siruppiddy

வெள்ளி, 29 ஜனவரி, 2016

வீடொன்றில் மோட்டார் சைக்கிளுடன் எரிந்த் மாணவி!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை உறிஞ்சி எடுக்க முற்பட்டவேளை அருகில் இருந்து குப்பி விளக்கு தவறுதலாக தட்டுப்பட்டதில் பாடசாலை மாணவி ஒருவர் 
தீக்காயத்துக்கு 
உள்ளாகி படுகாயமடைந்ததோடு ரூபா 9 இலட்சம் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூபா 4 இலட்சம் பணம் ஒரு தொகை நகை மற்றும் வீட்டு உறுதி என்பன எரிந்து நாசமாகியுள்ளது.  
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 6 மணியளவில் ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் அதேயிடத்தினைச் சேர்ந்த பாஸ்கரன் துசிக்கா (வயது17)என்ற பாடசாலை மாணவியே முகம், கை, கால் என்பவற்றில் தீக்காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்றைய தினம் காலை 6 மணிக்கு குறித்த வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் குப்பி விளக்கின் உதவியுடன் பிளசர் மோட்டார் சைக்கிளில் இருந்து மேற்படி மாணவி பெற்றோலை குழாய் மூலம் உறிஞ்சி எடுத்துள்ளார்.
இதன்போது தவறுதலாக அருகில் இருந்த விளக்கு 
தட்டுப்பட்டு குறித்த மாணவி மீது நெருப்பு பட்டதோடு அருகில் இருந்த பிளசர் மோட்டார் 
சைக்கிள் மற்றும் 200 சிசி வகையான மோட்டார் சைக்கிள் ஆகிய இரண் டிலும் தீ பற்றியுள்ளது.
இதில் இரண்டு மோட்டார் சைக்கிளும் முழுமையாக தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

பிளசர் மோட்டார் சைக்கிளில் ரூபாய் 4 இலட்சம் பணம், ஒருதொகுதி நகைகள் மற்றும் வீட்டு உறுதி பத்திரம் என்பன வைக்கப்ப ட்டிருந்த நிலையில் இவை அனைத்து எரிந்து நாசமாகியுள்ளது.
மேற்படி தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக