ஹார்மோன்களான ஆன்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். எனவே தான் முகத்தில் முடி அதிகம் வளருகிறது. காரணம் என்ன? தகுந்த காரணம் துல்லியமாக தெரியா விட்டாலும் பல காரணங்களின் கூட்டு விளைவினால் தான் இது ஏற்படுகிறது என கருதப்படுகிறது. ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள், பரம்பரையில் உள்ளவர்களிடம் இந்நோய் இருத்தல், ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன்
 அதிகம்சுரப்பது.
 அறிகுறிகள் சீரற்ற மாதவிடாய், கருமுட்டை வெளியேறாத சூழ்நிலை, முகம், மார்பு, வயிற்றில் அதிக ரோமம் வளருதல், கழுத்து, முகத்தில் கறுப்பான திட்டுகள், கழுத்தை சுற்றி கருமை நிறம் காணப்படுதல். மார்பகம் சிறுத்து இருத்தல், குரலில் கரகரப்பும், ஆண் குரலை சார்ந்தும் 
இருத்தல். தலை முடி
 மெல்லியதாக இருக்கும். முகப்பரு, எண்ணெய் பதம் உள்ள முகம், அதிக எடை, இடுப்பு வலி, கோபம், மனஅழுத்தம் தென்படும். நோயினால் ஏற்படும் பிரச்னைகள் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பபை புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தூக்கத்தில் குறட்டை, கர்ப்பம் ஏற்பட்டாலும் எளிதில் கரு பதியாத படிகருகலையும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 11 ஜூன், 2016

விமான நிலைத்தில், பயணிகளிடம் கொள்ளையிட்டவர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலயத்தில் பயணிகளை ஏமாற்றி கொள்ளையிட்ட இருவர் கைதுவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை ஏமாற்றி போக்குவரத்து வசதிகளை செய்து தருவதாக கூறி குளிர் பானங்களில் போதைப பொருளை கலந்து கொடுத்து பயணிகளின் பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையிட்டு வந்த சந்தேக நபரையும் , சந்தேக நபரின் காதலியையும் கட்டுநாயக்க பொலிஸார்
 கைது செய்துள்ளனர்.
நீரகொழும்பு கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த சிசிர குமார (28 வயது), சந்தேக நபரின் காதலியான 23 வயது யுவதியுமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
சந்தேக நபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுடன் விமான நிலையத்தில் வைத்து சுமுகமான முறையில் பழகி அவர்கள் பயணிப்பதற்கு போக்குவரத்து சேவையை வழங்குவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று இடை நடுவில் வைத்து கடையில் குளிர் பானத்தை வாங்கி அவற்றில் போதைப் பொருளை கலந்து 
கொடுத்துள்ளனர். 
பயணிகள் போதையில் மயங்கிய பின்னர் அவர்களின் பணத்தையும் உடைமைகளையும் சந்தேக நபர்கள் அபகரித்துக் கொண்டு பயணிகளை அந்த இடத்தில் விடடுச் செல்வதாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கடந்த இரண்டாம் திகதி சந்தேக நபர்கள் பயணிக்ளை ஏமாற்றி அழைத்துச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் அவர்களின் வாகனத்தை சோதனை 
செய்துள்ளனர். 
அதன்போது அந்த வாகனத்தில் போதைப் பொருள் கலந்துள்ளதாக கருதப்படும் பான வகை அடங்கிய போத்தலை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 5 ஜூன், 2016

தற்போது சுவாச நோயாளர்கள் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் சுவாச நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றாடலில் தூசுக்களின் அளவு அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என்று பிரதி சுகாதார பணிப்பாளர் அமல் ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பொதுமக்களின் தவறான பழக்க வழக்கங்களும் இதற்கான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் சுற்றாடலில் காணப்படும் தூசுகளில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான பல வழி வகைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பச்சை வட்டத்தை அமைத்து எமது நிறுவனங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ வரும் தூசியின் அளவைக் குறைக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர், அநேகமான நாடுகளில் சிறிய பாத்திரத்தில் பூக்களை
 போட்டு வைக்கும்
 நடைமுறை காணப்படுகின்றது.இவ்வாறு பூக்களை நீரில் இடுவது அழகுக்காக மட்டுமல்ல சுற்றாடலில் சேரும் தூசுக்களை குறைப்பதும் இதன் நோக்கமென்று பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமது சுற்றாடலை தூசுக்களில் இருந்து பாதுகாத்தால் தமது வாழ்நாளை அதிகரிக்கலாம் என்றும் அவர் 
குறிப்பிட்டுள்ளார். -
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>