siruppiddy

சனி, 30 ஜூலை, 2016

நாம் கராம்பு சேர்த்து தேநீர் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

சோர்வை பொக்கம், சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீயில். இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன. இதில், கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்…
தேவையான பொருட்கள்:
ஐந்து கிராம்பு
ஒரு கப் சூடான நீர்
தயாரிக்கும் முறை:
சூடான நீரில் கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள்.பிறகு அதை வடிக்கட்டி குடியிங்கள்.
வைட்டமின்கள்:
கிராம்பு மூலிகை டீயின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,
வைட்டமின் பி
வைட்டமின் சி
வைட்டமின் ஈ
வைட்டமின் ஜே
வைட்டமின் கே
நன்மைகள்:
தலைவலி போக்க
ஆண்டி- ஆக்ஸிடன்ட்
உயர் இரத்த அழுத்தம்
இரத்த ஓட்டம் சிறக்க
இதய நலன்
பற்களின் ஆரோக்கியம்
செரிமானம் சிறக்கும்
கல்லீரலுக்கு நன்மை
கணையம் ஆரோக்கியம் அடையும்குறிப்பு:
பல் வலி இருப்பவர்கள் இந்த டீயை மிதமான சூட்டில் 
குடிப்பது நல்லது!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 6 ஜூலை, 2016

சேர்த்து வைத்திருக்கும் சொத்தும்.பணமும்உயிர்'பிரிந்த பிறகு கூட வரப்போவதில்லை!!!

உடலைவிட்டு உயிர்' பிரிந்த பிறகு தான் சேர்த்து 
வைத்திருக்கும் சொத்தும்.பணமும் கூட வரப்போவதில்லை 
என்று தெரியாமலும்.'நம்மை கூட்டிச்செல்லும் எமன் 
லஞ்சம் வாங்கப்போவதில்லை என்று தெரியாமலும்
நாட்டில் சில 'பண முதலைகளும்' ஊழல் பெருச்சாலிகளும்.
அவர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான 'பல ஆயிரம் 
கோடிகள் கருப்பு பணத்தை 'சுவிஸ் வங்கி'-( Credit Suisse ) 
அமெரிக்கன் வங்கி'-( Merrill Lynch Wealth management ) 
ஈரோ வங்கி'-( Barclays ) போன்ற வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கி வைத்து வாழும் கேடு கெட்ட மனிதர்கள் வாழும் இந்த
நாட்டில் இப்படியும் ஒரு தெய்வப்பிறவி
 மனிதர்...!!
இவர் 'மருத்துவம் செய்து சம்பாதித்து கிடைக்கும் பணத்தில்.
அவர் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக. மீதம் உள்ள பணத்தை
கொண்டு 25000' பழங்குடி பிளளைகளை வைத்து பாராமறிக்கிறார்
இந்த மாமனிதநேய மருத்துவர்.!' இந்த மனிதக்கடவுளை
பாராட்டி' பிரபலப்டுத்தலாமா' மனிதநேய நன்பர்களே..!!
இவரை நாமும் வாழ்த்துகின்றோம் 
 வாழ்க வளமுடன்   
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 1 ஜூலை, 2016

இரட்டை பிரஜாவுரிமை 20 ஆயிரம் பேருக்கு !

இந்த ஆண்டு இறுதிக்குள் 20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி 1700 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த அரசாங்கத்தினை போன்று இல்லாமல் மிகவும் நேர்மையான முறையில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் இயல்பாகவே தமது இலங்கை பிரஜாவுரிமையை இழந்து விடுகின்றனர்.
எனவே, இவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் இலங்கைக்கான பிரஜாவுரிமையினை பெற முடியுமென அவர் 
கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில், இடம்பெற்ற யுத்தம் காரணமாக , கல்வித் தகைமை மற்றும் தொழில்துறையில் தேர்ச்சிபெற்ற பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறியவர்களினது, அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பு நாட்டிற்கு அவசியமாகின்றது. எனவேதான், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இரட்டை பிரஜாவுரிமை வழங்கலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>