siruppiddy

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

ஒஸ்லோவின் துணை முதல்வர் ஈழத்து தமிழ்ப்பெண்

ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் – ஒஸ்லோ – துணை நகர முதல்வர் பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் 
பெற்றிருக்கிறார்.
பதினெட்டு வருடங்களுக்குப் பின் ஒஸ்லோ ஆட்சியை மீண்டும் தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது. இதுபற்றி முன்பே பதிவிட்டிருக்க வேண்டும். தாமதம், இந்த நல்ல செய்தியைச் சேர்த்துப் பதிவிட
 வைத்துள்ளது.
பல்வேறு “புகழ்பெற்ற” தொழில்களை எமது இரண்டாம் தலைமுறையினர் (உண்மையில் பெற்றோர்கள்) தேடிக் கொண்டிருக்கையில் அரசியலைத் தனது முழுநேரப் பணியாக வரித்துக்கொண்ட கம்சி ஒஸ்லோ தொழிற்கட்சியின் துணைத் தலைவராக இளம் வயதிலேயே தெரிவானவர். இளைஞரணியில் தலைவராக இருந்து, கட்சியின் ஒஸ்லோ துணைத் தலைவராகப் பெரும் ஆதரவோடு தெரிவானவர்.
ஒப்பீட்டளவில் எம்மவர்கள் – குறிப்பாகப் பெண்கள் – அரசியலில் ஈடுபடுவது நோர்வேயைப் பொறுத்தவரை மிகக் குறைவு. பாகிஸ்தானியப் பின்னணி கொண்ட பெண்கள் பலர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, ஒருவர் கலாசார அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தாய்நாட்டை நோக்கிய அரசியற் செயற்பாட்டில் இருந்த ஈடுபாடு, எம்மிற் பலருக்கு இந்த நாட்டின் தேசிய அரசியலில் இருக்கவில்லை என்பதே
 உண்மை.
இரண்டிலும் சரியான அக்கறையோடு பங்கேற்று இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் கம்சாயினி. ஒஸ்லோவில் மூன்றாம் இடத்தில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் அவர் வென்றார் என்பது அவரது உழைப்புக்கு வாக்காளர்கள் கொடுத்த பரிசன்றி 
வேறென்ன?
பாரம்பரியமாகத் தமிழர்கள் தெரிவு செய்யும் கல்வி – தொழிலைத் தெரிவு செய்யாமல், அரசியலில் முன்னோடியாக வர அவரை ஊக்குவித்த பெற்றோரையும், அடிக்கும் அலையோடு அள்ளுண்டு போகாமல், இந்தத் துறையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி சூடியுள்ள கம்சாயினிக்கும் மனம் நிறைய வாழ்த்துகள்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

உன்னத கண்டுபிடிப்பு விமானவிபத்துக்களில் உயிர்களைக்காப்பது

இன்றைய உலகில் விரைவான பயணங்களுக்கு எத்தனையோ கண்டுபிடிப்புக்களை விஞ்ஞானம் தந்திருக்கின்றது. பல ஆயிரம் மைல்களை சிலமணி நேரத்தில்  பயணிப்பதற்கு விமானச்சேவை 
முக்கியமானதாகின்றது.
இருப்பினும் இதன்போது இழந்த உயிர்கள் விலைமதிப்பற்றது. இதற்கும்  விஞ்ஞானம்  விடை தந்திருக்கின்றது  இந்தக்காணொளியில்…. நீங்கள் காண்பீர்கள்  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பொதுவாக பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவை !!!

நீங்கள் ஒவ்வொரு வயதை கடக்கும் போதும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். பொதுவாக இருபதுகள் வரை துடுக்கான வயது, உடல் வலிமை ஒவ்வொரு வயதுக்கும் அதிகரித்துக் காணப்பட்டிருப்பீர்கள்.
ஆனால், முப்பதை கடந்து நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என இனிக் 
காண்போம்…
முப்பது வயதை தொட்டவுடன் முதலில் தென்படும் மாற்றம் சருமத்தில் சுருக்கம்.
இது பெண்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில், பெண்களுக்கு எப்போதுமே அழகில் சற்று அதீத ஈர்ப்பு இருக்க தான் செய்யும்.
முப்பது வயதுக்கு பிறகு பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புவோர் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு மெல்ல மெல்ல கருவளம் குறைய 
ஆரம்பிக்கிறது.
முப்பது வயதுக்குக் பிறகு சில பெண்களுக்கு மோசமான மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பிடிப்புகள், ஐந்து நாட்களும் கடினமாக இரத்தப் போக்கு ஏற்படுவது போன்ற சிக்கல்கள் சில பெண்களுக்கு
 ஏற்படலாம்.
முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு வளர்சிதை மாற்றம் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பிக்கும். இந்த வயதில் இருந்தாவது பெண்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையும் வரும். சிறுநீரக பை வலுவிழப்பு மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கின்றன.
முகத்தில் சுருக்கம் ஏற்படுவதற்கு அடுத்து, வெளிப்படையாக தெரியும் இரண்டாவது பெரிய மாற்றம் நரைமுடி. பேயை விட இதற்கு தான் பெண்கள் அதிகமாக பயந்து நடுங்குகிறார்கள்.
முப்பது வய்துக்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் தருவது போன்ற காரணங்களினால் மார்பகங்கள் இறுக்கம் குறைந்து தொங்குவது போல உருமாறும்.
பதின் வயது முதலே செல்லமாக வளர்த்த நகங்கள் இப்போது பெண்கள் சொல்லும் வார்த்தைக்கு மதிப்பளிக்க மறுக்கும். நகங்களை அழகுப்படுத்துவது சற்று கடினமாகும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், நகங்களின் வலு குறைந்துவிடும், எளிதாக உடைந்துவிடும்.
பொதுவாகவே பெண்களை போலவே அவர்களது உடலும் மென்மையானது. இதில், முப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு காயங்கள் சீக்கிரமாக ஆறாது. எனவே, இதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வேலை பளு, பிள்ளை வளர்ப்பு, எலும்பில் தேய்மானம் ஏற்பட ஆரம்பிப்பது என பல காரணங்களால் இடுப்பு வலி அடிக்கடி 
வந்து போகும்.
இந்த பட்டியலில் இருக்கும் எந்த மாற்றத்தை பற்றியும் ஆண்கள் பெரிதாய் கவலை அடைவதில்லை. ஆனால், இவற்றால் தங்கள் மீது இருக்கும் ஆர்வம், ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்று பெண்கள் சற்று கவலை 
அடைகிறார்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 29 ஜனவரி, 2016

வீடொன்றில் மோட்டார் சைக்கிளுடன் எரிந்த் மாணவி!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை உறிஞ்சி எடுக்க முற்பட்டவேளை அருகில் இருந்து குப்பி விளக்கு தவறுதலாக தட்டுப்பட்டதில் பாடசாலை மாணவி ஒருவர் 
தீக்காயத்துக்கு 
உள்ளாகி படுகாயமடைந்ததோடு ரூபா 9 இலட்சம் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூபா 4 இலட்சம் பணம் ஒரு தொகை நகை மற்றும் வீட்டு உறுதி என்பன எரிந்து நாசமாகியுள்ளது.  
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 6 மணியளவில் ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் அதேயிடத்தினைச் சேர்ந்த பாஸ்கரன் துசிக்கா (வயது17)என்ற பாடசாலை மாணவியே முகம், கை, கால் என்பவற்றில் தீக்காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்றைய தினம் காலை 6 மணிக்கு குறித்த வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் குப்பி விளக்கின் உதவியுடன் பிளசர் மோட்டார் சைக்கிளில் இருந்து மேற்படி மாணவி பெற்றோலை குழாய் மூலம் உறிஞ்சி எடுத்துள்ளார்.
இதன்போது தவறுதலாக அருகில் இருந்த விளக்கு 
தட்டுப்பட்டு குறித்த மாணவி மீது நெருப்பு பட்டதோடு அருகில் இருந்த பிளசர் மோட்டார் 
சைக்கிள் மற்றும் 200 சிசி வகையான மோட்டார் சைக்கிள் ஆகிய இரண் டிலும் தீ பற்றியுள்ளது.
இதில் இரண்டு மோட்டார் சைக்கிளும் முழுமையாக தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

பிளசர் மோட்டார் சைக்கிளில் ரூபாய் 4 இலட்சம் பணம், ஒருதொகுதி நகைகள் மற்றும் வீட்டு உறுதி பத்திரம் என்பன வைக்கப்ப ட்டிருந்த நிலையில் இவை அனைத்து எரிந்து நாசமாகியுள்ளது.
மேற்படி தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 13 ஜனவரி, 2016

ஏழு எண் (7, 16,25)ல் பிறந்தவர்களின் 2016 பலன்கள்

7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு, ஏழு ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணும் பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. 7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் ஆவார்கள். ஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும். ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களின் குண நலன்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் ளி. ஞீ ஆகியவை.

குணநலன்கள்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும். இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. தெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள். தன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள். இதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள். இவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது. கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள். ஆதலால் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுவார்கள். எந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்த பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள். கைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.

உடல்நிலை ஆரோக்கியம்

ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும். உடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும். மெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும். இவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். வாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.

குடும்ப வாழ்க்கை

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள். உற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும். தாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதாரம்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும். இவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர். நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.

தொழில்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள். திரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும். மத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். உத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.

நண்பர்கள், பகைவர்கள்

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். பிடிவாத மான குணம் இருக்கும். 8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள். 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.

கேதுவுக்குரிய காலம்

கேதுவும் சந்திரனைப் போலவே ஆற்றல் கொண்டவர் என்பதால் கேதுவுக்கும் திங்கட்கிழமையே உகந்த நாளாக உள்ளது. கேதுவுக்கு ஒரு மணி நேரமே குறுகிய கால அளவு ஆகும்.

கேதுவுக்குரிய திசை

வடமேற்கு திசை கேதுவுக்குரியது. ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் கேதுவுக்கு உரியவை.

கேதுவுக்குரிய கல்

கேதுவுக்குரிய கல் வைடூரியம், லேசான பச்சையும், பழுப்பும் கலந்த மஞ்சள் நிறமும் உடையது வைடூரியம். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுகிறது. எனவே இது பார்ப்பதற்கு பூனை கண் போன்று இருப்பதால் கேட் ஐ என்றும் அழைக்கின்றனர். இதற்கு மாற்றாக ஒப்பல் என்ற கல்லையும் அணியலாம். வைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததால் இதற்கு எந்த தீட்டும் படாமல் பாதுகாத்து அணிந்து கொள்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.

பரிகாரம்

கேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி – 7,16,25

அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, காவி

அதிர்ஷ்ட திசை-வடமேற்கு

அதிர்ஷ்ட கிழமை -திங்கள்

அதிர்ஷ்ட கல் -வைடூரியம்

அதிர்ஷ்ட தெய்வம்-கணபதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆறு எண் (6,15,24) ல் பிறந்தவர்களின் 2016 பலன்கள்

மனிதர்கள் அறுசுவை உணவு என ஆறு வகையான சுவைகளை உண்ணுகிறார்கள். சுவையையும் உணர்கிறார்கள். ஆறு வகையான சாஸ்திரங்களும் உள்ளன. முருகப்பெருமானின் ஆறுமுகங்களும் ஆறு வகையான தத்துவங்களை சூட்சும முறையில் உணர்த்துகின்றன.
 அதுபோல 6 என்ற
 எண்ணும் மனித வாழ்வில் சிறந்த முறையில் செல்வாக்கினை பெற்றதாக திகழ்கிறது. 6,15,24 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரனாவார். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். வாரத்தில் 6ம் நாளாக வெள்ளிக்கிழமை வரும். வெள்ளிக்கிழமை வாரத்தின் சிறந்த நாளாக கருதப்படுகிறது. 6ம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஹி.க்ஷி.கீ ஆகியவைகள் ஆகும்.
குண நலன்கள்
நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும்,
 புகழ்ச்சிக்கும்
 ஆசைப்படாதவர்கள் என்பதால் இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை. மிகவும் பொறுமைசாலிகள். ஆதலால் அதிக சகிப்பு தன்மையும் உண்டு. சிந்தனா சக்தியிலும், செயலாற்றுவதிலும் நிதானமாக செயல்பட்டாலும் தன்னம்பிக்கையும் அசட்டு தைரியமும் மேலோங்கி இருக்கும். எதிலும் சாதுர்யமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால், சில நேரங்களில் மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு சொல் என்றாலும் மறக்க முடியாத அளவிற்கு பேசி விடுவார்கள். கேலியும், கிண்டலும் நையாண்டித் தனமும் அதிகம் இருக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்திய சாலிகள். பிடிவாத குணம் படைத்த இவர்கள் பிறருக்கு அடிபணிவதென்பது இயலாத காரியம். இவரிடம் 
எவ்வளவு குறைகள் 
இருந்தாலும் அதை மறைத்து மற்றவர்களின் குறைகளை அம்பலமாக்கி விடுவார்கள். தனக்கு நெருங்கியவர்கள் நெறி தவறும் போது இவருடைய மனநிலை இவரின் கண்களில் தெரியும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்த பின்தான் செயலில் இறங்குவார்கள். தனக்கு மிஞ்சியதைத்தான் பிறருக்கு தானமாக கொடுப்பார்கள். சமூக நல்லப்பணிகளிலும் ஆர்வம் இருக்கும்.
உடல் நிலை, ஆரோக்கியம்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குள்ளமானவர்களாக இருப்பார்கள். உடல் குண்டாக இருக்கும். கருணை நிறைந்த கண்ஙகளைக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் தம்மை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் குளிர்ச்சியான உடலை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்களும், இருதய சம்பந்தமான வியாதிகளும், சுவாசம் சம்பந்தமான நோய்களும் உண்டாகும். சர்க்கரை நோய் அதிகம் பேருக்கு ஏற்படும். மர்ம பிரதேசங்களில் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
குடும்ப வாழ்க்கை
ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்தியளிப்பதாகவே அமையும். பெரும்பாலானவர்கள் காதல் விஷயங்களில் வெற்றி பெற்று தன் மனதிற்கு பிடித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
பொருளாதாரம்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆடை, ஆபரணங்களுக்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் நிறைய செலவு செய்வார்கள். சிலர் பிறவியிலேயே செல்வந்தராக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நடுத்தர வர்க்கம் என்றால் பொருளாதார நிலை பற்றாக்குறையாகவே இருக்கும். எப்பாடுபட்டாவது தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.
நண்பர்கள், பகைவர்கள்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் புதிதாக பழகுவதற்கு சற்று சங்கோஷப்படுபவர்களாக இருந்தாலும், பழகிய பின் இனிமையானவர்களாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ஓட ஓட விரட்டுவார்கள். 4,5,7,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் நட்புடன் பழக முடியும். 1,2 ம் எண்ணில் பிறந்தவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பதே நல்லது.
சுக்கிரனுக்குரிய காலம்
ஏப்ரல் மாதம் 20ந் தேதி முதல் மே மாதம் 20ம் தேதி வரையிலும், செப்டம்பர் 22 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 22ம் தேதி வரையிலும் உள்ள காலங்கள் சுக்கிரனுக்குரிய காலங்கள் ஆகும்.
தொழில்
ஆறாம் எண்ணிற்குரியவர் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் என்பதால் கலைத்துறை சம்மந்தமானவற்றில் முன்னேற்றமடைவார்கள். சினிமா, சங்கீதம், இசை, நாட்டியம், நாடகம் போன்றவற்றில் பிரகாசம் உண்டாகும். அரசாங்க பணிகளில் உயர் பதவிகள் அமையும். ஓவியம் வரைதல், கவிதைகள், பாடல்கள் எழுதுதல் போன்றவற்றில் புகழும்,
 கௌரவமும் கிடைக்கும். பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்கள், பெண்கள் அணியும் ஆடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் போன்றவற்றிலும் நல்ல லாபம் அமையும். வாசனை திரவியங்களை வியாபாரம் செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.
சுக்கிரனின் திசை
மேற்கு திசையும், தென் மேற்கு திசையும், சுக்கிரனுக்குரிய திசைகள் ஆகும். படுக்கை அறைகள், அழகிய வீடுகள், பயிடும் நிலங்கள் யாவும் சுக்கிரனுக்குரியவை. ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசை நோக்கி பயணம் செய்தபின் புதிய சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்வது உத்தமம்.
அதிர்ஷ்டக்கல்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் வைரக்கல்லை அணிவது மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வைரத்தை வாங்க முடியாதவர்கள் ஜிர்கான கற்களும் வைரத்தை போலவே குணநலன்களை கொண்டதாகும்.
பரிகாரம்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் லஷ்மி தேவியை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது உத்தமம். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி – 6,15,24,9,18,27
அதிர்ஷ்ட நிறம் – வெளிர்நீலம்
அதிர்ஷ்ட திசை- தெற்கு
அதிர்ஷ்ட கிழமை-வெள்ளி
அதிர்ஷ்ட கல்- வைரம
அதிர்ஷ்ட தெய்வம் – ஸ்ரீலட்சுமி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 5 ஆகஸ்ட், 2015

சவூதி எஜமானர் இலங்கைப் பணிப்பெண்ணை ஏலத்துக்கு விற்கிறார்?

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவூதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக அவரது எஜமானர் விளம்பரம் செய்துள்ளார். உள்நாட்டு ஏல விற்பனை இணைய தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 
30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும்,
 ஒப்பந்தம் முடிவுறுத்திக் கொண்டுள்ளதாகவும் எஜமானர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு இன்னும் ஒரு ஆண்டு 
காலம் சேவையாற்ற 
அனுமதியிருப்பதாகவும் விரும்பியவர்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான அதிகளவான சம்பவங்கள் பதிவாவதாக சவூதி மனித உரிமை ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>