siruppiddy

செவ்வாய், 28 ஜூலை, 2015

பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையை பாருங்கோ ???

மீரட்: சினிமாவை மிஞ்சும் அளவில், ஒரு காதலனுக்கு இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் உத்தரபிரதேச  மாநிலத்தில் நடந்துள்ளது.
 உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள மாதவபுரம் என்ற இடத்தில், திடீரென இரண்டு இளம் பெண்கள் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். அதை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியது. ஒருவழியாக அவர்களை கூட்டத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சண்டையை வேடிக்கை பார்த்த ஒருவர் கூறுகையில், "சண்டைக்கு காரணம் ஒரு இளம் பெண்ணின் காதலருடன் மற்றொருவர் பேசியதுதான். தனது காதலரை அபகரிக்க முயல்வதாக அந்த பெண்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அந்த பெண் மற்றொரு 
பெண்ணை அடித்து கீழே தள்ளி உதைக்க தொடங்கிவிட்டார். பின்னர் சுற்றி நின்ற பெண்கள் அந்த பெண்ணை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்" என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக