siruppiddy

திங்கள், 4 நவம்பர், 2013

கடவுளிடம் ஒரு கணவன் வேண்டினான்,''


ஒரு கணவன் கடவுளிடம் வேண்டினான்,'' நாள் முழுவது நான் கடுமையாக உழைக்கிறேன்.என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள்.போதாக் குறைக்கு என்னிடம் வேறு குற்றம் காண்கிறாள்.
எனவே என்னை பெண்ணாக்கி என் மனைவியை

ஆணாக்கிவிடு.அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும்.
 ''கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டார்.

மனைவி ஆணானவுடன் வேலைக்கு சென்றாள்.பெண்ணான கணவன் காலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து,அடுப்படி வேலைகளை முடித்து பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு,கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து சமையல் முடித்து,இப்படியாக இரவு நெடு நேரம் வரை வேலை இருந்தது .

மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாகக் கடவுளிடம் ,
 ''ஐயோ கடவுளே!பெண்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருப்பதை உணராது இருந்து விட்டேனே!என்னால் இந்த பொறுப்புகளை சுமக்க முடியாது.
தயவு செய்து என்னை மறுபடியும் ஆணாக்கி,என் மனைவியைப் பெண்ணாக்கிவிடு,''என்று அழுது வேண்டினான்.
கடவுள் சொன்னார்,

 ''உன் வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு நீ நாற்பது வாரங்கள் காத்திருக்க வேண்டும்''.அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க,
கடவுள் சொன்னார்,
 ''இப்போது நீ கருவுற்றிருக்கிறாய்.''

0 கருத்துகள்:

கருத்துரையிடுக