siruppiddy

வியாழன், 27 பிப்ரவரி, 2014

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின்..


ஈழத்துக்கலைமன்னர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களிள் நினைவலைகள்.வாழ்ந்த காலம் முழுவதும் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்திருந்த கலைமகன். தனது சக கலைஞர்களை ஏற்றிப் போற்றிப் புகழ்பாடும் கலைத்தொண்டன். தன்னால் முடியக்கூடியதைக் கூட மற்றைய கலைஞர்களுக்கு வழங்கி அதிலே மகிழ்ச்சி கொண்ட அரும்பெரும் கலைஞன். எப்பொழுது பேசிக்கொண்டாலும்

ஈழத்துக்கலைகள் தொடர்பாக, நிறைவான விடயங்களைக் கூறிக்கொள்ளும் எங்கள் கலைஞன் ‘அண்ண ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே உங்களை நாம் இனி எங்கே பார்க்கப்போகிறோம். எம்மிடமிருந்து விடைபெற்ற ஒவ்வொரு கலைஞர்கள் பற்றியும் எவ்வளவு விடயங்களை வானலையில்எடுத்துக் கூறிவந்தீர்களே!

இன்று நீங்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியும், எங்கள் மனங்களில் நிழலாடுகின்றீர்கள். நாங்கள் இவ்வளவு விரைவாக உங்களை இழப்போம் என்று எண்ணவில்லை. நோய்வாய்ப்பட்டிருந்த போதும், கலையின்பால் தாங்கள் கொண்டிருந்த ஈடுபாடு, காதல் சற்றும் குறையவில்லையே.
ஈழத்துக்கலையுலகம் உங்கள் இழப்பை எப்படித்தாங்கிக்கொள்ளாது.
வானொலி,மேடை,திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர் ‘அண்ண ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் என்றதும் கம்பீரமாக மேடைக்கு வரும் அந்தக்காட்சியையே மனதில்

பதித்துவைத்துள்ளோம்.காலமெல்லாம் கலையுலகில் உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.கலைஞனே உன் ஒலி.ஒளிப்பதிவுகள்தான் எம்மனச்சுமையாற்றும் மருந்தாகும்.காலம்போற்றும் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் கருத்துக்கள் கேளுங்கள். அரை நூற்றாண்டு காலம் வரை இந்தக்கலையுலகில் கலைப்பணியாற்றி விடை பெற்றுள்ளார். என்றும் அவர்படைப்புகள் அவரை நினைவூட்டியவண்ணமே இருக்கும் என்பதை நினைவூட்டுகிறோம்.

திங்கள், 6 ஜனவரி, 2014

வெள்ளைத் தங்கம் “அஸ்பாரகஸ்”

அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும், நீண்டகாலம் வாழும் தன்மையுடையது.
இந்த தாவரம் உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை கொண்டும் காணப்படுகிறது.

இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும்.
இந்த பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும்.
இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும்.

ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து உறுப்புக்களும் ஒரே பூவில் காணப்படும்.
இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும்.
இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளை இருப்பிடமாகக் கொண்டதாகும்.
இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது.

பயிரிடுதல்
கடல்சார்ந்த பகுதிகளில் தான் அஸ்பாரகஸ் அதிகமாக வளரும் தன்மையுடையதாக இருக்கிறது.
ஏனெனில், அஸ்பாரகஸ் விளையும் நிலம் மிகவும் உப்பு நிறைந்ததாக இருக்கும்



சத்துக்கள்
இதில் கொழுப்புச் சத்து இல்லை, குறைந்த அளவில் கலோரி மற்றும் சோடியம் இருப்பதால் ஆரோக்கியமான உணவு என்றும் கூறலாம்.
போலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் உள்ளது.
இதனை வெள்ளைத் தங்கம் என்றும் அழைப்பர், வெள்ளை அஸ்பாரகசை விட பச்சை அஸ்பாரகசில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

மருத்துவ குணம்
அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், சிறுநீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது, நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை நடுநிலைப்படுத்துகிறது.
சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது, இதனுடைய நார் சத்து மலமிளக்கியாகவும் செயல்புரிகிறது.
அஸ்பாரகஸ், மனச்சோர்விலிருந்து பாதுகாப்பளித்து, மன நிலையை லேசாக்கக் கூடியது.
ஏனெனில் இதில் போலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவைகள் நிறைந்து காணப்படுகிறது.

இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டைனை, போலேட் மட்டுப்படுத்துகிறது என ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலேட் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், போலேட் குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால், உடலில் உள்ள கால்சியம் இழப்பு குறைக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மனிதனுக்கு வரும் ஒரு புது வகையானநோயை?



அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரைய்ன் ஃபெரி என்ற டாக்டர் மனிதனுக்கு வரும் ஒரு புது வகையான புற்றுநோயை கண்டு பிடித்துள்ளார்
 சில்வர் நைட்ரோ ஆக்ஸைடு என்ற வேதி பொருள் மூலம் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளார் 

 அந்த வேதி பொருள் ரீச்சார்ஜ்
 கார்டுகள் மீது தடைபடுகிறது நகங்கள் மூலம் சுரண்டுவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதாக அவர் கண்டுபிடித்துள்ளார் 

 எனவே நகங்கள் மூலம் சுரண்டாமல் நாணயம் ,பேனா மூடி போன்றவற்றால் சுரண்டினால் பாதுகாப்பாக இருக்கலாம்
 

செவ்வாய், 24 டிசம்பர், 2013

""பூப்புனித நீராட்டு விழா""

இந்தக் கட்டுரை பூப்புனித நீராட்டு விழா பற்றியது. பிற மஞ்சள் நீராட்டு பயன்பாட்டுக்கு, மஞ்சள் நீராட்டு என்பதைப் பார்க்கவும்.

பூப்புனித நீராட்டுவிழா என்பது, பெண் பால்முதிர்ச்சி அடைந்து முதல் மாதப்போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்துவரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள்

அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சில மக்கள் குழுக்களிடையே ஆண்களுக்கும் இத்தகைய சடங்குகள் நடத்தப்படுவதுண்டு. இச்சடங்குகளும் விழா முறைகளும் மதம், சாதி, வாழ்நிலை, வர்க்கம், இனம் சார்ந்தும் வேறுபடுகின்றன.
 

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவர் சில்மிஷம்

 இங்கிலாந்தில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட மருத்துவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள பி.எம்.ஐ எட்க்பாஸ்டன் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருபவர் அங்கமுத்து அருண்கலைவாணன்.
இங்கு கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம், பெண் ஒருவர் மார்பக பரிசோதனைக்காக வந்துள்ளார்.
அப்போது டாக்டர் அருண்கலைவாணன் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் குறித்த பெண் புகார் கூறினார்.

உடனே அருண்கலைவாணன் மன்னிப்பு கேட்டும், இந்திய மருத்துவர்களுக்கு இப்படித்தான் மார்பக பரிசோதனை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி சமாளிக்கப் பார்த்தது.
அதுபற்றி ஒரு நர்சிடம் அந்த பெண் நோயாளி கேட்டபோது, அது பொய் என்று தெரிய வந்தது.
இதனைதொடர்ந்து, இந்த விவகாரத்தை இங்கிலாந்து டாக்டர்கள் தீர்ப்பாயத்தில் அப்பெண் முறையிட்டார்.

தீர்ப்பாய விசாரணையில், அருண்கலைவாணன் தவறாக நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ தொழிலுக்கே அவமரியாதை ஏற்படுத்தி விட்டதாக கூறி, அருண்கலைவாணன் ஒரு வருடம் மருத்துவ தொழில் செய்ய தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
எனினும் அவரது சேவையை கருத்தில் கொண்டு, பெயரை மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கவில்லை.
 

வியாழன், 12 டிசம்பர், 2013

முகத்தில் உள்ள முடிகளை நீக்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்


பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடிகள்தான். 
சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.
குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும்.

ஆனால் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும்.

இயற்கையாக ஸ்கரப்கள் தயார் செய்வது எப்படி?
கடலை, மஞ்சள்தூள்:

இயற்கை அழகு குறிப்புகள்
கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து பசைபோல ஆக்கி, அதை முகத்தில் பூசவேண்டும். முடிகள் இருக்கும் இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்த்து நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து வாரம் இருமுறை செய்துவர முகத்தில் இருக்கும் அழுக்கு, முடிகள் நீங்கும். தேவையில்லாமல் முகத்தில் தோன்றும் முடிகளின் வளர்ச்சி குறைந்து நாளடைவில் அவைகள் நீங்கிவிடும்.

தேன், எலுமிச்சை:

தேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி இருபது நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பட்டுப்போன்ற சருமத்தைப் பெற்று ஜொலிக்கும்.
முட்டை, சர்க்கரை, சோளமாவு:

முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, அதில் சர்க்கரை, சோளமாவை கலந்து நன்றாக கலக்கி, உருவான கலவையை எடுத்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்... பளிச் ....

கடலை மாவு, தயிர், மஞ்சள்:

இம்மூன்றையும் கலந்து பசைபோல் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அதை இதமாக முகத்தில் நன்கு தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பசும்பால் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி, வெண்மைநிற துணியால் முகத்தை இதமாக துடைக்கவும். இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க.. நீங்களே வியந்துபோவீர்கள்..!!! இம்முறையை வாரம் இருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முகம் பால்போல் வெண்மையாக ஜொலிக்கும்.

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?


நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்


முகம் பொலிவு பெற
மூக்கு மற்றும் காது
கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்

 நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்