siruppiddy

வியாழன், 27 பிப்ரவரி, 2014

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின்..


ஈழத்துக்கலைமன்னர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களிள் நினைவலைகள்.வாழ்ந்த காலம் முழுவதும் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்திருந்த கலைமகன். தனது சக கலைஞர்களை ஏற்றிப் போற்றிப் புகழ்பாடும் கலைத்தொண்டன். தன்னால் முடியக்கூடியதைக் கூட மற்றைய கலைஞர்களுக்கு வழங்கி அதிலே மகிழ்ச்சி கொண்ட அரும்பெரும் கலைஞன். எப்பொழுது பேசிக்கொண்டாலும்

ஈழத்துக்கலைகள் தொடர்பாக, நிறைவான விடயங்களைக் கூறிக்கொள்ளும் எங்கள் கலைஞன் ‘அண்ண ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே உங்களை நாம் இனி எங்கே பார்க்கப்போகிறோம். எம்மிடமிருந்து விடைபெற்ற ஒவ்வொரு கலைஞர்கள் பற்றியும் எவ்வளவு விடயங்களை வானலையில்எடுத்துக் கூறிவந்தீர்களே!

இன்று நீங்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியும், எங்கள் மனங்களில் நிழலாடுகின்றீர்கள். நாங்கள் இவ்வளவு விரைவாக உங்களை இழப்போம் என்று எண்ணவில்லை. நோய்வாய்ப்பட்டிருந்த போதும், கலையின்பால் தாங்கள் கொண்டிருந்த ஈடுபாடு, காதல் சற்றும் குறையவில்லையே.
ஈழத்துக்கலையுலகம் உங்கள் இழப்பை எப்படித்தாங்கிக்கொள்ளாது.
வானொலி,மேடை,திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர் ‘அண்ண ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் என்றதும் கம்பீரமாக மேடைக்கு வரும் அந்தக்காட்சியையே மனதில்

பதித்துவைத்துள்ளோம்.காலமெல்லாம் கலையுலகில் உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.கலைஞனே உன் ஒலி.ஒளிப்பதிவுகள்தான் எம்மனச்சுமையாற்றும் மருந்தாகும்.காலம்போற்றும் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் கருத்துக்கள் கேளுங்கள். அரை நூற்றாண்டு காலம் வரை இந்தக்கலையுலகில் கலைப்பணியாற்றி விடை பெற்றுள்ளார். என்றும் அவர்படைப்புகள் அவரை நினைவூட்டியவண்ணமே இருக்கும் என்பதை நினைவூட்டுகிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக