siruppiddy

புதன், 25 மார்ச், 2015

நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலப்பு இருவர் கைது...

யாழ்  ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் நேற்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் நேற்றயதிளம் (23)...

செவ்வாய், 24 மார்ச், 2015

இன்று முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் ...

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று.24.03.2015. முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார். இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு...

வெள்ளி, 20 மார்ச், 2015

மீட்ட ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு !!!!

சாத்தான்குளத்தில் வங்கியிலி ருந்து மீட்ட 10 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்த மரிய சிலுவைதுரை மனைவி சந்திரகுளோரி(48). இவர் பேய்க்குளத்தில் உள்ள வங்கியில் 10 பவுன் நகையை அடகு வைத்திருந்தார். நேற்று வங்கிக்குச் சென்ற அடகு நகையை திருப்பினார். நகையுடன் நேராக வீட்டிற்கு செல்லாமல் காய்கறி வாங்குவதற்காக சாத்தான்குளம் சந்தைக்கு வந்தார்....

குடிநீரில் விசம் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம்!!!

 யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்து, 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாடசாலை முன்றலில் வீதி மறிப்பு போராட்டம், ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.  பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.. 'மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுங்கள்' என்ற கோரிக்கைகளை...

வியாழன், 12 மார்ச், 2015

புலவூரான் ரிஷி எதற்க்கானது....

இடைவெளியின் நீட்சியில்  பரப்ப முடிந்த உன் மாசற்ற புன்னகைகளை இப்போதெல்லாம் எங்கு தொலைத்தாய் பெண்ணே? பாச வெளிகளில் சிதறிய இராட்சத பொய்களின் கொடூர சிரிப்பின் அனல் காற்றில் கூதல் தணிக்கும்! சாட்சியங்களற்ற முத்தங்களை_ மீள வறுகையில் வீழும் கண்ணீர் திவலைகளை எந்த கவிதையில் குறிப்பெடுப்பது சொல்!! காதலி எனும் ஸ்தானத்தில் மாட்டியிருக்கும் உன் புகைப்படத்தில் மனைவியாக‌ புன்னகைக்கிறாய்!! உன் விம்பத்தில் ஒளி தரித்த‌ கவிதைகளின் உனக்கான‌ ஆலாபனைகளிலும் மெளனமே பரிசளிக்கப்படுகிறது!! இதோ...