siruppiddy

வெள்ளி, 20 மார்ச், 2015

குடிநீரில் விசம் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டம்!!!

 யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்து, 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாடசாலை முன்றலில் வீதி மறிப்பு போராட்டம், ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
 பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.. 'மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுங்கள்' என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக