siruppiddy

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஆசாராமின் ஆசிமத்திற்குள் கருக்கலைப்பு மையம்!


 
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம் செயல்பட்டுவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆசாராம் பாபு மீது தொடர்ந்து பல பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்களை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், ஆசாராமின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக குஜராத் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் கூறுகையில், நான் ஆசாராமின் ஆசிரமத்தில் 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தங்கியிருந்தேன்.

என்னை ஆசாராம் 2001ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார், அதிலிருந்து என்னை அடிக்கடி உடல் ரீதியாக துன்புறுத்திவந்தார்.
மேலும் அவரின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் இருந்தது. ஆசாராமல் கர்ப்பமாகும் பெண்களுக்கு அங்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்படும் என்றும் இதனை ஆசிரமத்தின் மேற்பார்வையாளரான துருவ்பெண் கவனித்துக்கொள்வார் எனவும் கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக