சலனத்துடனும் சஞ்சலத்துடனும்
கால் எடுத்து வைத்த நொடிகள்
சத்தத்தின் உச்சத்தோடு
பல பல புது முகங்கள்...!
பயத்துடனும் ப்ரியத்துடனும்
பயணம்போல் தொடர்ந்து சென்று
'ஹாய்' என்ற வார்த்தையுடன்
ஒரு சிறு புன்னகைகள்...!
வகுப்பறைக்குள் நுழைந்தவுடன்
கதிரை மேசை தேடிச்சென்று
பல்கனியில் பலர் நாம்
கூடிப்படித்த நினைவலைகள்...!
பாசமாய் சில உறவு
அன்போடு சில உறவு
காதலுக்கும் குறைவில்லை
கைகள் சில சேரவில்லை...!
கண்டிப்புடன் தண்டிக்காது
கவலை தீர புத்தி சொல்லி
கரைசேர்த்த காலங்கள் போய்
கண்ணீருடன் சில துளிகள்...!
கலகலப்பாய் கைகோர்த்து
பல பாசல் கைவைத்து
அரை நிமிடம் உணவு உண்டு
அதிக கதை கதைத்த நேரம்...!
கைபிடித்து மைதானத்தின்
நடுவினிலே சுற்றித் திரிந்து
சிரிப்புடனும் சண்டையுடனும்
சினுங்கிய சில காலம்...!
அதிபரை கண்டவுடன்
ஜந்து நிமிடம் அமைதியுடன்
அடக்கமாய் இருந்துவிட்டு
பிளைத்துக்கொண்ட சிறு நிமிடம்...!
ஆசையாய் பெயர்கள் தனை
சுவரிலும் வாங்கிலுமாய்
செதுக்கி உரிமையாக்கி
மகிழ்ந்திட்ட சில நொடிகள்...!
சொந்தம் போல் நண்பர்கள் நாம்
கைபிடித்து சுற்றி வந்து
கவி வரைந்து நக்கலடித்து
கழித்திட்ட சில பொழுது...!
கடிகார முள்பார்த்து
பாடங்கள் தனை போக்கி
இடைவேளைக்கு காத்திருக்கும்
இனிய சில அரை மணி நேரம்...!
ஆங்கிலப் புத்தகத்தின்
பக்கங்கள் சில பறித்தே
றொக்கற் எய்திடவே
முறைத்திட்ட சில காலம்...!
நிகழ்ச்சிகள் விழாக்கள் என
ஓடி ஆடி போட்டி போட்டு
புதிய சில ஆக்கங்கள்
படைத்திட்ட சில நாட்கள்...!
சண்டையிட்டு மௌணமாகி
கண்ணீரால் மேசை கழுவி
ஊமைகளாய் போய்விட்ட
பலனற்ற சில நிமிடம்...!
கதிரைகள் பல சேர்த்து
பலர் கூடி இனைந்திருந்து
பலர் கதை கதைத்திட்ட
கலகலப்பான சில நாட்கள்...!
திசைமாறி சில பாடம்
சிரிப்பின்றி புரிந்திட்டு
சிதறடித்த சில பொழுதின்
கசப்பான சில நாட்கள்...!
கடைசி வரை மாறாது
கனிவுடனே பேசிக்கொண்டு
கலகலப்பாய் எப்பொழுதும்
கைகோர்த்த சில நாட்கள்...!
பிரிந்திட்ட சில நாளில்
அதிஸ்ரமின்றி கண்ணீருடன்
பிரியாவிடை தந்திடாத - நம்
கல்லுாரி சொந்தங்கள்...!
இத்தனையும் தந்திட்ட
கல்லுாரி வாழ்வு தனில்
அர்த்தமின்றி நாம் வரைந்த
சில நொடிப் பாடங்கள்...!
புகைப்படத்தின் நினைவு ழூலம்
சிரித்திட்ட சில முகங்கள்
புகைப்படத்தில் தவறிய - அரிய
சில நல் முகங்கள்...!
அத்தனையும் நிறைந்த அந்த
இரண்டரை மணி நேரம்
வாழ்வாக அமைந்திட்ட - நம்
ஆயுட்கால வாழ்க்கை...!
இத்தனையும் அனுபவித்த - நம்
கல்லுாரி வாழ்வு தான்
எக்காலம் சென்றாலும்
மறவாத நம் இன்பம்...!
எத்தனை பிறவியிலும்
இத்தனை இன்பம் காண
கல்லுாரி வாழ்வொன்று
காணோமா இனியும் நாம்...!
நினைவோரக் கனவுகளாய்
நம் கல்லுாரிச் சொந்தங்கள்
மொத்தத்தில் இனியாவும்
வராது மீண்டும் வாழ்வில்.......!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக