காதலுக்கு பெற்றோர்களும், மதமும் தடையாக இருந்தமையால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி மரணம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வு கூட பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவியான முல்லைத்தீவு செல்வபுரத்தை சேர்ந்த மாணவியே இத்தகைய விபரிதமான முடிவை மேற்க்கொண்டு மரணத்தை தழுவிக்கொண்டவராவார்.
காதலனுடைய பெற்றோர் இந்து முறையில் திருமணம் செய்ய வேண்டும் எனவும் பெண்ணினுடைய பெற்றோர் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்ய வேண்டும் எனவும் இரு பகுதியினரும் தமது பிள்ளைகளுக்கு நெருக்கடிகளை கொடுத்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் காதலியிடம் காதலன் தான் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ம் திகதி வடமராட்சி உடுத்துறையில் உள்ள காதலனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நிலையில் காதலன் சைவப் பாடலை கேட்டுக்கொண்டு இருந்தாகவும் இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 6ம் திகதி காலையில் காதலன் காதலி தங்கியிருந்த திருநெல்வேலி பாற்பண்னை வீதயில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இந் நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காதலி தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயணளிக்காத நிலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்.
மரண விசாரனையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக