siruppiddy

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இலக்கியச்சந்திப்பில் நாம் எப்போது நாகரிகமடைவது?


இதுவரை காலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டும் நடைபெற்று வந்த இலக்கியச் சந்திப்பின் 41-வது மாநாடு முதன்முறையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த சனியும் ஞாயிறும் யாழ்ப்பாணம் அக்றேறியன் லேனில் உள்ள யூரோவில் மண்டபத்தில் இந்த இலக்கியச் சந்திப்பின் ஒவ்வொரு நாளும் சுமார் இருநூறு பேர்வரையில் வந்து கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து வந்திருந்த இலக்கிய ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் பண்பாடு, சாதியம், இலக்கியம், தேசிய இனங்கள்-பிரச்சினைகள் ஆகிய தலைப்புகளில் பல மணிநேர விவாதங்களை நடத்தியிருந்தனர். பல புதிய கருத்துக்களும் நெஞ்சைத் தொடும் அனுபவப்பகிர்வுகளும் ஒவ்வொரு அமர் விலும் வெளிப்பட்டன.

முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம் ஆகியவற்றின் முகிழ்ப்பின் பின்னுள்ள காரணிகள், சிங்களத் தேசியத்தின் எண்ணப்பாடுகள் குறித்த சிங்கள வளவாளர்களின் பகிர்வுகள், தமிழ்த் தேசியம் பற்றிய விசாரணை, சாதியம், பெண்களின் நிலை, வரலாற்று விடுபடல்கள், பண்பாட்டுருவாக்க நெருக்கடிகள் குறித்தெல்லாம் விரிவான பலதரப்பு விவாதங்கள் நடத்தப்பட்டன.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிலிருந்து இந்து ஆங்கில நாளிதழ், லண்டனிலிருந்து பிபிசி போன்றவை எல்லாம் இந்த இலக்கியச் சந்திப்பு பற்றி செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் தமிழ் ஊடகங்களில் இப்படி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்ததற்கான அடையாளத்தையே காணக்கிடைக்கவில்லை. அதிலும் யாழ்ப்பாண ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டது ஏன் என்று யோசித்தால்தான் எங்கள் பத்திரிகா தர்மங்கள் ஊடக நடுவுநிலைமை எல்லாம் ஓடிவெளிக்கின்றன. மற்றவர்களின் கதையை காதுகொடுத்துக் கேட்கவே விரும்பாத போக்கும், மற்றவர் கதியை நினைத்தே பார்க்க விரும்பாத தன்மோகமும் தான் எங்கள் சமூகத்தை இன்னும் வழிநடத்து வதாகத் தெரிகிறது.

ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பார்வைகளை ஏனைய பேச்சுக்களை சகித்துக்கொள்ளாமையும் அவற்றை மறைக்க முற்படுதலுமே நம் ஊடக அரசியல் கலாசாரமாக இருக்கிறது. நம்மைத் தவிர்ந்த மற்றவர்களை (மற்றவற்றை) நம்மைவிட மட்டமாக நினைப்பதும், இழித்து ஒதுக்குதலும் நமது மரபாயி ருந்துவரும் பழக்கங்களிலொன்று என்பது தெரிந்ததே. அது இவ்வளவு உலக மாற்றங்களுக்குப் பிறகும் இன்றும் தொடர்கிறது.

 வடக்கத்தியான், மோட்டுச் சீனா, தொப்பி பிரட்டி, காப்பிலி, பறங்கி, பாம்புதின்னி என்பவையெல்லாம் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை விளிப்பதற்காக நாம் ஏற்கனவே தமிழில் வைத்திருக்கும் வார்த்தைகள் என்பதில் அதிசயமென்ன? இதிலுள்ள பாசிஸ மனோநிலையை இன்னும் உணராதவர் களாகவே நம்மில் பலர் இன்றும் இதே பாணியில்

பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அதையே தமிழ்ப் பெருமையாகவும் எண்ணிக்கொள்ளும் கடந்த காலத்தவர்களாக மாறாமனிதர்களாய் இன்னுமிருக்கிறோம்.

ஒருபடி மேலே போய், அந்த சமூகங்கள் நாம் நினைத்தமாதிரி நடக்கவில்லை என்றால், மிரட்டுவதும் சாபமிடுவதும் குதிப்பது மாக மிகக் கேலிக்கிடமாகவும் நடந்துகொள்கிறோம். நம்மை நாமே உயர்வாய் நினைத்துக்கொண்டு பிறரை விலக்குதல் மிரட் டுதல் ஒழித்துவிடுதல் என்ற எண்ணப்பாங்கிலேயே இன்னமும் நமது ஊடகங்களும் ஆதிக்க அரசியலாளர்களும் செயற்பட்டு வரு வதை அவதானிக்க முடிகிறது.

இங்கு பலர் இப்போதும் இனவாதத்தன்மை மாறாமலேயே சிந்திக்கிறார்கள்; எழுதுகிறார்கள். அதிலுள்ள அறக்கீழ்மை பற்றிய புரிதலும் குற்றவுணர்வும் கூட இல்லை. ம்… எப்போது நாகரிகம டைந்த மனித சமுதாயங்களில் ஒன்று என நாமும் ஆகப்போகி றோம்?
 

கொச்சினுக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது


  சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் கொச்சினுக்கு தங்கம் கடத்திச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று காலை  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தின் மொத்தப் பெறுமதி 27 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆணொருவரும், 46 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆண் 350 கிராம் நிறைகொண்ட இரண்டு தங்க பிஸ்கட்டுக்களை மலவாயில் வைத்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

மேலும் அவருடன் வந்த பெண் 200 கிராம் நிறைகொண்ட தங்கத்தினால் செய்யப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசுகளை கால்களில் அணிந்து கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

இவர்கள் இருவரும் இன்று காலை 7 மணியளவில் இந்தியாவின் கொச்சின் நோக்கி செல்லும்  ஸ்ரீலங்கன் எயார் யு.எல் 165 விமானத்தில் பயணிக்கும் பொருட்டு விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.
எனினும் இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது தங்கம் கடத்திச் செல்லவிருந்தமை தெரியவந்துள்ளது.

பின்னர் இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திங்கள், 9 செப்டம்பர், 2013

மண்ணுக்கான மோதலில் தம்பியின் தாக்குதலில் அண்ணன் மரணம்

 
பொலன்நறுவை காலிங்க எல பிரதேசத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல் அறுவடை தொடர்பில் இச் சகோதரர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினை மூண்டுள்ளது.

இதன்போது தம்பியின் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் உயிரிழந்துள்ளார்.
அண்ணனுக்கு சொந்தமான வயலை தம்பிக்கு வழங்குவதாக குறிப்பிட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படாமையின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (08) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலன்நறுவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

குடிகாரர்களின் சாகசக் காட்சி..கொடூர விபத்தில் முடிந்தது..


பிரான்ஸின் வடக்கு பகுதியிலுள்ள பிரிட்டானியில் கார் சாகசம் மேற்கொள்ள முனைந்த போது 64 கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.

சுமார் 1500 பார்வையாளர்கள் கூடியிருந்த போது இந்த சாகசக்காட்சியை காண்பிக்க முனைந்தவர்கள் மதுபோதையில் இருந்தமையினாலேயே இக்கொடூர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் நேரடிச் சாட்டிகளின் அடிப்படையாகக் கொண்டு 32 மற்றும் 37 வயதை உடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு 2 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்{காணொளி}

 


வியாழன், 5 செப்டம்பர், 2013

நம் கல்லுாரி வாழ்க்கை.மீண்டும்வராது.!!!

சலனத்துடனும் சஞ்சலத்துடனும்
 கால் எடுத்து வைத்த நொடிகள்
 சத்தத்தின் உச்சத்தோடு
 பல பல புது முகங்கள்...!
பயத்துடனும் ப்ரியத்துடனும்
 பயணம்போல் தொடர்ந்து சென்று
'ஹாய்' என்ற வார்த்தையுடன்
 ஒரு சிறு புன்னகைகள்...!
வகுப்பறைக்குள் நுழைந்தவுடன்
 கதிரை மேசை தேடிச்சென்று
 பல்கனியில் பலர் நாம்
 கூடிப்படித்த நினைவலைகள்...!
பாசமாய் சில உறவு
 அன்போடு சில உறவு
 காதலுக்கும் குறைவில்லை
 கைகள் சில சேரவில்லை...!
கண்டிப்புடன் தண்டிக்காது
 கவலை தீர புத்தி சொல்லி
 கரைசேர்த்த காலங்கள் போய்
 கண்ணீருடன் சில துளிகள்...!
கலகலப்பாய் கைகோர்த்து
 பல பாசல் கைவைத்து
 அரை நிமிடம் உணவு உண்டு
 அதிக கதை கதைத்த நேரம்...!
கைபிடித்து மைதானத்தின்
 நடுவினிலே சுற்றித் திரிந்து
 சிரிப்புடனும் சண்டையுடனும்
 சினுங்கிய சில காலம்...!
அதிபரை கண்டவுடன்
 ஜந்து நிமிடம் அமைதியுடன்
 அடக்கமாய் இருந்துவிட்டு
 பிளைத்துக்கொண்ட சிறு நிமிடம்...!
ஆசையாய் பெயர்கள் தனை
 சுவரிலும் வாங்கிலுமாய்
 செதுக்கி உரிமையாக்கி
 மகிழ்ந்திட்ட சில நொடிகள்...!
சொந்தம் போல் நண்பர்கள் நாம்
 கைபிடித்து சுற்றி வந்து
 கவி வரைந்து நக்கலடித்து
 கழித்திட்ட சில பொழுது...!
கடிகார முள்பார்த்து
 பாடங்கள் தனை போக்கி
 இடைவேளைக்கு காத்திருக்கும்
 இனிய சில அரை மணி நேரம்...!
ஆங்கிலப் புத்தகத்தின்
 பக்கங்கள் சில பறித்தே
 றொக்கற் எய்திடவே
 முறைத்திட்ட சில காலம்...!
நிகழ்ச்சிகள் விழாக்கள் என
 ஓடி ஆடி போட்டி போட்டு
 புதிய சில ஆக்கங்கள்
 படைத்திட்ட சில நாட்கள்...!
சண்டையிட்டு மௌணமாகி
 கண்ணீரால் மேசை கழுவி
 ஊமைகளாய் போய்விட்ட
 பலனற்ற சில நிமிடம்...!
கதிரைகள் பல சேர்த்து
 பலர் கூடி இனைந்திருந்து
 பலர் கதை கதைத்திட்ட
 கலகலப்பான சில நாட்கள்...!
திசைமாறி சில பாடம்
 சிரிப்பின்றி புரிந்திட்டு
 சிதறடித்த சில பொழுதின்
 கசப்பான சில நாட்கள்...!
கடைசி வரை மாறாது
 கனிவுடனே பேசிக்கொண்டு
 கலகலப்பாய் எப்பொழுதும்
 கைகோர்த்த சில நாட்கள்...!
பிரிந்திட்ட சில நாளில்
 அதிஸ்ரமின்றி கண்ணீருடன்
 பிரியாவிடை தந்திடாத - நம்
 கல்லுாரி சொந்தங்கள்...!
இத்தனையும் தந்திட்ட
 கல்லுாரி வாழ்வு தனில்
 அர்த்தமின்றி நாம் வரைந்த
 சில நொடிப் பாடங்கள்...!
புகைப்படத்தின் நினைவு ழூலம்
 சிரித்திட்ட சில முகங்கள்
 புகைப்படத்தில் தவறிய - அரிய
 சில நல் முகங்கள்...!
அத்தனையும் நிறைந்த அந்த
 இரண்டரை மணி நேரம்
 வாழ்வாக அமைந்திட்ட - நம்
 ஆயுட்கால வாழ்க்கை...!
இத்தனையும் அனுபவித்த - நம்
 கல்லுாரி வாழ்வு தான்
 எக்காலம் சென்றாலும்
 மறவாத நம் இன்பம்...!
எத்தனை பிறவியிலும்
 இத்தனை இன்பம் காண
 கல்லுாரி வாழ்வொன்று
 காணோமா இனியும் நாம்...!
நினைவோரக் கனவுகளாய்
 நம் கல்லுாரிச் சொந்தங்கள்
 மொத்தத்தில் இனியாவும்
 வராது மீண்டும் வாழ்வில்.......!





செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ராணி பயன்படுத்திய கார் ஏலத்தில் விற்பனை,,

,   
இரண்டாம் எலிசபெத் ராணி உபயோகித்த லிமோசின் சொகுசுக் கார் சர்ரே நகரில் இயங்கிவரும் புரூக்லேண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை உபயோகித்த கார் ஒன்றே ஏலத்தில் விடப்பட்டது.

அந்த காரை 40,500 பவுன்ஸ்கள் கொடுத்து ஒரு பணக்கார தொழிலதிபர் வாங்கியுள்ளார். அவரது பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் எண் Y694 CDU ஆகும்.
இதுவரை 11,000 மைல்கள் மட்டுமே ஓடிய அந்த கார் 2001 Daimler Super V8 LWB வகையை சேர்ந்தது.

இந்த காரில் இருந்துகொண்டே ராணி உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு தேவையான தகவல்களை கேட்டுக்கொள்ளும் வசதி இருந்தது. தற்போது இந்த கார் விற்பனை செய்யப்பட்டதால் அந்த வசதியை மட்டும் அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

இந்த காரை பெரும்பாலும் ராணியே ஓட்டி வந்துள்ளார். டிரைவர் யாரையும் அவர் இந்த காரில் அனுமதிக்கவில்லை.
ராணி உபயோகித்த இந்தக் காரில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் காரின் சீட்டுகளுக்கு நடுவில் ராணியின் கைப்பையை வைப்பதற்காகவே நடுவில் இருந்த கைப்பகுதியில் சிறப்பு அமைப்பு ஒன்றும் இருந்தது.

ராணி அரண்மனையை நெருங்கும்போது, அவரது வருகையை அறிவிக்கும்விதமாக பின்புற பார்வைக் கண்ணாடி அருகில் நீல நிற நியான் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

நான்கு லிட்டர் என்ஜினுடன் கூடிய இந்தக் கார் நல்ல நிலையில் பூர்வீக ரெஜிஸ்ட்ரேஷன் நம்பருடனும், அசலான பத்திரங்களுடனும், ராணி அந்தக் காரை ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படத்துடனும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில் விற்கப்பட்டுள்ளது
(காணொளி இணைப்பு)  

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

:அழகிப் போட்டிஉயரம் குறைவானவர்களுக்கான ! :


உயரம் குறைவானவர்களுக்கான அழகிப் போட்டி : சென்னை நடைபெறுகிறது
சென்னை, ஆகஸ்ட் 31 (டி.என்.எஸ்) நாகரிக உலகில் புதுமையாகவும் புரட்சிகரமாகவும் ஒரு போட்டியை நடத்தும் நோக்கத்தில், ஒளியும் ஒலியும் பொழுது போக்கு நிறுவனம் சென்னையில் 'என்.ஏ.சி இளம் இளவரசி' என்ற போட்டியை நடத்த உள்ளது.
இந்த போட்டியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த போட்டியில் உயரம் குறைவானவர்களே கலந்து கொள்ள முடியும். இந்த போட்டியில் பங்கு கொள்ள பெண்களின் உயரம்  5.7 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். அழகி போட்டியில் வெல்ல உயரம் ஒரு தடையல்ல.
தகுதி சுற்று போட்டிகள் மூலம் 12 இறுதி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் முதல் சுற்று போட்டியில் நடுவர்களாக பேஷன் டிசைனர் சிட்னி ஷெல்டன், மாடல் அழகி ப்ரதாயினி சர்வோத்தம் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
பெண்களின் பல்வேறு திறன்களை வெளிபடுத்த வாய்பளிக்கும் விதமாக இப்போட்டி அமையும், இறுதி போட்டியாளர்கள் அழகு, உடல் திறன் யோகா, தற்காப்பு, நடிப்பு மற்றும் ஆளுமை திறன் போன்ற பல திறமை கலை அடிப்படையாக கொண்டு இறுதி போட்டிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் பெண்களை இறுதி போட்டிக்கு தயார் படுத்துவார்கள்
இறுதி போட்டியில் பிரபலங்கள் திரைப்பட கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். ஸ்டார் விஜய் டிவி யில் ஒளிபரப்பப்படும். போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 'என்.ஏ.சி  அழகி' என்ற பட்டம் வழங்கப்படும்