siruppiddy

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

பலருக்கும் பிடித்த உணவு கருவாடு ஆனா இவர்கள் மட்டும் கிட்டயே போக கூடாது

கருவாடு பலருக்கும் பிடித்த உணவு..! இதை எல்லாரும் சாப்பிடலாமா என்றால் சாப்பிடக்கூடாது.சிலர் உடல்நலப்பிரச்சனை கொண்டவர்கள் கருவாடு சாப்பிட்டால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது.
இது புட் பாய்சன் ஆக காரணமாகலாம்.மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஆகாமல் தடுக்கும்.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் 
சேர்த்துக் கொள்ள கூடாது,
ஆகையால் அவர்கள் கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது.மேலும், மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது.சருமத்தில் அழற்ச்சி பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டை தொடவே கூடாது.ஏனென்றால் இது சருமத்தில் நமைச்சல் மற்றும் 
அரிப்பை ஏற்படுத்தும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக