siruppiddy

சனி, 14 செப்டம்பர், 2013

யாழில் அதிகரிக்கும் கொள்ளை!

 

யாழ்.குடாவில் ஆலய நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு குற்றச்செயல்களும் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவிற்கு மக்கள் சென்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்.குடாவின் பல பகுதிகளிலும் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் சூறையாடியதில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிறீலங்கா காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற 4 கொள்ளை மற்றும் களவுச்

சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இதுவரைக்கும் கைது செய்யப்படவில்லை என்று கூறும் அளவிற்கு கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இச்செயலில் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது மட்டும் 3 இடங்களில் திருட்டு இடம்பெற்றுள்ளது.

 யாழ்.கந்தர் மடப் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து 6 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் மற்றும்  நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியில் உள்ள வீட்டில் 23 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் என்பனவும் பட்டப் பகல் வேளைகளில் திருடப்பட்டுள்ளமை

குறிப்பிடத்தக்கது.
கந்தர்மடம் பகுதியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லூர் தேர் திருவிழாவிற்கு வீட்டில் உள்ள அனைவரும் வீட்டினை பூட்டிவிட்டு சென்றுள்ளார்கள். வீட்டை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். கந்தர்மடம் புகையிரத நிலைய வீதியில் உள்ள, தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் முரளிதரனின் வீட்டிலேயே இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று அன்றைதினம் இரவு யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடு

ஒன்றினை உடைத்து உட் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 6 இலட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபா பெறுமதி வாய்ந்த பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த முதலாம் நாள் ஞாயிற்றுக்கிழமை யாழ்.சீனியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பட்டப்பகலில் சினிமாபாணியில் கொள்ளையிடப்பட்டுள்ளது. அன்றையதினம்

வயோதிபர்கள் இருவரையும் தனியாக விட்டு விட்டு  எல்லோரும் நல்லூர் ஆலயத்தில் வேல்விமானத் திருவிழாவிற்குச் சென்றுள்ளனர். இதனை நன்கு அவதானித்து வைத்திருந்த கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்த வயோதிபர்கள் இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு, அங்கிருந்த 6 இலட்சத்து 40 ஆயிம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தினைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் வீட்டு உரிமையாளர்கள் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் அவர்களால், கொள்ளையர்களைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. விடுதலைப் புலிகள் யாழ்.குடாவில் தமது நிர்வாகத்தைச் செலுத்திய காலப் பகுதியில் நள்ளிரவு வேளையில் கூட ஒரு பெண் எவ்வளவு நகைகளையும் அணிந்துகொண்டு செல்ல முடியும் என முன்னரும் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால் இன்று அந்த நிலை மாறி பட்டப்பகலில் கூட வீடுகளில் தனித்து இருக்க முடியாத நிலையே அங்கு உள்ளது. அண்மையில், வடபகுதிக்குச் சென்றிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள்கூட அங்கு பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையே அங்கு தொடர்கின்றது என்பதை நிரூபிக்கும் அளவிற்கு அங்கு சம்பவங்கள் நாளும் நடந்தேறுகின்றன. 

இந்நிலையில், யாழ். உடுவிலில் வீதியால் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை உந்துருளியில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் காவல்துறைப்

பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவத்தில் இரண்டு பவுண் நிறையுடைய சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியே வீதியால் சென்ற இளைஞர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த பெண் கூச்சல் இட்டபோதும் குறித்த இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். நெடுந்தீவில் மீண்டும் திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுக்களின் கோட்டையாக விளங்கும்  இப்பகுதிகளில் அண்மைக் காலமாக மிதிவண்டித் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகப் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். இதேபோல் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் பல நோ.கூ. சங்கத்தின் முதலாவது கிளையில் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கிய திருடர்கள் சுமார் பத்தாயிரம் ரூபாவிற்கு அதிகமான பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன், நெடுந்தீவு மேற்கிலுள்ள உபதபாலகத்தின் கூரையைப்பிரித்துக் கொண்டு உள்ளிறங்கிய திருடர்கள் அங்கும் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இந்நிலையில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற திருட்டை அடுத்து அந்தக் கிளையை சங்கம் மூடியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, தமிழர் தாயகப் பகுதிகளில் கொள்ளைகள், சூறையாடல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சிறிலங்கா அரசின் கையாலாகாத காவல்துறையினர், இவற்றுக்குத் துணைபோவதுடன் தடுத்து நிறுத்த நாதியற்றவர்களாய் உள்ளனர். உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே இது உங்களின் கவனத்திற்கு! நீங்கள் ஓய்ந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிறிலங்கா இனவாதத்திற்கு சாதகமே.

எதிர்வரும் 16.09.2013 திங்களன்று ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டப் பேரணியில் ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலக தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக