சாத்தான்குளத்தில் வங்கியிலி ருந்து மீட்ட 10 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்..
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்த மரிய சிலுவைதுரை மனைவி சந்திரகுளோரி(48). இவர் பேய்க்குளத்தில் உள்ள வங்கியில் 10 பவுன் நகையை அடகு வைத்திருந்தார். நேற்று வங்கிக்குச் சென்ற அடகு நகையை திருப்பினார்.
நகையுடன் நேராக வீட்டிற்கு செல்லாமல் காய்கறி வாங்குவதற்காக சாத்தான்குளம் சந்தைக்கு வந்தார். அங்கு நகை வைத்திருந்த பையை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.1.80 லட்சமாகும். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ பால்துரை விசாரித்து வருகிறார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக