siruppiddy

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ராணி பயன்படுத்திய கார் ஏலத்தில் விற்பனை,,

,   
இரண்டாம் எலிசபெத் ராணி உபயோகித்த லிமோசின் சொகுசுக் கார் சர்ரே நகரில் இயங்கிவரும் புரூக்லேண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை உபயோகித்த கார் ஒன்றே ஏலத்தில் விடப்பட்டது.

அந்த காரை 40,500 பவுன்ஸ்கள் கொடுத்து ஒரு பணக்கார தொழிலதிபர் வாங்கியுள்ளார். அவரது பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் எண் Y694 CDU ஆகும்.
இதுவரை 11,000 மைல்கள் மட்டுமே ஓடிய அந்த கார் 2001 Daimler Super V8 LWB வகையை சேர்ந்தது.

இந்த காரில் இருந்துகொண்டே ராணி உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு தேவையான தகவல்களை கேட்டுக்கொள்ளும் வசதி இருந்தது. தற்போது இந்த கார் விற்பனை செய்யப்பட்டதால் அந்த வசதியை மட்டும் அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

இந்த காரை பெரும்பாலும் ராணியே ஓட்டி வந்துள்ளார். டிரைவர் யாரையும் அவர் இந்த காரில் அனுமதிக்கவில்லை.
ராணி உபயோகித்த இந்தக் காரில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் காரின் சீட்டுகளுக்கு நடுவில் ராணியின் கைப்பையை வைப்பதற்காகவே நடுவில் இருந்த கைப்பகுதியில் சிறப்பு அமைப்பு ஒன்றும் இருந்தது.

ராணி அரண்மனையை நெருங்கும்போது, அவரது வருகையை அறிவிக்கும்விதமாக பின்புற பார்வைக் கண்ணாடி அருகில் நீல நிற நியான் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

நான்கு லிட்டர் என்ஜினுடன் கூடிய இந்தக் கார் நல்ல நிலையில் பூர்வீக ரெஜிஸ்ட்ரேஷன் நம்பருடனும், அசலான பத்திரங்களுடனும், ராணி அந்தக் காரை ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படத்துடனும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில் விற்கப்பட்டுள்ளது
(காணொளி இணைப்பு)  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக