siruppiddy

வெள்ளி, 15 மே, 2015

அதிசய மீன் மழைபெய்தது யாழில் !

யாழ். நல்லூர் பகுதியில்  பெய்த மழையுடன் மீன்கள் பல விழுந்துள்ளன.
கடந்த சில நாள்களாக குடாநாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இதேபோன்று  வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதி – பருத்தித்துறை வீதியில் பெய்த மழையுடன் பல கெளிறு மீன்களும் விழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
மழையுடன் விழுந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த பருவமழை காலத்தின் போதும் வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையுடன் மீன்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 12 மே, 2015

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு குடியுரிமை

 கனடாவிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்ற எயார் கனடா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் கனேடிய குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கனடா கல்கரியிலிருந்து டோக்கியோ நோக்கி சென்ற குறித்த விமானம் பசுபிக் சமுத்திரத்திற்கு மேலாக சென்றுகொண்டிருந்த போது விமான பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் குழந்தை 
பிரசவித்தது  
இந்நிலையில் பெற்றோர் எந்நாட்டவராக இருப்பினும் குழந்தை கனேடிய விமானத்தில் பிறந்துள்ளதால் குழந்தையை கனேடிய குடியுரிமை பிரகடனப்படுத்த விண்ணப்பிக்கலாம் என கனேடிய குடியுரிமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் கனேடிய குடியுரிமையானது கனேடிய பெற்றோர், கனடாவில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் கனேடிய விமானம் போன்ற ஏதாவது ஒன்றினால் ஏற்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ள வழக்கறிஞர் குடியுரிமைச் சட்டங்கள் 
நாட்டிற்கு நாடு வேறுபடலாம் எனவும் கனேடிய வான்பரப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பொருட்படுத்தாமல் கனேடிய குடியுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் பெற்றோரின் குடியுரிமை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>