siruppiddy

சனி, 31 ஆகஸ்ட், 2013

மிக நல்ல படைப்பு. மூன்றாம் உலகப் போர்


வைரமுத்து படைத்த மூன்றாம் உலகப்போர் படித்து பார்த்தோம் . மிக நல்ல படைப்பு. படிப்பவர்கள் தலையில் மூளையும் , நெஞ்சில் ஈரமும் இருந்தால் அவர்களின் எண்ணத்தில் ஒரு சிறு அதிர்வாவது தோன்றும் . மூன்றாம் உலகப்போர் என்ற தலைப்பே ஒரு பெரிய பயங்கர தோற்றத்தை ஏற்படுத்துகிறது . 40 அத்தியாயங்களில் " நச் " சென்று ஒரு கருத்தை நம் மனதில் பதிக்கிறார். கதையின் ஆரம்பத்தில் அட்லாண்ட கடற்கரை காட்சியும், செண்டாய் நகரமும் கதையின் உலகத்தன்மையை காட்டுகிறது . பின் தேனி மாவட்டத்தில் அட்டனம்பட்டி யை வைத்து உலக பிரச்னை ஒன்றை காட்டுகிறார் . கருத்தமாயி – சிட்டம்மாள் கதையின் முக்கிய கதப்பாதிரங்களாக வருகின்றனர் . அவர்களின் பிள்ளைகளில் முத்துமணி ஊரை அளிப்பவனாகவும் , சின்னபாண்டி ஊருக்கு உதவிசெயபவனாகவும் இருக்கிறார்கள் . இவர்களால் குடும்பத்தில் நடக்கும் சொத்துசண்டை , ஊரின் நன்மை – தீமை களை தீர்மானிக்கிறது. வைரமுத்து வருகை : கதையின் 30 வது அத்தியாயத்தில் வைரமுத்துவை எமிலி , இஷிமுரா மற்றும் சின்னபாண்டி சந்திக்கிறார்கள் . மேற்கு தொடர்ச்சி மலையின் மேன்மைகளை விவரிக்கிறார் கவிஞர் . "அக்பருக்குள்ளும் அசோகருக்குள்ளும் எங்கள் சேர , சோழ , பாண்டிய மன்னர்கள் அறியாமல் போனது போல் இமய மலையின் புகழுக்குள் மேற்கு தொடர்ச்சிமலை காணமல் போனது " என்றும் , இந்தியாவின் 60 சதவிகித நதிகளின் தோற்றுவாயாக விளங்கும் மேற்கு தொடர்ச்சிமலை புறக்கணிக்க படுவதை குறிப்பிடுகிறார் . இது ஒரு நல்ல விழிப்புணர்ச்சி யுண்டாக்கும் செய்தி . மூன்றாம் உலகப்போர் கூறும் ப்ரிச்சனைகள் : புவி வெப்பமடைதல் விவசாயம் அழிவு புவியில் மனிதன் வாழ ஏற்ற சூழல் குறைதல் நாம் பின்பற்ற வேண்டிய சில : பிளாஸ்டிக் பயன்படுத்தாது இருத்தல் இயற்கை விவசத்திற்கு திரும்புதல் முடிந்தவரை மரங்கள் வளர்த்தல் பெற்றோர் , பெரியோரை மதித்தல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக