கெப்பிட்டிகொல்லாவ போகாவெவ பகுதியில் வசிக்கும் இளம் யுவதியை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட 74 வயதான நபருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் அபராதமும், பாதிக்கப்பட்ட யுவதிக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க உத்தரவிட்டார்.
இரண்டு வருட சிறைத்தண்டனையை 7 வருடங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதி, 10 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீட்டு தொகையை வழங்குமாறும் உத்தரவிட்டார்.
இழப்பீட்டையும், அபராத தொகையையும் செலுத்த தவறினால் மேலும் 18 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
வோல்டர் ஜயசூரிய என்ற 74 வயதான நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு குற்றவாளியான இந்த நபர், பதவி பிரதேசத்தில் மொத்தமாக மீன்களை கொள்வனவு விற்பனை செய்து வந்ததுடன் அந்த யுவதியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.
குற்றவாளியின் ஊழியர், அந்த யுவதியுடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் பின்னர் அந்த ஊழியர் யுவதியை கைவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கைவிட்டு சென்ற காதலனை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி, யுவதியை அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக