siruppiddy

புதன், 15 அக்டோபர், 2014

கடலுணவுப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கிறது!!

சிறிலங்காவின் கடலுணவுப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருக்கிறது. சிறிலங்காவினால் நடத்தப்படுகின்ற மீன்பிடித் தொழில் சர்வதேச சட்டங்களை மதித்து நடத்தப்படுவதில்லை என்று, ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்றுவரையில் இந்த நிலைமையில் சிறிலங்கா மாற்றம் செய்திருக்கவில்லை.
இந்த நிலையில் சிறிலங்காவில் இருந்து எந்தவிதமான கடலுணவுப் பொருட்களையும் ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறிலங்காவுக்கு வருடாந்தம் 73 மில்லியன் பவுண்கள் நட்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளத
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக