siruppiddy

வியாழன், 30 ஜூலை, 2015

காதலியின் காலில் 10 முறைக்கும் மேல் மண்டியிடும் காதலன் காணொளியில்

ஹாங்காங்கின் மோங்காக் நகர் பா யூன் தெருவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியை அனைவரையும் வியப்படைய வைத்து உள்ளது.
காதலர் ஒருவர் காதலியை தன்னை விட்டு பிரிய வேண்டாம் என கெஞ்சுகிறார் ஒரு கட்டத்தில் காதலின் காலில் விழுத்து அழுது புரளுகிறார். ஆனால் காதலி கல் நெஞ்சக்காரியாக இருப்பார் போல் காதலல்னின் வேண்டு கோளை செவி சாய்க்க வில்லை.
மேலும் காதலனை எட்டி உதைக்கிறாள். இருந்தும் காதலியிடம் காதலன் மிகவும் கெஞ்சுகிறார் ஆனால் காதலி அவரை உதாசீனபடுத்தி தலையில் மிதிப்பது, அவரை அடித்து விரட்டுவதிலுமே குறியாக உள்ளார்.
காதலன் குறைந்தது 10 முறையாவது காதலியின் காலில் விழுந்து 
இருப்பார்.அவர்கள் பேச்சு தெளிவாக இல்லை என்றாலும் பெண் சத்தமாக் பேசுகிறார் ஒரு கட்டத்தில் என்னை தொடாதே என பெண் கூறுகிறார். போ போய் சாவு என வசைமாறி பொழிகிறார்.
போ போய் அந்த கட்டிடத்தில் இருந்து குதி என்கிறார். தனது வலது காலால் காதலனை பலமுறை தாக்குகிறார். பலமுறை கன்னத்தில் அறைகிறார்.இருந்தும் சுவற்றில் அடித்த பந்தாக காதலன் காதலையை சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
ஆனால் கடைசி வரை காதலி எந்த வித சமாதானத்திற்கும் வரவில்லை பின்னர் இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிகின்றனர். இந்த வீடியோ ஹாங்காங் டெய்லி ஆப்பிள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த காணொளி, 0.50 நிமிடங்கள் ஓடுகிறது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக