siruppiddy

சனி, 25 மே, 2013

பெயரை போட்டிக்கு பதிவு செய்த வினோத தாய்...

லண்டனில் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி ஆலிவர். 26 வயதான
கடந்த 2010–ம் ஆண்டு பிறந்த தனது முதல் மகள் ஜெஸ் என்பவளை இதுவரை 10 போட்டிகளில் கலந்து கொள்ள செய்து இருக்கிறார். வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் என்று அறிந்து அதற்கு எல்லி என்றும் பெயர் சூட்டி விட்டார்.
தற்போது வேடிக்கை என்னவென்றால், செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் கொழு கொழு குழந்தைகள் போட்டியில், 3 மாதம் கழித்து பிறக்க இருக்கும் இந்த குழந்தையும் கலந்து கொள்ளும் என்று ஜென்னியும், அவரது கணவர் ஸ்டீவும் இப்போதே பெயரை பதிவு செய்து வைத்து விட்டனர்.
ஜென்னியைப்போல் மேலும் பல கர்ப்பிணிகளும் பிறக்கப்போகும் தங்களது குழந்தைகளை இதுபோல் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும், அதற்காக இப்போதே பெயர்களை பதிவு செய்து வருவதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்
இவர் 2 குழந்தைகளின் தாய். தற்போது 7 மாத கர்ப்பிணி. அழகிப்போட்டி, குழந்தைகளுக்கான போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக