siruppiddy

சனி, 28 செப்டம்பர், 2013

விமானிகள் உறக்கம் பறந்துகொண்டிருந்த விமானத்தில்


பிரித்­தா­னிய பய­ணிகள் விமா­ன­மொன்று பறந்­து­கொண்­டி­ருந்­த­போது இரு விமா­னி­க ளும் உறங்­கிக்­கொண்டு சென்­ற­தாக வெளி­யான தகவல் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எயார் பஸ் ஏ330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமா­னத்தின் இயக்­கத்தை “ஒட்டோ பைலட்” முறை­மைக்கு மாற்­றி­விட்டே இவர்கள் இவ்­வாறு உறங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த மாதம் இடம்­பெற்ற இச்­சம்­பவம் தொடர்­பான தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளி­யா­கி­யுள்­ளது. விமானம் தரை­யி­லி­ருந்து கிளம்­பி­ய­வுடன் விமா­னத்தை ஒட்டோ பைலட் முறை­மைக்கு மாற்­றி­விட்டு ஒருவர் மாறி ஒருவர் சிறிது நேரம் உறங்­கு­வ­தற்கு தலைமை விமா­னியும் துணை விமா­னியும் இணங்­கினர்.

ஆனால் அவர்­களில் ஒருவர் விழித்­தெ­ழுந்து பார்த்­த­போதே இரு­வரும் உறங்­கிக்­கொண்­டி­ருந்­ததை உணர்ந்­துள்ளார். இச்­சம்­பவம் குறித்து இவர்கள் தாமா­கவே முன்­வந்து பிரித்­தா­னிய சிவில் விமான சேவைகள் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ளனர்.

இத்­த­கைய சம்­ப­வங்கள் குறித்த தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விப்­ப­தற்­காக, இவ்விமானிகள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அதிகாரிகள் வெளியிடவில்லை

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஒரே செடியில் உருளைக்கிழங்கும் தக்காளியும்


""பொது அறிவு   ""
உரு­ளைக்­கி­ழங்கும் விளையும் தாவ­ர­மொன்றை விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கையை பிரித்­தா­னிய நிறு­வ­ன­மொன்­று­ ஆ­ரம்­பித்­துள்­ளது.

தக்­காளி (tomato), உரு­ளைக்­கி­ழங்கு (potato) தாவ­ரங்­களை ஒன்­றி­ணைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள இத்­தா­வ­ரத்­துக்கு TomTato என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.
சுமார் 500 தக்­கா­ளிக்­காய்­களும் கணி­ச­­மா­ன­ளவு உரு­ளைக்­கி­ழங்கும் இந்த செடியில் விளையும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஓரே தாவரக் குடும்­பத்தைச் சேர்ந்­த­வை­யாக இருப்­பதால் தக்­காளி, உரு­ளைக்­கி­ழங்கு தாவ­ரங்­களை இணைத்து ஒரே செடி­யாக்­கு­வது சுல­ப­மா­னது எனக் கூறப்­ப­டு­கி­றது. ஏற்­கெ­னவே ஆர்வம் கொண்ட விவ­சா­யிகள், வீட்டுத் தோட்­டச்­செய்­கை­யா­ளர்கள் சிலர் இத்­த­கைய செடி­களை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

ஆனால் தொம்ஸன் அன்ட் மோர்கன் எனும் நிறு­வனம் இத்­த­கைய தாவ­ரங்­களை வர்த்­தக ரீதியில் உரு­வாக்கி விற்­பனை செய்ய ஆரம்­பித்­துள்­ளது.
சாடியில் வைக்­கப்­பட்ட 9 சென்றி மீற்றர் உய­ர­மான தாவரம் 14.99 ஸ்ரேலிங் பவுண்­க­ளுக்கு (சுமார் 3100 ரூபா) விற்கப்படுகிறது. இதை வீட்டில் வளர்த்து தக்காளிகளையும் உருளைக்கிழங்குளையும் அறுவடை செய்யலாம். காணொளி


 



 

சனி, 21 செப்டம்பர், 2013

நிம்மதியாக தூங்கலாம்: புகையை விட்டால்ஆய்வில் தகவல்


புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டால் நிம்மதியாக தூங்கலாம் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
புகைபிடிப்பதால் பல்வேறு நோய்களும், அவற்றின் மூலம் மரணமும் ஏற்படுகிறது.

புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், புளோரிடா பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், புகைப்பழக்கத்திற்கும், தூக்கத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு சிகரட்டும் 1.2 நிமிட தூக்கத்தை கெடுப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

புகைபிடிப்போரில் 11.9 சதவிகிதம் பேர் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதாகவும், 10.6 சதவிகிதம் பேர் நள்ளிரவில் எழுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 

வியாழன், 19 செப்டம்பர், 2013

கந்தன் தோன்றுவார்எனநம்பி கூடிஏமாந்த அடியவர்கள்


கதிர்காமத்தில் கதிர்காம கந்தன் நேற்று தோன்றுவார் என ஜோதிடரான மஞ்சுள பீரிஸ் ஜோதிடத்தின் பிரகாரம் எதிர்வு கூறியிருந்ததன் காரணமாக நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்தில் கூடியிருந்தனர்.

பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கதிர்காம ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற மக்கள் கிரிவெஹர மாவத்தை, அபினவராமய உட்பட பல இடங்களில் குழுமியிருந்தனர். .இதனால் கதிர்காம ஆலய பூமி மக்களால் நிரம்பி காணப்பட்டது.

சாதாரணமாக கிழமை நாட்களில் இப்படி பெருந்தொகையான மக்கள் ஆலயத்திற்கு வருவதில்லை என ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர். மஞ்சுள பிரிஸின் ஜோதிட எதிர்வுகூறலே பக்தர்கள் அதிகளவில் வருவதற்கான காரணம் எனவும் அவர்கள் கூறினர்.

குழந்தைகளை தூக்கி கொண்டும் அர்ச்சனை பாத்திரங்களை ஏந்தி கொண்டும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
ஆலயத்திற்கு சென்றிருந்த பலர் மஞ்சுள பீரிஸின் ஜோதிட எதிர்வு கூறல் பற்றி கேட்டுக்கொண்டிருந்தனர்.

எனினும் கதிர்காம ஆலயத்திற்கு சென்றிருந்த பக்தர்களிடம் விசாரித்த போது தாம் கதிர்காம கந்தனை நேரடியாக எங்கும் காணவில்லை. அத்துடன் கந்தனை கண்ட எவரையும் அங்கு பார்க்க முடியவில்லை என்றனர்.



 

புதன், 18 செப்டம்பர், 2013

வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்


 
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே (வியாழக்கிழமை) டயானாவுக்கு பள்ளி வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

அன்று பள்ளிக்கு சென்ற டயானா, தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா, கணவர் விஜய்க்கும், உடனே வந்து தன்னை வீட்டுக்கு

அழைத்துச்செல்லுமாறு டெ
லிபோனில் கூறினார். அவரும் விரைந்து பள்ளிக்கு சென்றார்.
இதற்குள் டயானாவுக்கு வலி அதிகரித்தது. சக ஆசிரியைகள் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு போன் செய்தனர். ஆம்புலன்சும், கணவரும் வருவதற்கு முன்னதாக, வகுப்பறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த டயானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

அந்த குழந்தைக்கு ஜோனா என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் பிரசவம் நடந்த வகுப்பறைக்கும், பள்ளி நிர்வாகம் ஜோனா வகுப்பறை என்று பெயர் சூட்டியது.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

மாணவர்களை காப்புறுதி செய்ய நடவடிக்கை


நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களை காப்புறுதி செய்யும் திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்தகவலை கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இது தொடர்பில் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது வெளியிட்டுள்ளார் .

 இதன்படி சுமார் 40 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காப்புறுதி செய்யப்படவுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 14 செப்டம்பர், 2013

யாழில் அதிகரிக்கும் கொள்ளை!

 

யாழ்.குடாவில் ஆலய நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு குற்றச்செயல்களும் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவிற்கு மக்கள் சென்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்.குடாவின் பல பகுதிகளிலும் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் சூறையாடியதில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிறீலங்கா காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற 4 கொள்ளை மற்றும் களவுச்

சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இதுவரைக்கும் கைது செய்யப்படவில்லை என்று கூறும் அளவிற்கு கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இச்செயலில் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது மட்டும் 3 இடங்களில் திருட்டு இடம்பெற்றுள்ளது.

 யாழ்.கந்தர் மடப் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து 6 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் மற்றும்  நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியில் உள்ள வீட்டில் 23 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் என்பனவும் பட்டப் பகல் வேளைகளில் திருடப்பட்டுள்ளமை

குறிப்பிடத்தக்கது.
கந்தர்மடம் பகுதியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லூர் தேர் திருவிழாவிற்கு வீட்டில் உள்ள அனைவரும் வீட்டினை பூட்டிவிட்டு சென்றுள்ளார்கள். வீட்டை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். கந்தர்மடம் புகையிரத நிலைய வீதியில் உள்ள, தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் முரளிதரனின் வீட்டிலேயே இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று அன்றைதினம் இரவு யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடு

ஒன்றினை உடைத்து உட் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 6 இலட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபா பெறுமதி வாய்ந்த பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த முதலாம் நாள் ஞாயிற்றுக்கிழமை யாழ்.சீனியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பட்டப்பகலில் சினிமாபாணியில் கொள்ளையிடப்பட்டுள்ளது. அன்றையதினம்

வயோதிபர்கள் இருவரையும் தனியாக விட்டு விட்டு  எல்லோரும் நல்லூர் ஆலயத்தில் வேல்விமானத் திருவிழாவிற்குச் சென்றுள்ளனர். இதனை நன்கு அவதானித்து வைத்திருந்த கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்த வயோதிபர்கள் இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு, அங்கிருந்த 6 இலட்சத்து 40 ஆயிம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தினைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் வீட்டு உரிமையாளர்கள் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் அவர்களால், கொள்ளையர்களைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. விடுதலைப் புலிகள் யாழ்.குடாவில் தமது நிர்வாகத்தைச் செலுத்திய காலப் பகுதியில் நள்ளிரவு வேளையில் கூட ஒரு பெண் எவ்வளவு நகைகளையும் அணிந்துகொண்டு செல்ல முடியும் என முன்னரும் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால் இன்று அந்த நிலை மாறி பட்டப்பகலில் கூட வீடுகளில் தனித்து இருக்க முடியாத நிலையே அங்கு உள்ளது. அண்மையில், வடபகுதிக்குச் சென்றிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள்கூட அங்கு பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையே அங்கு தொடர்கின்றது என்பதை நிரூபிக்கும் அளவிற்கு அங்கு சம்பவங்கள் நாளும் நடந்தேறுகின்றன. 

இந்நிலையில், யாழ். உடுவிலில் வீதியால் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை உந்துருளியில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் காவல்துறைப்

பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவத்தில் இரண்டு பவுண் நிறையுடைய சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியே வீதியால் சென்ற இளைஞர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த பெண் கூச்சல் இட்டபோதும் குறித்த இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். நெடுந்தீவில் மீண்டும் திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுக்களின் கோட்டையாக விளங்கும்  இப்பகுதிகளில் அண்மைக் காலமாக மிதிவண்டித் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகப் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். இதேபோல் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் பல நோ.கூ. சங்கத்தின் முதலாவது கிளையில் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கிய திருடர்கள் சுமார் பத்தாயிரம் ரூபாவிற்கு அதிகமான பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன், நெடுந்தீவு மேற்கிலுள்ள உபதபாலகத்தின் கூரையைப்பிரித்துக் கொண்டு உள்ளிறங்கிய திருடர்கள் அங்கும் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இந்நிலையில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற திருட்டை அடுத்து அந்தக் கிளையை சங்கம் மூடியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, தமிழர் தாயகப் பகுதிகளில் கொள்ளைகள், சூறையாடல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சிறிலங்கா அரசின் கையாலாகாத காவல்துறையினர், இவற்றுக்குத் துணைபோவதுடன் தடுத்து நிறுத்த நாதியற்றவர்களாய் உள்ளனர். உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே இது உங்களின் கவனத்திற்கு! நீங்கள் ஓய்ந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிறிலங்கா இனவாதத்திற்கு சாதகமே.

எதிர்வரும் 16.09.2013 திங்களன்று ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டப் பேரணியில் ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலக தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்

வியாழன், 12 செப்டம்பர், 2013

சரும குறைபாட்டை போக்கி இளமை தோற்றம்

       
 
தரும் தேன் சிறு சிறு தேன் துளிகள் சருமத்தைப் பராமரிக்கும் பணியினை ஆச்சரியப்படத் தக்க வகையில் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது வரை பருகும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இப்போது அழகுப் பராமரிப்பிற்கு தேனைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
 
பொதுவாக தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது.
 
மேலும் இந்த தேன் சருமத்திற்கான பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப் பிற்கான அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, பண்டைக் காலத்திலிருந்து சிறந்த உணவுப் பெருளாக பயன்படும் தேன் தற்போது, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுகிறது.
 
மொத்தத்தில் அழகுப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக தேன் இருக்கும். இப்போது கூந்தல் பராமரிப்பிற்கும், சருமப் பராமரிப்பிற்கும் சில தேன் கலந்த வீட்டுக்குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திப் பாருங்கள்.
கூந்தலுக்கு :
 
சிக்கலற்றபட்டுப் போன்ற கூந்தல் வேண்டுமா? அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் கூந்தல் எண்ணெய் பசையின்றி பட்டுப்போல மென்மையாக இருக்க வேண்டுமா? அப்படியாயின் இம்முறையைப் பயன்படுத்திப்பாருங்கள்.
 
ஒரு கிண்ணத்தில், இரண்டு மேசைக் கரண்டி தயிர், இரண்டு முட்டைகள் (வெள்ளைக்கரு மட்டும்), எலுமிச்சைச் சாறு, ஐந்து துளி தேன் ஆகியவை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் அரை மணிநேரம் கழித்து, தண்ணீரில் நன்றாக
 அலச வேண்டும். இதனால் கூந்தலானது பட்டுப்போல மென்மையாகி இருப்பதைக் கவனிப்பீர்கள்.
பளபளப்பான கூந்தலுக்கு :
தேனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தல் மீது தடவி, சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் அலசினால், கூந்தல் பளபளப்புடன் இருப்பதைக் காண முடியும்.
 
பருக்கள் :
சிலரது சருமம் எளிதில் பருக்கள் உருவாவதற்கு வசதியானதாக இருக்கும். பருக்கள் நிறைந்த சருமம் உண்மையிலேயே பராமரிப்பதற்கு கடினமானது தான். பருக்களைப் போக்குவதும் கடினமான காரியம் தான். எனவே வீட்டில் உள்ள மசாலா பொருள்களில் ஒன்றான பட்டையையும் சிறிது தேனையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
 
பின் இதனை பருக்களின் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். பருக்களைப் போக்குவதற்கு இது சிறப்பான ஒரு வீட்டு மருத்துவம்.
 
கலப்பட தேனுக்கான அறிகுறிகள் :
மார்க்கெட்டில் மிக எளிதாகக் கிடைக்கும் பொருள் தான் தேன் என்றாலும், அது தரமான தேனா என்று பார்த்து வாங்குங்கள். தேனில், வெல்லப்பாகு அல்லது சர்க்கரைப்பாகு அல்லது சில சமயங்களில் தண்ணீர் கலந்தும் கலப்படமான தேன் விற்கப்படுகிறது.
 
கலப்படம் செய்யப்பட்ட தேனில் இயற்கையான மருத்துவக் குணங்கள் இருப்பதில்லை. ஆகவே தேனை வாங்கும் போது கவனமாக இருங்கள். சுத்தமான தேனா அல்லது கலப்படம் செய்யப்பட்ட தேனா என்று சோதனை செய்ய ஒரு எளிய வழி, அதனை உறைய வைத்துப் பார்ப்பது ஆகும்.
 
அதற்கு வாங்கிய தேனை, வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்திருந்து எடுத்துப் பாருங்கள். சுத்தமான தேன் என்றால், அதே பிசுபிசுப்புடன் பாகு நிலையிலேயே இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன் என்றால், உறைந்திருக்கும். வீட்டு தேன் பாட்டிலைச் சுற்றி எறும்புகள் மொய்க்கின்றனவா?
 
அப்படியென்றால் அது கலப்படமான தேன். சுத்தமான தேன் எறும்புகளை அண்டவிடாது. சிறிது நாள் கழித்து தேன் படிகங்களாக அடியில் படிகிறதா? அப்படி யென்றால், அது கலப்படமான தேன்ஆகும். ஏனெனில் அதில் சர்க்கரைப்பாகு கலக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்
 
தேன் வாங்கும் போது மேற்கூறிய சோதனைகளைச் செய்து பார்த்துக் கவனமுடன் வாங்குங்கள். தேனின் மருத்துவக் குணங்களைப் பெறுங்கள். நல்ல தேனை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்றால், அந்தக் கம்பெனித் தயாரிப்புகளையே தொடர்ந்து வாங்குங்கள்

சீமான் கிட்ட பேச்சு இருக்குஎன்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு :

 
 **நடிகை விஜயலெட்சுமி ‘‘மூணு வருஷமாக நானும் சீமானும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து, அவரோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாத்திலும் நான் கூடவே இருந்திருக்கேன். நாங்க கல்யாணம் பண்றதாகத்தான் இருந்துச்சு. எங்க ஃபேமிலியில எங்க திருமணத்தை

ஏத்துக்கிட்டதாலதான் தொடர்ந்து ரிலேஷன்ஷிப்ல இ ருந்தோம். பொதுவாக ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா யாரும் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனால் அப்ப கூட அவரோடயே நான் இருந்திருக்கேன்.

போன மாசம்தான் நாங்க ‘கல்யாணம் நடக்கவே மாட்டேங்குதே’னு கேட்டோம். சில வி.ஐ.பி.க்களை வைச்சு பேசிப் பார்த்தோம். அவங்ககிட்ட ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்ல. நான் அவளைப் பார்த்தே ஒண்ணரை வருஷமாச்சு’ன்னு சொல்லியிருக்கார். அப்படீன்னா அவரோட மனசில என்னதான் இருக்குங்கிறதுதான் என்னோட கேள்வி.

நல்லா பழகுறாங்க. ஆனால் வெளியே சொஸைட்டியில யாராவது கேட்டால், ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்ல’ன்னு சொல்றாங்க. நான் அந்தமாதிரி பொண்ணு இ ல்லைங்க. இருட்டுக்குள்ளே இருக்கிற ரிலேஷன்ஷிப்புக்காக நான் வரல. உங்க பத்திரிகையிலேயே ‘செத்த பொணத்துக்கு பொண்டாட்டி தேவையா’ன்னு அவரே சொல்றார். அப்புறம் அவரேதான் ‘நான் ஒரு இலங்கைப் பெண்ணைத் தேடிக்கிட்டு இருக்கேன். கட்டிக்கப் போறேன்’னு

சொல்றார். அவரே ஒரு குழப்பமான நிலையில இ ருக்கார்ங்கிறது தெளிவாகத் தெரியுது.’’
மதுரை ஹோட்டல்ல நீங்க தங்கினதா சொல்ற நாள்ல சீமான் சிறையிலிருந்ததாகச் சொல்றாங்களே?

‘‘அப்ப அவருக்கு பெயில் கிடைச்சது. வெளியே வந்தார். மதுரை நீதிமன்றத்துல அவர் கையெழுத்துப் போடவேண்டியிருந்துச்சு. அப்ப அவர் அந்த ஹோட்டல்ல இருந் தப்ப, அவரோட ஆட்கள் டிக்கெட் போட்டு என்னைக் கூப்பிட்டாங்கங்கிறதுதான் நான் கொடுத்த விஷயம். இதுதான் உண்மை. வெளியே அவர், ‘நான் தியாகி. எனக்கு ஈழ விஷயத்தைத் தவிர வேறெதுவும் இல்ல’ன்னு சொல்வார். என்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு. அவர் கிட்ட பேச்சு இருக்கு.

நானும் தமிழ்ப் பொண்ணு. சைவப் பிள்ளைமார். காவிரிப் பிரச்னையில இருந்து ஒகேனக்கல் பிரச்னை வரைக்கும் நான் தமிழுக்காக நிற்கிற தமிழ்ப் பொண்ணு. தமிழ்நாட் டுல இருக்கிற தமிழ்ப் பெண்ணான என்னை இங்கே நிக்க வைச்சிட்டு ஈழத்துல இருக்கிற அகதிப் பெண்ணைத் தேடுறேன்னா என்ன அர்த்தம்?’’
நீங்க புகார் கொடுத்ததன் பின்னணியில காங்கிரஸ் பிரமுகர்கள் இருப்பதாக கிசுகிசு இருக்கே?

“குழாய்ல தண்ணி வரலன்னா கூட அதுக்குக் காரணம் காங்கிரஸ்தான்னு சொல்வார். என்னை நேருக்கு நேராகப் பார்த்து, ’நீ யாருன்னு தெரியல, நான் எதுவும் பண் ணல’ன்னு சொல்ல முடியுமா அவரால. எனக்கு இன்னிக்கு யாருமில்ல. நான் தனியாளாகத்தான் நிக்குறேன். எனக்கு காங்கிரஸ் ஆளு யாரும் சப்போர்ட் பண்ணல. நான் நேரடியாகவே போய் கமிஷனர்கிட்ட

 கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்கேன். எனக்கு யாரும் சப்போர்ட் கொடுத்துடக் கூடாதுனு இப்படிச் சொல்றார்.’’
இதுபோன்ற பிரச்னைகளில் நீங்கள் ஏற்கெனவே சிக்கி, உங்கள் மேல் புகார்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே...

‘‘பழைய கதையெல்லாம் முடிஞ்சு போச்சு. அந்தக் கதை முடிஞ்சு சீமான்கிட்ட நான் வந்தாச்சு. சீமானுடன் வந்த பிறகு ஒரு நாளைக்கு பத்து போனாவது பண்ணுவார். ‘எங்க போயிட்டு இருக்க.. எங்கே இருக்கே’ன்னு போன் பண்ணிட்டேதான் இருப்பார். மூணு வருஷமாக அவரோட ரிலேஷன்ஷிப்ல இருக்கும்போது நான் எங்கேயாவது போகமுடியுமா?

உங்க பழைய கதையெல்லாம் கேட்டு மன்னிச்சுதானே ஏத்துக்கிட்டேன். பச்சையாவே சொல்றேன் உங்களுக்கு ஆசை, அன்புன்னு தேவைப்பட்டப்ப நான் கொடுத்தேன்ல. எனக்கு அப்பாவும் இல்ல. அண்ணனும் இல்ல. எனக்குன்னு கேட்க வீட்டுல ஆம்பளை இல்ல.’’

இவ்வளவு நடந்த பிறகும் சீமானுடன் இணைந்து வாழ நீங்க தயாரா?
‘‘என்னை யாருன்னு கேட்ட பிறகு அவர் எனக்குத் தேவையே இல்ல. என்னை மாதிரி வேறெந்தப் பொண்ணும் ஏமாந்துடக்கூடாதுங்கிறதுக்குதான் இதை வெளியே கொண்டு வந்திருக்கேன்.’’

நீங்க கொடுத்த ஆதாரங்கள் போதுமான அளவு இல்ல. அதனால போலீஸ் நடவடிக்கை எடுக்கலன்னு ஒரு பேச்சு இருக்குதே?

‘‘விசாரணை சரியா போய்க்கிட்டு இருக்கு. அவர் சொல்றது பொய்னு ஆகும். நான் சொல்றது நிரூபணம் ஆகும். அம்மா ஆட்சியில, கலங்கி நிற்கும் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்னு நம்புறேன்.’’

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இலக்கியச்சந்திப்பில் நாம் எப்போது நாகரிகமடைவது?


இதுவரை காலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டும் நடைபெற்று வந்த இலக்கியச் சந்திப்பின் 41-வது மாநாடு முதன்முறையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த சனியும் ஞாயிறும் யாழ்ப்பாணம் அக்றேறியன் லேனில் உள்ள யூரோவில் மண்டபத்தில் இந்த இலக்கியச் சந்திப்பின் ஒவ்வொரு நாளும் சுமார் இருநூறு பேர்வரையில் வந்து கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து வந்திருந்த இலக்கிய ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் பண்பாடு, சாதியம், இலக்கியம், தேசிய இனங்கள்-பிரச்சினைகள் ஆகிய தலைப்புகளில் பல மணிநேர விவாதங்களை நடத்தியிருந்தனர். பல புதிய கருத்துக்களும் நெஞ்சைத் தொடும் அனுபவப்பகிர்வுகளும் ஒவ்வொரு அமர் விலும் வெளிப்பட்டன.

முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம் ஆகியவற்றின் முகிழ்ப்பின் பின்னுள்ள காரணிகள், சிங்களத் தேசியத்தின் எண்ணப்பாடுகள் குறித்த சிங்கள வளவாளர்களின் பகிர்வுகள், தமிழ்த் தேசியம் பற்றிய விசாரணை, சாதியம், பெண்களின் நிலை, வரலாற்று விடுபடல்கள், பண்பாட்டுருவாக்க நெருக்கடிகள் குறித்தெல்லாம் விரிவான பலதரப்பு விவாதங்கள் நடத்தப்பட்டன.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிலிருந்து இந்து ஆங்கில நாளிதழ், லண்டனிலிருந்து பிபிசி போன்றவை எல்லாம் இந்த இலக்கியச் சந்திப்பு பற்றி செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் தமிழ் ஊடகங்களில் இப்படி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்ததற்கான அடையாளத்தையே காணக்கிடைக்கவில்லை. அதிலும் யாழ்ப்பாண ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டது ஏன் என்று யோசித்தால்தான் எங்கள் பத்திரிகா தர்மங்கள் ஊடக நடுவுநிலைமை எல்லாம் ஓடிவெளிக்கின்றன. மற்றவர்களின் கதையை காதுகொடுத்துக் கேட்கவே விரும்பாத போக்கும், மற்றவர் கதியை நினைத்தே பார்க்க விரும்பாத தன்மோகமும் தான் எங்கள் சமூகத்தை இன்னும் வழிநடத்து வதாகத் தெரிகிறது.

ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பார்வைகளை ஏனைய பேச்சுக்களை சகித்துக்கொள்ளாமையும் அவற்றை மறைக்க முற்படுதலுமே நம் ஊடக அரசியல் கலாசாரமாக இருக்கிறது. நம்மைத் தவிர்ந்த மற்றவர்களை (மற்றவற்றை) நம்மைவிட மட்டமாக நினைப்பதும், இழித்து ஒதுக்குதலும் நமது மரபாயி ருந்துவரும் பழக்கங்களிலொன்று என்பது தெரிந்ததே. அது இவ்வளவு உலக மாற்றங்களுக்குப் பிறகும் இன்றும் தொடர்கிறது.

 வடக்கத்தியான், மோட்டுச் சீனா, தொப்பி பிரட்டி, காப்பிலி, பறங்கி, பாம்புதின்னி என்பவையெல்லாம் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை விளிப்பதற்காக நாம் ஏற்கனவே தமிழில் வைத்திருக்கும் வார்த்தைகள் என்பதில் அதிசயமென்ன? இதிலுள்ள பாசிஸ மனோநிலையை இன்னும் உணராதவர் களாகவே நம்மில் பலர் இன்றும் இதே பாணியில்

பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அதையே தமிழ்ப் பெருமையாகவும் எண்ணிக்கொள்ளும் கடந்த காலத்தவர்களாக மாறாமனிதர்களாய் இன்னுமிருக்கிறோம்.

ஒருபடி மேலே போய், அந்த சமூகங்கள் நாம் நினைத்தமாதிரி நடக்கவில்லை என்றால், மிரட்டுவதும் சாபமிடுவதும் குதிப்பது மாக மிகக் கேலிக்கிடமாகவும் நடந்துகொள்கிறோம். நம்மை நாமே உயர்வாய் நினைத்துக்கொண்டு பிறரை விலக்குதல் மிரட் டுதல் ஒழித்துவிடுதல் என்ற எண்ணப்பாங்கிலேயே இன்னமும் நமது ஊடகங்களும் ஆதிக்க அரசியலாளர்களும் செயற்பட்டு வரு வதை அவதானிக்க முடிகிறது.

இங்கு பலர் இப்போதும் இனவாதத்தன்மை மாறாமலேயே சிந்திக்கிறார்கள்; எழுதுகிறார்கள். அதிலுள்ள அறக்கீழ்மை பற்றிய புரிதலும் குற்றவுணர்வும் கூட இல்லை. ம்… எப்போது நாகரிகம டைந்த மனித சமுதாயங்களில் ஒன்று என நாமும் ஆகப்போகி றோம்?
 

கொச்சினுக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது


  சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் கொச்சினுக்கு தங்கம் கடத்திச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று காலை  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தின் மொத்தப் பெறுமதி 27 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆணொருவரும், 46 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆண் 350 கிராம் நிறைகொண்ட இரண்டு தங்க பிஸ்கட்டுக்களை மலவாயில் வைத்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

மேலும் அவருடன் வந்த பெண் 200 கிராம் நிறைகொண்ட தங்கத்தினால் செய்யப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசுகளை கால்களில் அணிந்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

இவர்கள் இருவரும் இன்று காலை 7 மணியளவில் இந்தியாவின் கொச்சின் நோக்கி செல்லும்  ஸ்ரீலங்கன் எயார் யு.எல் 165 விமானத்தில் பயணிக்கும் பொருட்டு விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.
எனினும் இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது தங்கம் கடத்திச் செல்லவிருந்தமை தெரியவந்துள்ளது.

பின்னர் இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திங்கள், 9 செப்டம்பர், 2013

மண்ணுக்கான மோதலில் தம்பியின் தாக்குதலில் அண்ணன் மரணம்

 
பொலன்நறுவை காலிங்க எல பிரதேசத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல் அறுவடை தொடர்பில் இச் சகோதரர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினை மூண்டுள்ளது.

இதன்போது தம்பியின் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் உயிரிழந்துள்ளார்.
அண்ணனுக்கு சொந்தமான வயலை தம்பிக்கு வழங்குவதாக குறிப்பிட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படாமையின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (08) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலன்நறுவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

குடிகாரர்களின் சாகசக் காட்சி..கொடூர விபத்தில் முடிந்தது..


பிரான்ஸின் வடக்கு பகுதியிலுள்ள பிரிட்டானியில் கார் சாகசம் மேற்கொள்ள முனைந்த போது 64 கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.

சுமார் 1500 பார்வையாளர்கள் கூடியிருந்த போது இந்த சாகசக்காட்சியை காண்பிக்க முனைந்தவர்கள் மதுபோதையில் இருந்தமையினாலேயே இக்கொடூர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் நேரடிச் சாட்டிகளின் அடிப்படையாகக் கொண்டு 32 மற்றும் 37 வயதை உடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு 2 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்{காணொளி}

 


வியாழன், 5 செப்டம்பர், 2013

நம் கல்லுாரி வாழ்க்கை.மீண்டும்வராது.!!!

சலனத்துடனும் சஞ்சலத்துடனும்
 கால் எடுத்து வைத்த நொடிகள்
 சத்தத்தின் உச்சத்தோடு
 பல பல புது முகங்கள்...!
பயத்துடனும் ப்ரியத்துடனும்
 பயணம்போல் தொடர்ந்து சென்று
'ஹாய்' என்ற வார்த்தையுடன்
 ஒரு சிறு புன்னகைகள்...!
வகுப்பறைக்குள் நுழைந்தவுடன்
 கதிரை மேசை தேடிச்சென்று
 பல்கனியில் பலர் நாம்
 கூடிப்படித்த நினைவலைகள்...!
பாசமாய் சில உறவு
 அன்போடு சில உறவு
 காதலுக்கும் குறைவில்லை
 கைகள் சில சேரவில்லை...!
கண்டிப்புடன் தண்டிக்காது
 கவலை தீர புத்தி சொல்லி
 கரைசேர்த்த காலங்கள் போய்
 கண்ணீருடன் சில துளிகள்...!
கலகலப்பாய் கைகோர்த்து
 பல பாசல் கைவைத்து
 அரை நிமிடம் உணவு உண்டு
 அதிக கதை கதைத்த நேரம்...!
கைபிடித்து மைதானத்தின்
 நடுவினிலே சுற்றித் திரிந்து
 சிரிப்புடனும் சண்டையுடனும்
 சினுங்கிய சில காலம்...!
அதிபரை கண்டவுடன்
 ஜந்து நிமிடம் அமைதியுடன்
 அடக்கமாய் இருந்துவிட்டு
 பிளைத்துக்கொண்ட சிறு நிமிடம்...!
ஆசையாய் பெயர்கள் தனை
 சுவரிலும் வாங்கிலுமாய்
 செதுக்கி உரிமையாக்கி
 மகிழ்ந்திட்ட சில நொடிகள்...!
சொந்தம் போல் நண்பர்கள் நாம்
 கைபிடித்து சுற்றி வந்து
 கவி வரைந்து நக்கலடித்து
 கழித்திட்ட சில பொழுது...!
கடிகார முள்பார்த்து
 பாடங்கள் தனை போக்கி
 இடைவேளைக்கு காத்திருக்கும்
 இனிய சில அரை மணி நேரம்...!
ஆங்கிலப் புத்தகத்தின்
 பக்கங்கள் சில பறித்தே
 றொக்கற் எய்திடவே
 முறைத்திட்ட சில காலம்...!
நிகழ்ச்சிகள் விழாக்கள் என
 ஓடி ஆடி போட்டி போட்டு
 புதிய சில ஆக்கங்கள்
 படைத்திட்ட சில நாட்கள்...!
சண்டையிட்டு மௌணமாகி
 கண்ணீரால் மேசை கழுவி
 ஊமைகளாய் போய்விட்ட
 பலனற்ற சில நிமிடம்...!
கதிரைகள் பல சேர்த்து
 பலர் கூடி இனைந்திருந்து
 பலர் கதை கதைத்திட்ட
 கலகலப்பான சில நாட்கள்...!
திசைமாறி சில பாடம்
 சிரிப்பின்றி புரிந்திட்டு
 சிதறடித்த சில பொழுதின்
 கசப்பான சில நாட்கள்...!
கடைசி வரை மாறாது
 கனிவுடனே பேசிக்கொண்டு
 கலகலப்பாய் எப்பொழுதும்
 கைகோர்த்த சில நாட்கள்...!
பிரிந்திட்ட சில நாளில்
 அதிஸ்ரமின்றி கண்ணீருடன்
 பிரியாவிடை தந்திடாத - நம்
 கல்லுாரி சொந்தங்கள்...!
இத்தனையும் தந்திட்ட
 கல்லுாரி வாழ்வு தனில்
 அர்த்தமின்றி நாம் வரைந்த
 சில நொடிப் பாடங்கள்...!
புகைப்படத்தின் நினைவு ழூலம்
 சிரித்திட்ட சில முகங்கள்
 புகைப்படத்தில் தவறிய - அரிய
 சில நல் முகங்கள்...!
அத்தனையும் நிறைந்த அந்த
 இரண்டரை மணி நேரம்
 வாழ்வாக அமைந்திட்ட - நம்
 ஆயுட்கால வாழ்க்கை...!
இத்தனையும் அனுபவித்த - நம்
 கல்லுாரி வாழ்வு தான்
 எக்காலம் சென்றாலும்
 மறவாத நம் இன்பம்...!
எத்தனை பிறவியிலும்
 இத்தனை இன்பம் காண
 கல்லுாரி வாழ்வொன்று
 காணோமா இனியும் நாம்...!
நினைவோரக் கனவுகளாய்
 நம் கல்லுாரிச் சொந்தங்கள்
 மொத்தத்தில் இனியாவும்
 வராது மீண்டும் வாழ்வில்.......!





செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ராணி பயன்படுத்திய கார் ஏலத்தில் விற்பனை,,

,   
இரண்டாம் எலிசபெத் ராணி உபயோகித்த லிமோசின் சொகுசுக் கார் சர்ரே நகரில் இயங்கிவரும் புரூக்லேண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை உபயோகித்த கார் ஒன்றே ஏலத்தில் விடப்பட்டது.

அந்த காரை 40,500 பவுன்ஸ்கள் கொடுத்து ஒரு பணக்கார தொழிலதிபர் வாங்கியுள்ளார். அவரது பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் எண் Y694 CDU ஆகும்.
இதுவரை 11,000 மைல்கள் மட்டுமே ஓடிய அந்த கார் 2001 Daimler Super V8 LWB வகையை சேர்ந்தது.

இந்த காரில் இருந்துகொண்டே ராணி உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு தேவையான தகவல்களை கேட்டுக்கொள்ளும் வசதி இருந்தது. தற்போது இந்த கார் விற்பனை செய்யப்பட்டதால் அந்த வசதியை மட்டும் அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

இந்த காரை பெரும்பாலும் ராணியே ஓட்டி வந்துள்ளார். டிரைவர் யாரையும் அவர் இந்த காரில் அனுமதிக்கவில்லை.
ராணி உபயோகித்த இந்தக் காரில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் காரின் சீட்டுகளுக்கு நடுவில் ராணியின் கைப்பையை வைப்பதற்காகவே நடுவில் இருந்த கைப்பகுதியில் சிறப்பு அமைப்பு ஒன்றும் இருந்தது.

ராணி அரண்மனையை நெருங்கும்போது, அவரது வருகையை அறிவிக்கும்விதமாக பின்புற பார்வைக் கண்ணாடி அருகில் நீல நிற நியான் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

நான்கு லிட்டர் என்ஜினுடன் கூடிய இந்தக் கார் நல்ல நிலையில் பூர்வீக ரெஜிஸ்ட்ரேஷன் நம்பருடனும், அசலான பத்திரங்களுடனும், ராணி அந்தக் காரை ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படத்துடனும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில் விற்கப்பட்டுள்ளது
(காணொளி இணைப்பு)  

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

:அழகிப் போட்டிஉயரம் குறைவானவர்களுக்கான ! :


உயரம் குறைவானவர்களுக்கான அழகிப் போட்டி : சென்னை நடைபெறுகிறது
சென்னை, ஆகஸ்ட் 31 (டி.என்.எஸ்) நாகரிக உலகில் புதுமையாகவும் புரட்சிகரமாகவும் ஒரு போட்டியை நடத்தும் நோக்கத்தில், ஒளியும் ஒலியும் பொழுது போக்கு நிறுவனம் சென்னையில் 'என்.ஏ.சி இளம் இளவரசி' என்ற போட்டியை நடத்த உள்ளது.
இந்த போட்டியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த போட்டியில் உயரம் குறைவானவர்களே கலந்து கொள்ள முடியும். இந்த போட்டியில் பங்கு கொள்ள பெண்களின் உயரம்  5.7 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். அழகி போட்டியில் வெல்ல உயரம் ஒரு தடையல்ல.
தகுதி சுற்று போட்டிகள் மூலம் 12 இறுதி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் முதல் சுற்று போட்டியில் நடுவர்களாக பேஷன் டிசைனர் சிட்னி ஷெல்டன், மாடல் அழகி ப்ரதாயினி சர்வோத்தம் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
பெண்களின் பல்வேறு திறன்களை வெளிபடுத்த வாய்பளிக்கும் விதமாக இப்போட்டி அமையும், இறுதி போட்டியாளர்கள் அழகு, உடல் திறன் யோகா, தற்காப்பு, நடிப்பு மற்றும் ஆளுமை திறன் போன்ற பல திறமை கலை அடிப்படையாக கொண்டு இறுதி போட்டிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் பெண்களை இறுதி போட்டிக்கு தயார் படுத்துவார்கள்
இறுதி போட்டியில் பிரபலங்கள் திரைப்பட கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். ஸ்டார் விஜய் டிவி யில் ஒளிபரப்பப்படும். போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 'என்.ஏ.சி  அழகி' என்ற பட்டம் வழங்கப்படும்