siruppiddy

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பொதுவாக பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவை !!!

நீங்கள் ஒவ்வொரு வயதை கடக்கும் போதும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். பொதுவாக இருபதுகள் வரை துடுக்கான வயது, உடல் வலிமை ஒவ்வொரு வயதுக்கும் அதிகரித்துக் காணப்பட்டிருப்பீர்கள்.
ஆனால், முப்பதை கடந்து நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என இனிக் 
காண்போம்…
முப்பது வயதை தொட்டவுடன் முதலில் தென்படும் மாற்றம் சருமத்தில் சுருக்கம்.
இது பெண்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில், பெண்களுக்கு எப்போதுமே அழகில் சற்று அதீத ஈர்ப்பு இருக்க தான் செய்யும்.
முப்பது வயதுக்கு பிறகு பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புவோர் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு மெல்ல மெல்ல கருவளம் குறைய 
ஆரம்பிக்கிறது.
முப்பது வயதுக்குக் பிறகு சில பெண்களுக்கு மோசமான மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பிடிப்புகள், ஐந்து நாட்களும் கடினமாக இரத்தப் போக்கு ஏற்படுவது போன்ற சிக்கல்கள் சில பெண்களுக்கு
 ஏற்படலாம்.
முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு வளர்சிதை மாற்றம் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பிக்கும். இந்த வயதில் இருந்தாவது பெண்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையும் வரும். சிறுநீரக பை வலுவிழப்பு மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கின்றன.
முகத்தில் சுருக்கம் ஏற்படுவதற்கு அடுத்து, வெளிப்படையாக தெரியும் இரண்டாவது பெரிய மாற்றம் நரைமுடி. பேயை விட இதற்கு தான் பெண்கள் அதிகமாக பயந்து நடுங்குகிறார்கள்.
முப்பது வய்துக்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் தருவது போன்ற காரணங்களினால் மார்பகங்கள் இறுக்கம் குறைந்து தொங்குவது போல உருமாறும்.
பதின் வயது முதலே செல்லமாக வளர்த்த நகங்கள் இப்போது பெண்கள் சொல்லும் வார்த்தைக்கு மதிப்பளிக்க மறுக்கும். நகங்களை அழகுப்படுத்துவது சற்று கடினமாகும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், நகங்களின் வலு குறைந்துவிடும், எளிதாக உடைந்துவிடும்.
பொதுவாகவே பெண்களை போலவே அவர்களது உடலும் மென்மையானது. இதில், முப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு காயங்கள் சீக்கிரமாக ஆறாது. எனவே, இதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வேலை பளு, பிள்ளை வளர்ப்பு, எலும்பில் தேய்மானம் ஏற்பட ஆரம்பிப்பது என பல காரணங்களால் இடுப்பு வலி அடிக்கடி 
வந்து போகும்.
இந்த பட்டியலில் இருக்கும் எந்த மாற்றத்தை பற்றியும் ஆண்கள் பெரிதாய் கவலை அடைவதில்லை. ஆனால், இவற்றால் தங்கள் மீது இருக்கும் ஆர்வம், ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்று பெண்கள் சற்று கவலை 
அடைகிறார்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக