பிரித்தானிய பயணிகள் விமானமொன்று பறந்துகொண்டிருந்தபோது இரு விமானிக ளும் உறங்கிக்கொண்டு சென்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எயார் பஸ் ஏ330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் இயக்கத்தை “ஒட்டோ பைலட்” முறைமைக்கு மாற்றிவிட்டே இவர்கள் இவ்வாறு உறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. விமானம் தரையிலிருந்து கிளம்பியவுடன் விமானத்தை ஒட்டோ பைலட் முறைமைக்கு மாற்றிவிட்டு ஒருவர் மாறி ஒருவர் சிறிது நேரம் உறங்குவதற்கு தலைமை விமானியும் துணை விமானியும் இணங்கினர்.
ஆனால் அவர்களில் ஒருவர் விழித்தெழுந்து பார்த்தபோதே இருவரும் உறங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்துள்ளார். இச்சம்பவம் குறித்து இவர்கள் தாமாகவே முன்வந்து பிரித்தானிய சிவில் விமான சேவைகள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, இவ்விமானிகள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அதிகாரிகள் வெளியிடவில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக