கலை வாழ்வில் இன்னொரு அத்தியாயம்..உயிர்வரை இனித்தாய் திரைப்படத்துடன்இரா. குணபாலனும் அவர்
உலகத்தமிழரை நோக்கி தனது சிரிப்புச் சரவெடிகளை வீச வருகிறார்..இதுவரை புலம்பெயர்ந்த தமிழரிடையே சிரிப்பு வெடிகளை வீசிய கலைஞர். இரா. குணபாலன் தனது நகைச்சுவையை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டு உலகத்தமிழரை நோக்கி சிரிப்பு வெடிகளை வீச வருகிறார்.உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் இரா. குணபாலனின் நடிப்பு அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது.
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தமிழ்நாடு ஏ.வி.எம்மில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது.. இரா. குணபாலனின் நடிப்பைப் பார்த்த தயாரிப்பாளர் பாவல் சங்கர் இவர் பாரீசில் இருந்தது போதும் ; இனிமேலாவது தமிழகம் வரவேண்டும் என்று அழைப்புவிட்டது விளையாட்டல்ல..இன்று தமிழகத்தில் ரென்ட் நகைச்சுவைதான்.. இரா. குணபாலன் கால் நூற்றாண்டுக்கு மேலாக ரசிகர்களை சிரிக்க வைக்கும் நடிப்பிற்கும், உடல் மொழிக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.
இப்படியொரு அரிய கலைஞர் தமிழகம் வந்தால் அவருக்கு எத்தனை பெரிய வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதே பாவல் சங்கரின் கவலை.இன்று வெறுமனே மிமிக்கிரி செய்தவர்கள் எல்லாம் தாமும் நகைச்சுவை நடிகர்கள் என்கிறார்கள் ஆனால் நகைச்சுவையை டெலிவரி பண்ணமுடியாமல் திணறுகிறார்கள் என்று பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு சொன்னது தெரிந்ததே.
நடிப்பால் ரசிகனை அழ வைக்கலாம் ஆனால் சிரிக்க வைப்பதுதான் மாபெரும் கடினம் காரணம் நகைச்சுவை நடிப்பு என்பது மாபெரும் ஆற்றலின் பிறப்பிடம் என்பது கலைவாணர் என்.எஸ்.கே, கே.ஏ. தங்கவேலு போன்றவர்களின் திரையுலக வரலாறு எடுத்துரைத்துள்ளது.அந்த ஆற்றலை நோக்கி கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கடின உழைப்பும், பயிற்சியும் செய்து திரையுலகிற்கு வந்துள்ளார் இரா. குணபாலன்.அந்தவகையில் இரா. குணபாலனின் நடிப்பாற்றலும், ரசிகர்களை மிக நுட்பமாக அவர் சிரிக்க வைக்கும் முறையும் அபாரமாக இருக்கிறது.நடிக்க வந்துவிட்டால் கிடைக்கும் வளங்களை
எல்லாம் சேகரித்து, தயாரிப்பாளரையும், இயக்குநரையும் அதிசயிக்க வைத்துவிடுவார், அப்படியொரு ஆற்றல் அவரிடம் உள்ளது.அதைப்பார்த்தால் அடடா இவரைப்போன்றவர்களுக்கு சரியான வாய்ப்புக்களை தமிழ் திரையுலகம் ஏற்படுத்தத் தவறிவிட்டதே என்ற நினைப்பு அரும்புவது இயல்பானதே என்றும் பாவல் சங்கர் தெரிவித்திருக்கிறார்.இரா. குணபாலன் நையாண்டி மேளம் தொடரில் நடித்து, மேலை நாடுகளில் உள்ள ரசிகர்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்,அவருக்கு
எண்ணற்ற ரசிகர்கள் மேலை நாடுகள் முழுவதும் இருக்கிறார்கள்.இப்போது உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் தனது நகைச்சுவை நடிப்பால் ஓவியம் வரைந்துள்ளார் இரா. குணபாலன், தமிழக நடிகர்களின் முன்னாலும் தரிசனமாக இருக்கிறார்.ஆற்றல் மிக்க புலம் பெயர் நடிகர்களையும், கலைஞர்களையும் தமிழக திரையரங்குகளின் ரசிகர்களின் முன்னால் கொண்டுவரும் காத்திரமான புதிய பணியை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு கிரியேட்டி சிட்டி ஆர்ட்ஸ் நிறுவனம் தனது முயற்சியால் தமிழகத்தில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு தெளிவாக ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளது.இன்று தமிழ்
சினிமாவின் வர்த்தகம் ஏறத்தாழ தமிழகத்தில் இல்லை என்ற நிலை வந்துவிட்டது, தமிழ் சினிமாவை காப்பாற்றி நிற்பதே புலம் பெயர் தமிழர்தான், அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் மனம் கோடம்பாக்கத்திற்கு வரவேண்டும் என்கிறது.புலம் பெயர் தமிழர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் தமிழ் திரைப்படங்கள் இனி பெருமளவில் தயாரிக்கப்பட வேண்டும், தமிழ் வர்த்தக சினிமாவின் அடுத்தகட்ட வெற்றிக்கு இது அவசியம்.
அதன் ஓரங்கமாக முற்று முழுதாக ஐரோப்பாவில் உள்ள கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது உயிர்ரை இனித்தாய்.
இப்படம் புலம் பெயர் தமிழனின் திரைப்படம் என்ற பெயருடனும், துணிச்சலுடனும் தமிழக திரைச்சந்தைக்கு போகிறது.
திரைப்படத்தை பல்கலைக்கழக கல்வியாகக் கற்ற இளம் தமிழ் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் திரைப்பட தொழில்நுட்பத்துறை இந்த முயற்சிக்கு பேருதவியாக இருந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் வரும் இரா. குணபாலன் முற்றிலும் புதிய பரிமாணம் எடுத்துள்ளார்.
நடிக்க வந்துவிட்டால் எடுத்த கருமத்தில் கண்ணாக இருந்து, பிரதியை தெளிவாக விளங்கிக்கொண்டு, அதற்கேற்ப அதி உச்ச சிரிப்பை வரவழைக்கும் உடல்மொழியோடு உரையாடலையும் வழங்குவதில் அவருக்கு இணை அவரே.
அவரும் அவருடைய இணைபிரியாத நண்பர் தயாநிதியும் படப்பிடிப்பு இடத்திற்கு வந்துவிட்டால் படப்பிடிப்பே களைகட்டிவிடும், அதுமட்டுமல்ல இளம் நடிகர்களோடு கடுகளவும் ஈகோ இல்லாமல் பழகி இணைந்து நடிப்பதிலும் அவர்களுக்கு இணை அவர்களே.
இதுவரை புலம் பெயர் தமிழ் ரசிகர்களை குறியாக வைத்து நகைச்சுவை விருந்தளித்த இரா. குணபாலன் இந்தத் தடவை தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ள எட்டுக்கோடி தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்றவாறு தனது நகைச்சுவை வெடிகளை புதுமையும், பொதுமையும்படுத்தி சரமாரியாக சுழற்றி வீசியபடி, தனது நண்பர் தயாநிதியுடன் திரைக்கு வருகிறார்.வரும் புத்தாண்டில் வெடிக்கப்போகும்
பட்டாசுகள் போல அடுத்த ஆண்டு திரையில் மத்தாப்பாக வெடித்துச் சிதறப்போகிறது.. இரா. குணபாலனின் சிரிப்புப் பட்டாசுகள் என்கிறார்கள் உயிர்வரை இனித்தாய் திரைப்படக் குழுவினர்.நம்பியிருங்கள் இரா. குணபாலன் ஜெயித்துக்காட்டுவார்.இவர் கலைவாழ்வில் இன்னும் பலதிறமையுள்ளவராக நன்று நடிப்புத்துறையில் சிறந்தோங்க
எமது வாழ்த்துக்கள்