siruppiddy

வியாழன், 31 மார்ச், 2016

பெண்ணுக்கு 1 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை!!!

கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் கைதானவருக்கு  1 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, குறித்தப் பெண் மன்றில் மயங்கி விழுந்த சம்பவமொன்று, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. 
பல தடவைகள் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் குறித்தப் பெண், சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளினால் கடந்த வாரம் கைது 
செய்யப்பட்டிருந்தார். 
கைது செய்யப்பட்டபெண்ணை நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது மன்றில் குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது. இதன்போது, குறித்த பெண்ணின் நடவடிக்கைகள் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மன்றில் 
கூறுகையில்,
 'முன் குற்றச்சாட்டுக்கள் பல இவருக்கு இருந்தும் மேற்படி பெண் தொடர்ச்சியாக கசிப்பு காய்ச்சி, விற்பனை செய்வதை தொழிலாக செய்து வந்துள்ளார்' என நீதவானின் கவனத்துக்கு 
கொண்டு வந்தனர். 
மேலும், இதனால் அப்பகுதியில் கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, நீதவான் 1 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் மன்றில் மயங்கிவீழ்ந்தார். 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



சனி, 26 மார்ச், 2016

வருடாந்தம் கருக்கலைப்பால் 10 கர்ப்பிணிகள் சாவு

சட்டவிரோத கருக்கலைப்பினால் வருடாந்தம் சுமார் 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பவதியாகின்றனர். இவர்களில் 15ஆயிரம் பேர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர். இவ்விதம் கருக்கலைப்பு செய்பவர்களிலேயே 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழக்கின்றனர்.அதிகமான தாய்மார் தற்கொலை செய்கின்றனர்.கடந்த வருடத்தில் 50 கர்ப்பிணித் தாய்மார் இவ்விதம் தற்கொலை 
செய்துள்ளனர்.
நாட்டின் சனத்தொகையில் 27வீதமான பெண்கள் குழந்தையைப் பெறக்கூடிய வயதினராவர். வருடாந்தம் ஓர் இலட்சத்து 80 ஆயிரம் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. வருடாந்தம் 24 ஆயிரம் வயது குறைந்த கர்ப்பிணித் தாய்மார் காணப்படுகின்றனர். வறுமை, வீட்டு வன்முறை, 
அதிகமான சோர்வு, மந்த போசனை என்பன இவ்வாறான சுகாதாரக் கேடுகளுக்கு பிரதான காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 22 மார்ச், 2016

இரண்டு விழிப்புலனற்ற மாணவர்கள் O/L பரீட்சையில் சித்தி

சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த க.பொ.த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகின.
இதில் சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனான நெடுந்தீவைச் சேர்ந்த குலனாயகம் அமலநிக்சன் கணிதத்தில் ஏ-சித்தியையும் ஆங்கிலம், குடியுரிமைப் பாடங்களில் பி-சித்தியையும், கிறிஸ்தவம், தமிழ், வரலாறு, 
சுகாதாரப் பாடங்களில் சி-சித்தியையும், சங்கீதம், விஞ்ஞானத்தில் எஸ்-சித்தியையும் பெற்றுள்ளார்.
இதே போன்று மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்கும் பருத்தித்துறையைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அனந்தினி 5 பாடங்களில் சி-சித்தியையும் 3 பாடங்களில் எஸ்-சித்தியையும்
 பெற்றுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 19 மார்ச், 2016

இதை குடிங்க வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு கரைய.!!!

வெயில் கால பானமான மோரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
மோரில் உள்ள சத்துக்கள்
மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
மருத்துவ பயன்கள்:
காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும்.
வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும்.
மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சிஅடைவதைத் 
தடுக்கலாம்.
மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல்மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.
மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.
மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றைகுளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.
சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்:
1. சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாகஉ‌ள்ளது. முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வந்தால் நல்ல பலன் தெ‌ரியு‌ம்.
2. சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த துணியால் க‌ட்டு‌ப் போட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.
3. தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
குறிப்புகள்:
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது.
 மோர்சாதமும் கூடாது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 15 மார்ச், 2016

சில நாட்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை, மின் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடையிடையே மின் விநியோகம் தடைப்படும் எனவும்  இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்தை மீள இயக்க சில நாட்கள்  தேவைப்படும் எனவும், போதியளவு மின்சாரத்தை விநியோகிக்க முடியாதுள்ளமையே இதற்கு காரணம் என தலைவர் அனுர விஜேபால தெரிவித்தார்.
இதனால் அடிக்கடி நாட்டின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 9 மார்ச், 2016

காளிஅம்மன்‬ ஆலயத்தில் சிவராத்திரியில் நிகழ்ந்த அதிசயம்!

அல்வாய் வடமத்தி ‪‎காவோனை காளிஅம்மன்‬ ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அதிசயம்... புதிதாக அம்மனுக்கு ‪கண் வெளிப்பட்டு‬ அதிசயம் நிகழ்ந்தது,,,, ‪மகா‬ ‪‎சிவராத்திரியில்‬ ‪அம்மாவின்‬ ‪‎மகிமை‬
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 3 மார்ச், 2016

தொழில்நுட்பத்துடன் பயணிகள் விமானத்தை உருவாக்கும் நாசா

அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அதி நவீன பயணிகள் ஜெட் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
2020ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு விடப்படவுள்ள இந்த ஜெட் விமானமானது ஒலியை விடவும் 4.5 மடங்கு வேகம் உடையதாக இருப்பதுடன், தீங்கு விளைவிக்கும் இரைச்சலை முற்றாக நீக்கும் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கி இந்த விமானம் தயாரிக்கப்படவுள்ளது.
அதாவது மணிக்கு 1,234 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடி இந்த விமானத்தின் மூலம் லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்கு 3.5 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>