தாயகத்தை சேர்ந்த திரு அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், 2016 ஆண்டுக்கான கராத்தே உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் வல்வையை சேர்ந்த அகிலன் கருணாகரன் அவர்கள் அயர்லாந்தில்(டப்ளின்) 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை நடந்த கராத்தே உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.
இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் விளையாடி முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும்
பெற்றுக் கொண்டார்.
2014ல் போலந்து நாட்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் இவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
2015ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இவர் kumite விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கலபதக்கங்களை பெற்றுக் கொண்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக