அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியரான 'வின்சென்ட் வான் கா’ வின் பெயரில் ’வின்செண்ட் வான் கோட்’ (ஆடு) என்று செல்லமாக அழைக்கப்படும் ஓவியர், தனது அற்புதமான பெயிண்டிங்கால் அமெரிக்காவையே கலக்கி வருகிறார்.
நியூ மெக்சிகோ மாநிலத்தின் அல்புக்வெர்க் தாவரவியல் பூங்காவில் வசித்து வரும் 4 வயது ஆடான போடிக்கு, அந்த பூங்காவின் பணியாளரான கிறிஸ்டியன் ரைட் பொழுது போக்காக ஓவியம் வரைவதற்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். ஆனால் போடியோ, படு சீரியசாக ஓவியங்கள் வரையத் தொடங்கி விட்டது.
வாயில் தூரிகையை பிடித்துக் கொண்டு போடி துல்லியமாக ஓவியம் வரைவதை காணக் கண்கோடி வேண்டும் என்று அதிசயிக்கிறார் பூங்காவின் மேலாலர் 'லின்’. போடி படம் வரையும் அழகை ரசிப்பதற்காகவே மாலையின் பலர் பூங்காவிற்கு வருகின்றனர்.
போடி வரையும் ஓவியங்கள் அனைத்தும் நியூ மெக்சிகோவில் உள்ள பயோபார்க் சொசைட்டியில் 40 டாலருக்கு (2 ஆயிரத்து 500 ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக